Category: புஹாரி

Bukhari

Bukhari-2937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 100 இணைவைப்பவர்களின் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காக அவர்களுக்கு நேர்வழி கிடைக்கப் பிரார்த்திப்பது.

2937. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ(ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) ‘தவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, ‘தவ்ஸ் குலத்தார் அழியட்டும்’ என்று கூறப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 56


قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ، عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ، فَادْعُ اللَّهَ عَلَيْهَا، فَقِيلَ: هَلَكَتْ دَوْسٌ، قَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ»


Bukhari-2936

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 99 ஒரு முஸ்லிம், வேதக்காரர்களை இஸ்லாத்திற்கு அழைப்பதோ, திருக்குர் ஆனை அவர்களுக்குக் கற்றுத் தருவதோ செல்லுமா?

2936. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ரோமாபுரியின் சக்கரவர்த்தி) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) ‘நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல் போவதின்) பாவம் உம்மைச் சேரும்’ என்று கூறியிருந்தார்கள்.
Book : 56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى قَيْصَرَ وَقَالَ: «فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ»


Bukhari-2935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2935. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

யூதர்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘அஸ்ஸாமு அலைக்க’ (‘உங்களின் மீது மரணம் உண்டாகட்டும்’) என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)’ என்று கேட்டார்கள்.

நான், ‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘நான் (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், ‘வ அலைக்கும் – (உங்களின் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)’ என்று கூறியதை நீ கேட்கவில்லையா?’ என்றார்கள்.
Book :56


أَنَّ اليَهُودَ، دَخَلُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: السَّامُ عَلَيْكَ، فَلَعَنْتُهُمْ، فَقَالَ: «مَا لَكِ» قُلْتُ: أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ: «فَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ وَعَلَيْكُمْ»


Bukhari-2934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2934. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள்.

பின்னர், அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி(ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். ஹாஷிமின் மகன் அபூ ஜஹ்லையும் உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உபை இப்னு கலஃப் மற்றும் உக்பா இப்னு அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு)’ என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங் கிணற்றில் கொல்லப்பட்டவர்களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன்.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் கேடு நேரப் பிரார்த்தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்’ என்று கூறுகிறார்கள்.

அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில்,

‘அறிவிப்பாளர்களில்

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ظِلِّ الكَعْبَةِ، فَقَالَ أَبُو جَهْلٍ: وَنَاسٌ مِنْ قُرَيْشٍ، وَنُحِرَتْ جَزُورٌ بِنَاحِيَةِ مَكَّةَ، فَأَرْسَلُوا فَجَاءُوا مِنْ سَلاَهَا وَطَرَحُوهُ عَلَيْهِ، فَجَاءَتْ فَاطِمَةُ، فَأَلْقَتْهُ عَنْهُ، فَقَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ» لِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُبَيِّ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، قَالَ عَبْدُ اللَّهِ: فَلَقَدْ رَأَيْتُهُمْ فِي قَلِيبِ بَدْرٍ قَتْلَى، قَالَ أَبُو إِسْحَاقَ وَنَسِيتُ السَّابِعَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ يُوسُفُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ: أُمَيَّةُ بْنُ خَلَفٍ، وَقَالَ شُعْبَةُ: أُمَيَّةُ أَوْ أُبَيٌّ «وَالصَّحِيحُ أُمَيَّةُ»


Bukhari-2933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2933. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அகழ்ப்போரின்போது இணை வைப்பவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, ‘இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே!

இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!’ என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.
Book :56


دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الأَحْزَابِ عَلَى المُشْرِكِينَ، فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اللَّهُمَّ اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»


Bukhari-2932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2932. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஸுப்ஹுத் தொழுகையில்) குனூத் ஓதும்போது, ‘இறைவா! ஸலமா இப்னு ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!

இறைவா! உன் (தண்டனைப்) பிடிகளை முளர் குலத்தாரின் மீது (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக!’ யூசுஃப்(அலை) அவர்களின் காலத்து (எகிப்திய மக்களுக்கு அளித்த) கொடிய பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் சில ஆண்டுகளை (தண்டனையாக) அளிப்பாயாக!’ என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.
Book :56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو فِي القُنُوتِ «اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ سِنِينَ كَسِنِيِّ يُوسُفَ»


Bukhari-2931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 98

இணைவைப்போருக்குத் தோல்வியும், நில நடுக்கமும் ஏற்படும்படி அவர்களுக்கெதிராகப் பிரார்த்திப்பது.

2931. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும், புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 56


لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلاَةِ  الوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ»


Bukhari-2930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97 தோல்வியின் போது தன் தோழர்களை அணிவகுத்து நிற்கச் செய்து, தன் வாகனத்திலிருந்து இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோருவது.

2930. அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

பராஉ (ரலி) அவர்களிடம் ஒருமனிதர் அபூ உமாராவே! நீஙகள் ஹுனைன் போரின் போது பின்வாங்கி ஓடினீர்களா என்று கேட்க, அதற்கு அவர்கள், இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை.

ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுத பலம் இல்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுத பாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்துச் சென்றனர். அவர்களுடைய எந்த அம்பும் இலக்குத் தவறி விழுவதில்லை. அவர்கள் குறித் தவறாமல் அம்புகளை எய்தார்கள்.

ஆகவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கி சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூசுஃப்யான் பின் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஒட்டிக் கொண்டு வர அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

(செய்தி அறிந்ததும் அதை விட்டு,) இறங்கி அல்லாஹ்விடம் உதவிக் கோரி பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் இறைத்தூதர் தான் இது பொய் அல்ல. நான்

سَمِعْتُ البَرَاءَ، وَسَأَلَهُ رَجُلٌ أَكُنْتُمْ فَرَرْتُمْ يَا أَبَا عُمَارَةَ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ: لاَ وَاللَّهِ، مَا وَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ، وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ بِسِلاَحٍ، فَأَتَوْا قَوْمًا رُمَاةً، جَمْعَ هَوَازِنَ، وَبَنِي نَصْرٍ، مَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ، فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ، فَأَقْبَلُوا هُنَالِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى بَغْلَتِهِ البَيْضَاءِ، وَابْنُ عَمِّهِ أَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ يَقُودُ بِهِ، فَنَزَلَ وَاسْتَنْصَرَ، ثُمَّ قَالَ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»، ثُمَّ صَفَّ أَصْحَابَهُ


Bukhari-2929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96 முடியாலான செருப்பை அணிபவர்களுடன் போர் புரிவது.

2929. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முடியாலான செருப்புகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடாத வரை இறுதி நாள் ஏற்படாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றொரு வழியாக அறிவிக்கப்படுகிற ஓர் அறிவிப்பில், (‘தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன்’ என்னும் வாசகத்திற்கு முன்னால்).. ‘சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட’ என்னும் சொற்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன.                                                                                Book : 56


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»، قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً: «صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمْ، المَجَانُّ المُطْرَقَةُ»


Bukhari-2928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2928. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :56


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ، صِغَارَ الأَعْيُنِ، حُمْرَ الوُجُوهِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ»


Next Page » « Previous Page