Category: புஹாரி

Bukhari

Bukhari-2927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95 துருக்கியர்களுடன் போர் புரிதல்.

2927. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முடியாலான செருப்புகளை அணிகிற ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுவது, இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுதல் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். என அம்ர் இப்னு தக்லிப்(ரலி) அறிவித்தார்.
Book : 56


«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا يَنْتَعِلُونَ نِعَالَ الشَّعَرِ، وَإِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ تُقَاتِلُوا قَوْمًا عِرَاضَ الوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»


Bukhari-2926

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2926. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்ச

நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு’ என்று கூறும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்:56


لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الحَجَرُ وَرَاءَهُ اليَهُودِيُّ: يَا مُسْلِمُ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ


Bukhari-2925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 94

யூதர்களுடன் போரிடுதல்.

2925. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், ‘அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனைக் கொன்று விடு’ என்று கூறும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 56


تُقَاتِلُونَ اليَهُودَ، حَتَّى يَخْتَبِيَ أَحَدُهُمْ وَرَاءَ الحَجَرِ، فَيَقُولُ: يَا عَبْدَ اللَّهِ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي، فَاقْتُلْهُ


Bukhari-2924

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 93 ரோமர்களுடன் போரிடுதல் பற்றி……

2924. உமைர் இப்னு அஸ்வத் அல் அன்ஸீ(ரஹ்) அறிவித்தார்.

உபாதா இப்னு ஸாமித்(ரலி) ‘ஹிம்ஸ்’ கடற்கரையில் தம் கட்டிடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம்(ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம்(ரலி) எம்மிடம் அறிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்தினார்கள்’ என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவர்களில் ஒருத்தியா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்று கூறினார்கள். ‘அவர்களில் நானும் ஒருத்தியா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


أَنَّهُ أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهُوَ نَازِلٌ فِي سَاحَةِ حِمْصَ وَهُوَ فِي بِنَاءٍ لَهُ، وَمَعَهُ أُمُّ حَرَامٍ – قَالَ: عُمَيْرٌ، فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ: أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ البَحْرَ قَدْ أَوْجَبُوا»، قَالَتْ أُمُّ حَرَامٍ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ؟ قَالَ: «أَنْتِ فِيهِمْ»، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ»، فَقُلْتُ: أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لاَ»


Bukhari-2923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 92 கத்தியைப் பயன்படுத்துதல்.

2923. அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.

(ஆட்டின்) ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) துண்டு போட்டு உண்பவர்களாக நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். பிறகு, தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் அவர்கள் தொழுதார்கள். (ஆனால், புதிதாக) உளூச் செய்யவில்லை.

மற்றோர் அறிவிப்பில், ‘தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் கத்தியைக் கீழே போட்டுவிட்டார்கள்’ என்று அதிகப்படியாக வந்துள்ளது.
Book : 56


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْ كَتِفٍ يَحْتَزُّ مِنْهَا، ثُمَّ دُعِيَ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»،

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، وَزَادَ فَأَلْقَى السِّكِّينَ


Bukhari-2922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2922. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அவ்விருவருக்கும் இருந்த சிரங்கின் காரணமாக, அவர்களுக்கு (பட்டாடை அணிய) நபி(ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள். அல்லது சலுகை கொடுக்கப்பட்டது.
Book :56


رَخَّصَ أَوْ رُخِّصَ لَهُمَا لِحِكَّةٍ بِهِمَا


Bukhari-2921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2921. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி(ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்.
Book :56


«رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَالزُّبَيْرِ بْنِ العَوَّامِ فِي حَرِيرٍ»


Bukhari-2920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2920. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஸுபைர்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (தம் உடலில் சிரங்குண்டாக்கிய) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டார்கள்.

எனவே, நபி(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டாடை அணியச் சலுகை கொடுத்தார்கள். எனவே, ஒரு புனிதப் போரில் அவ்விருவரும் பட்டாடை அணிந்திருப்பதை கண்டேன்.
Book :56


«أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَالزُّبَيْرَ شَكَوَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَعْنِي القَمْلَ – فَأَرْخَصَ لَهُمَا فِي الحَرِيرِ، فَرَأَيْتُهُ عَلَيْهِمَا فِي غَزَاةٍ»


Bukhari-2919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 91 போரின் போது பட்டாடை அணிவது.

2919. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
Book : 56


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَالزُّبَيْرِ فِي قَمِيصٍ مِنْ حَرِيرٍ، مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا»


Bukhari-2918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 90 பிரயாணத்திலும் போரிலும் அங்கி அணிதல்.

2918. முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மல ஜலம் கழிக்கும்) தேவையை நிறைவேற்றிக் கொள்ளச் சென்றார்கள். பிறகு, திரும்பி வந்தபோது, நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்று, (வரும் வழியில்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு அங்கியொன்றை அணிந்திருந்தார்கள்.

அவர்கள் (நான் கொண்டு சென்ற தண்ணீரில்) வாய் கொப்பளித்து, மூக்கில் நீர் செலுத்தினார்கள். தம் முகத்தைக் கழுவினார்கள். அங்கியின் கைப்பகுதிகள் வழியாக தம் கைகளை வெளியே எடுக்கலானார்கள். அப்பகுதிகள் மிகவும் இறுக்கமாக இருந்தன. எனவே, கீழ்ப் பகுதி வழியாக இரண்டு கைகளையும் வெளியே எடுத்தார்கள். பிறகு அவற்றைக் கழுவினார்கள். தம் தலையைத் துடைத்தார்கள்; தம் காலுறைகளின் மீதும் துடைத்தார்கள்.
Book : 56


«انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  لِحَاجَتِهِ، ثُمَّ أَقْبَلَ، فَلَقِيتُهُ بِمَاءٍ، فَتَوَضَّأَ وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ، فَذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْهِ، فَكَانَا ضَيِّقَيْنِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتُ، فَغَسَلَهُمَا، وَمَسَحَ بِرَأْسِهِ، وَعَلَى خُفَّيْهِ»


Next Page » « Previous Page