Category: புஹாரி

Bukhari

Bukhari-2825

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமையான அளவு எது என்பதும், அதற்காக நாட்டம் கொள்வதும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் கனமானவர்களாயிருந்தாலும் சரி; இலேசானவர்களாகயிருந்தாலும் சரி (அறப்போருக்குப்) புறப்படுங்கள்; உங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

உடனடி லாபம் (போர்ச் செல்வம்) கிடைப்பதாக இருந்து, இலேசான பயணமாகவும் இருந்திருப்பின் (நபியே!) உங்களை அவர்கள் பின்பற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் பயணம் தூரமாகி (சிரமமாகி) விட்டது. (9:41,42)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் பூமியிலேயே ஒட்டிக் கொண்டு கிடக்கின்றீர்களே! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி கொண்டு விட்டீர்களா? (அப்படியாயின்) உலக வாழ்வின் இன்பங்கள் யாவும் மறுமை வாழ்க்கைக்கு முன்பாக அற்பமானவையே (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). (9:38)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பல குழுவினர்களாகப் புறப்படுங்கள் (4:71) என்பதற்கு, (தனித் தனியாகிப்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الفَتْحِ: «لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا»


Bukhari-2824

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 அறப்போரில், தான் பட்ட துன்பங்களை ஒருவர் எடுத்துரைக்கலாம்.

இதை ஸஅத்  பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ உஸ்மான் நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2824. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நான் தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஆகியோருடன் தோழமை கொண்டிருந்தேன்.

அவர்களில் ஒருவரும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்டதில்லை. ஆனால், தல்ஹா(ரலி) உஹுதுப் போரின் நாள் குறித்து அறிவித்ததை கேட்டிருக்கிறேன்.
Book : 56


«صَحِبْتُ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَسَعْدًا، وَالمِقْدَادَ بْنَ الأَسْوَدِ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَمَا سَمِعْتُ أَحَدًا مِنْهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ»


Bukhari-2823

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2823. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள்,

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி’

இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று பிரார்த்திப்பது வழக்கம்.
Book : 56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»


Bukhari-2822

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடுதல்.

2822. அம்ர் இப்னு மைமூன் அல் அவ்தீ(ரஹ்) கூறினார்.

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போன்று, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்;

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி –

‘இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’

என்று கூறிவிட்டு, ‘இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) கூறினார்:
இந்த ஹதீஸை நான் முஸ்அப்(ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானது தான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
Book : 56


كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ المُعَلِّمُ الغِلْمَانَ الكِتَابَةَ وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»،

فَحَدَّثْتُ بِهِ مُصْعَبًا فَصَدَّقَهُ


Bukhari-2821

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2821. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள்.

நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் சற்ற நின்று, ‘என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்’ என்று கூறினார்கள்.
Book :56


أَنَّهُ بَيْنَمَا هُوَ يَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ النَّاسُ مَقْفَلَهُ مِنْ حُنَيْنٍ، فَعَلِقَهُ النَّاسُ يَسْأَلُونَهُ حَتَّى اضْطَرُّوهُ إِلَى سَمُرَةٍ، فَخَطِفَتْ رِدَاءَهُ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَعْطُونِي رِدَائِي، لَوْ كَانَ لِي عَدَدُ هَذِهِ العِضَاهِ نَعَمًا لَقَسَمْتُهُ بَيْنَكُمْ، ثُمَّ لاَ تَجِدُونِي بَخِيلًا، وَلاَ كَذُوبًا، وَلاَ جَبَانًا»


Bukhari-2820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 போரில் வீரமும், கோழைத் தனமும்.

2820. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். ‘(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள்.

அப்போது அவர்களை நபி(ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், ‘இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்’ என்று கூறினார்கள்.
Book : 56


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، وَأَجْوَدَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ المَدِينَةِ فَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَقَهُمْ عَلَى فَرَسٍ»، وَقَالَ: «وَجَدْنَاهُ بَحْرًا»


Bukhari-2819

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 23

இறைவழியில் போர் புரிவதற்காக குழந்தை வேண்டுமென்று கோருதல்.

2819. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு அல்லது தொண்ணூற்றொன்பது – மனைவிகளிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பாள்’ என்று கூறினார்கள். அவர்களின் தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால்.. என்று சொல்லுங்கள்’ என்று கூறினார்.

சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்துவிட்டார்கள். எனவே, (அவர்களின் மனைவிமார்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்படையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத் தான் பெற்றெடுத்தார்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால் (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப்போர் புரிகிற வீரர்களாய் ஆகியிருப்பார்கள். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book

قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى مِائَةِ امْرَأَةٍ، أَوْ تِسْعٍ وَتِسْعِينَ كُلُّهُنَّ، يَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ: إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَحْمِلْ مِنْهُنَّ إِلَّا امْرَأَةٌ وَاحِدَةٌ، جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ، لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ، فُرْسَانًا أَجْمَعُونَ


Bukhari-2818

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 மின்னும் வாட்களுக்குக் கீழ் சொர்க்கம் உள்ளது.

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நம்முடைய நபி (ஸல்) அவர்கள், நம் இறைவனின் செய்தியைக் குறித்து அறிவிக்கும் போது, நம்மில் எவர் இறை வழியில் கொல்லப்படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் என்று குறிப்பிட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (இறைவழியில்) கொல்லப்பட்ட நம்மவர்கள் சொர்க்கத்திற்கும், (இஸ்லாத்திற்கெதிராகப் போரிட்டுக்) கொல்லப்பட்ட (இறைமறுப்பாளர்களான) அவர்கள் நரகத்திற்கும் தானே செல்வார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று கூறினார்கள்.

2818. உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையான சாலிம்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு, ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என (கடிதம்) எழுதினார்கள்.

மூஸா இப்னு உக்பா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) வாயிலாக உவைஸீ(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்.
Book : 56


كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»


Bukhari-2817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 அறப்போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவர், உலகத்திற்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுவது.

2817. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர.

அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 56


«مَا أَحَدٌ يَدْخُلُ الجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَيْءٍ إِلَّا الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا، فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ لِمَا يَرَى مِنَ الكَرَامَةِ»


Bukhari-2816

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 உயிர்த் தியாகிக்கு வானவர்கள் நிழல் தருவது.

2816. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(உஹுதுப் போரின் போது) என் தந்தை, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் குலத்தார் என்னைத் தடுத்தார்கள்.

அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர்(ரலி) அவர்களின் மகள் என்றோ – அவர்களின் சகோதரி என்றோ கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறாய்?’ நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

(புகாரீயாகி) நான், அறிவிப்பாளர் ஸதகா இப்னு ஃபள்ல்(ரஹ்) அவர்களிடம், ‘அவர் உயர்த்தப்படும் வரை (நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஜாபிர்(ரலி) அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) உறுதியின்றிக் கூறினார்கள்)’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


جِيءَ بِأَبِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ مُثِّلَ بِهِ، وَوُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَذَهَبْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ، فَنَهَانِي قَوْمِي فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ، فَقِيلَ: ابْنَةُ عَمْرٍو – أَوْ أُخْتُ عَمْرٍو – فَقَالَ: «لِمَ تَبْكِي – أَوْ لاَ تَبْكِي – مَا زَالَتِ المَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا»


Next Page » « Previous Page