Category: புஹாரி

Bukhari

Bukhari-2947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103 புனிதப் போருக்குச் செல்ல நாடி வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்.
2947. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்.
‘தபூக் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்’ என்று கஅப்(ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்துவிட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த- அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்.
Book : 56


سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ «حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدُ غَزْوَةً إِلَّا وَرَّى بِغَيْرِهَا»


Bukhari-2946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2946. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று கூறுகிற (நிலை ஏற்படும்) வரை மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ‘வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று கூறுகிறவர் தன் உயிரையும், உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார். நியாயமான காரணம் இருந்தாலே தவிர.

அவரிடம் (அவரின் மற்ற செயல்களுக்குக்) கணக்கு வாங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே நபிமொழியை உமர்(ரலி) அவர்களும் இப்னு உமர்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.
Book :56


أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ ” رَوَاهُ عُمَرُ، وَابْنُ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2945

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2945. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரை அவர்களின் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். .. அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

நபி(ஸல்) அவர்களை அவர்கள் பார்த்தபோது, ‘முஹம்மதும் (அவரின்) படையும் (வந்துள்ளனர்)’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்’ என்று கூறினார்கள்.
Book :56


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى خَيْبَرَ، فَجَاءَهَا لَيْلًا، وَكَانَ إِذَا جَاءَ قَوْمًا بِلَيْلٍ لاَ يُغِيرُ عَلَيْهِمْ حَتَّى يُصْبِحَ، فَلَمَّا أَصْبَحَ خَرَجَتْ يَهُودُ بِمَسَاحِيهِمْ وَمَكَاتِلِهِمْ، فَلَمَّا رَأَوْهُ قَالُوا: مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالخَمِيسُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ، فَسَاءَ صَبَاحُ المُنْذَرِينَ»


Bukhari-2944

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2944. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் புனிதப் போர் புரியச் சென்றால்… (என்று தொடங்கும் ஹதீஸ்86)
Book :56


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا غَزَا بِنَا


Bukhari-2943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2943. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள்.

பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.
Book :56


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا غَزَا قَوْمًا لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ، فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ بَعْدَ مَا يُصْبِحُ، فَنَزَلْنَا خَيْبَرَ لَيْلًا»


Bukhari-2942

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2942. ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, ‘அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்’ என்று கூறக் கேட்டேன். உடனே, நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி(ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீ எங்கே?’ என்று கேட்டார்கள். ‘அவருக்குக் கண்வலி’ என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது.

உடனே, அலீ (ரலி), ‘நம்மைப் போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக!

سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ»، فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى، فَقَالَ: «أَيْنَ عَلِيٌّ؟»، فَقِيلَ: يَشْتَكِي عَيْنَيْهِ، فَأَمَرَ، فَدُعِيَ لَهُ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ، فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ، فَقَالَ: نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ فَقَالَ: «عَلَى رِسْلِكَ، حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ»


Bukhari-2941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2941. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அபூஸுஃப்யான் இப்னு ஹர்ப் (ரலி) எனக்குப் பின்வருமாறு அறிவித்தார்கள்.

இறைத்தூதர்( ஸல்) அவர்களுக்கும் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த) கால கட்டத்தில் வியாபாரிகளாக வந்த குறைஷிகளில் சிலரிடையே நானும் ஷாம் நாட்டில் இருந்தேன். சீசருடைய தூதர் எங்களை ஷாமின் ஒரு பகுதியில் கண்டார். என்னையும் என் தோழர்களையும் அழைத்துச் சென்றார். நாங்கள் (அனைவரும்) ஈலியாவை அடைந்தோம். நாங்கள் சீசரிடம் கொண்டு செல்லப்பட்டோம்.

அவர் தன் அரசவையில் கிரீடம் அணிந்தவராய் அமர்ந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றிலும் ரோம நாட்டு ஆட்சியாளர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். தன் மொழி பெயர்ப்பாளரிடம் சீசர், ‘தன்னை இறைத்தூதர் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்கு இவர்களில் நெருங்கிய உறவினர் யார்’ என்று நீ அவர்களிடம் கேள்’ என்று கூறினார். (அவ்வாறே அவர் கேட்டபோது,) நான், ‘இவர்களில் அவருக்கு நானே நெருங்கிய உறவினன்’ என்று சொன்னேன்.

உடனே அவர், ‘உமக்கும் அவருக்குமிடையில் என்ன உறவு?’ என்று கேட்டார். நான், ‘அவர் என் தந்தையின் சகோதரர் மகன்’ என்று கூறினேன். அந்த நேரத்தில் (எங்கள்) பயணக் குழுவில் (நபியவர்களின் முப்பாட்டனார்) அப்து மனாஃபின்

قَالَ ابْنُ عَبَّاسٍ فَأَخْبَرَنِي أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ أَنَّهُ كَانَ بِالشَّأْمِ فِي رِجَالٍ مِنْ قُرَيْشٍ قَدِمُوا تِجَارًا فِي المُدَّةِ الَّتِي كَانَتْ بَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ كُفَّارِ قُرَيْشٍ، قَالَ أَبُو سُفْيَانَ، فَوَجَدَنَا رَسُولُ قَيْصَرَ بِبَعْضِ الشَّأْمِ، فَانْطُلِقَ بِي وَبِأَصْحَابِي، حَتَّى قَدِمْنَا إِيلِيَاءَ، فَأُدْخِلْنَا عَلَيْهِ، فَإِذَا هُوَ جَالِسٌ فِي مَجْلِسِ مُلْكِهِ، وَعَلَيْهِ التَّاجُ، وَإِذَا حَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ،

فَقَالَ لِتَرْجُمَانِهِ: سَلْهُمْ أَيُّهُمْ أَقْرَبُ نَسَبًا إِلَى هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، قَالَ أَبُو سُفْيَانَ: فَقُلْتُ : أَنَا أَقْرَبُهُمْ إِلَيْهِ نَسَبًا، قَالَ: مَا قَرَابَةُ مَا بَيْنَكَ وَبَيْنَهُ؟ فَقُلْتُ: هُوَ ابْنُ عَمِّي، وَلَيْسَ فِي الرَّكْبِ يَوْمَئِذٍ أَحَدٌ مِنْ بَنِي عَبْدِ مَنَافٍ غَيْرِي، فَقَالَ قَيْصَرُ: أَدْنُوهُ، وَأَمَرَ بِأَصْحَابِي، فَجُعِلُوا خَلْفَ ظَهْرِي عِنْدَ كَتِفِي، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لِأَصْحَابِهِ: إِنِّي سَائِلٌ هَذَا الرَّجُلَ عَنِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَإِنْ كَذَبَ فَكَذِّبُوهُ،

قَالَ أَبُو سُفْيَانَ: وَاللَّهِ لَوْلاَ الحَيَاءُ يَوْمَئِذٍ، مِنْ أَنْ يَأْثُرَ أَصْحَابِي عَنِّي الكَذِبَ، لَكَذَبْتُهُ حِينَ سَأَلَنِي عَنْهُ، وَلَكِنِّي اسْتَحْيَيْتُ أَنْ يَأْثُرُوا الكَذِبَ عَنِّي، فَصَدَقْتُهُ، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لَهُ كَيْفَ نَسَبُ هَذَا الرَّجُلِ فِيكُمْ؟ قُلْتُ: هُوَ فِينَا ذُو نَسَبٍ، قَالَ: فَهَلْ قَالَ هَذَا القَوْلَ أَحَدٌ مِنْكُمْ قَبْلَهُ؟ قُلْتُ: لاَ، فَقَالَ: كُنْتُمْ تَتَّهِمُونَهُ عَلَى الكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ؟ قُلْتُ: بَلْ ضُعَفَاؤُهُمْ، قَالَ: فَيَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ؟ قُلْتُ: بَلْ يَزِيدُونَ، قَالَ: فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَهَلْ يَغْدِرُ؟ قُلْتُ: لاَ، وَنَحْنُ الآنَ مِنْهُ فِي مُدَّةٍ، نَحْنُ نَخَافُ أَنْ يَغْدِرَ، – قَالَ أَبُو سُفْيَانَ: وَلَمْ يُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا أَنْتَقِصُهُ بِهِ، لاَ أَخَافُ أَنْ تُؤْثَرَ عَنِّي غَيْرُهَا -، قَالَ: فَهَلْ قَاتَلْتُمُوهُ أَوْ قَاتَلَكُمْ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَكَيْفَ كَانَتْ حَرْبُهُ وَحَرْبُكُمْ؟ قُلْتُ: كَانَتْ دُوَلًا وَسِجَالًا، يُدَالُ عَلَيْنَا المَرَّةَ، وَنُدَالُ عَلَيْهِ الأُخْرَى،

قَالَ: فَمَاذَا يَأْمُرُكُمْ بِهِ؟ قَالَ: يَأْمُرُنَا أَنْ نَعْبُدَ اللَّهَ وَحْدَهُ لاَ نُشْرِكُ بِهِ شَيْئًا، وَيَنْهَانَا عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا، وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ، وَالصَّدَقَةِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ، فَقَالَ لِتَرْجُمَانِهِ حِينَ قُلْتُ ذَلِكَ لَهُ: قُلْ لَهُ: إِنِّي سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فِيكُمْ، فَزَعَمْتَ أَنَّهُ ذُو نَسَبٍ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا، وَسَأَلْتُكَ: هَلْ قَالَ


Bukhari-2940

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 102 இஸ்லாத்தையும் நபித்துவத்தையும் ஏற்கும்படியும், அல்லாஹ்வை விடுத்து சிலர், சிலரை தெய்வங்களாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் படியும் மக்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது.

அல்லாஹ் கூறுகிறான்:

ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும் தூதுத்துவத்தையும் ஞானத்தையும் அளித்திருக்க, அவற்றைப் பெற்ற பின்பு, நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னையே வணங்குவோராகி விடுங்கள் என்று மக்களிடம் கூற அவருக்கு அனுமதியில்லை. மாறாக, நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டும் அதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்த காரணத்தால் இறைவனையே சார்ந்து வாழ்வோராக ஆகிவிடுங்கள் என்றே அவர் கூறுவார். (3:79)

2940. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரோம சக்கரவர்த்தி சீசருக்கு இஸ்லாத்திற்கு வரும்படி அழைப்புக் கொடுத்து கடிதம் எழுதினார்கள். திஹ்யா அல் கல்பீ என்னும் நபித் தோழரிடம் தம் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். ரோம சக்கரவர்த்தி சீசரிடம் கொடுப்பதற்காக புஸ்ராவின் அரசனிடம் அதைக் கொடுத்து விடும்படி அத் தோழருக்கு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாரசீகப் படைகளின் மீது அல்லாஹ் சீசருக்கு வெற்றியை அளித்தபோது, அவர் ‘ஹிம்ஸ்’ பகுதியிலிருந்து ஈலியாவை (புனித நகரமான

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَتَبَ إِلَى قَيْصَرَ يَدْعُوهُ إِلَى الإِسْلاَمِ، وَبَعَثَ بِكِتَابِهِ إِلَيْهِ مَعَ دِحْيَةَ الكَلْبِيِّ، وَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ بُصْرَى لِيَدْفَعَهُ إِلَى قَيْصَرَ، وَكَانَ قَيْصَرُ لَمَّا كَشَفَ اللَّهُ عَنْهُ جُنُودَ فَارِسَ، مَشَى مِنْ حِمْصَ إِلَى إِيلِيَاءَ شُكْرًا لِمَا أَبْلاَهُ اللَّهُ، فَلَمَّا جَاءَ قَيْصَرَ كِتَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ حِينَ قَرَأَهُ: التَمِسُوا لِي هَا هُنَا أَحَدًا مِنْ قَوْمِهِ، لِأَسْأَلَهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2939

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2939. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கடிதத்தை பாரசீக மன்னர் குஸ்ரூவுக்கு (அப்துல்லாஹ் இப்னு ஹுதஃபா அஸ் ஸஹ்மீ(ரலி) வாயிலாக) அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனுடைய ஆட்சியாளரிடம் கொடுத்து, அதை அவர் குஸ்ரூவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் படி (அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா(ரலி) அவர்களுக்கு) உத்தரவிட்டார்கள்.

(அவ்வாறே அவர் அதைக் கொண்டு சென்று ஒப்படைக்க,) அதைப் பாரசீக மன்னன் குஸ்ரூ படித்தபோது, (கோபப்பட்டு) அதைக் கிழித்துவிட்டான்.
(எனவே,) ‘அவர்கள் துண்டு துண்டாக்கப்பட வேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்’ என்று ஸயீத் இப்னு முஹய்யப்(ரஹ்) கூறினார்கள் என எண்ணுகிறேன்’ என்று அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
Book :56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى، فَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ البَحْرَيْنِ، يَدْفَعُهُ عَظِيمُ البَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ كِسْرَى حَرَّقَهُ، – فَحَسِبْتُ أَنَّ سَعِيدَ بْنَ المُسَيِّبِ قَالَ -: فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ»


Bukhari-2938

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு கிடைக்கும் பங்கு.

2938. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்கு (அழைப்புக்) கடிதம் எழுத விரும்பிய பொழுது, ‘அவர்கள் (அரசின்) முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் படிக்கமாட்டார்கள்’ என்று கூறப்பட்டது.

எனவே, நபி(ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் (இலச்சினை) ஒன்றைத் தயாரித்தார்கள். (இப்போதும்) நான் அவர்களின் கரத்தில் அதன் வெண்மையைப் பார்ப்பது போன்றுள்ளது… அதில், ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ ‘இறைத்தூதர் முஹம்மது’ என்று நபி(ஸல்) அவர்கள் பொறித்திருந்தார்கள்.
Book : 56


لَمَّا أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ، قِيلَ لَهُ: إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلَّا أَنْ يَكُونَ مَخْتُومًا، «فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»


Next Page » « Previous Page