Category: புஹாரி

Bukhari

Bukhari-2815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2815. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

உஹுதுப்போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப்பில் இல்லை’ என்று பதிலளித்தார்.
Book :56


«اصْطَبَحَ نَاسٌ الخَمْرَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ قُتِلُوا شُهَدَاءَ»،

فَقِيلَ لِسُفْيَانَ: مِنْ آخِرِ ذَلِكَ اليَوْمِ؟ قَالَ: لَيْسَ هَذَا فِيهِ


Bukhari-2814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என்று தொடங்கும் இறைவசன(ம் குறிப்பிடும் தியாகக் கூட்ட)த்தின் சிறப்பு.

அந்த இறைவசனம் (முழுவதும்) வருமாறு:

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கருதாதீர்கள். எனினும்,அவர்கள் உயிரானவர்களே. தங்கள் இறைவனிடம் அவர்கள் உணவு பெற்று வருகிறார்கள். தங்களுக்கு அல்லாஹ், தன் அருளிலிருந்து வழங்கியதை வைத்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

தங்களுக்குப் பின்னால் (உலகில் வாழ்ந்து கொண்டு) இருக்கின்ற, தம்முடன் இன்னும் வந்து சேராமலிருப்பவர்களைக் குறித்து…… அவர்களுக்கு எந்த அச்சமுமில்லை; அவர்கள் கவலைப் படவும் போவதில்லை என்று….. மன நிம்மதி கொள்கிறார்கள். அல்லாஹ் விடமிருந்து கிடைக்கும் கொடையினாலும், அருளினாலும் மனமகிழ்ச்சி யுடன் இருக்கின்றார்கள். அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களின் நன்மையை வீணாக்கி விடுவதில்லை (என்றும் நிம்மதி கொள்கிறார்கள்). (3:169-171)

2814. அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘பிஃரு மஊனா’ (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம்

«دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»، قَالَ أَنَسٌ: «أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ، ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ»


Bukhari-2813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 போர் புரிந்த பின்பு குளிப்பதும், (வானவர் ஜிப்ரீல்) புழுதி படிந்தவராக வருவதும்.

2813. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ 4, அல்லது 5-ம் ஆண்டில் நடந்த) அகழ்ப் போரின்போது (போர் முடிந்து) திரும்பி வந்து, ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) தம் தலையைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களை நோக்கி, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?’ என்று கேட்க, ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இதோ இங்கே!’ என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.
Book : 56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا رَجَعَ يَوْمَ الخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ، وَاغْتَسَلَ فَأَتَاهُ جِبْرِيلُ وَقَدْ عَصَبَ رَأْسَهُ الغُبَارُ، فَقَالَ: وَضَعْتَ السِّلاَحَ فَوَاللَّهِ مَا وَضَعْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ» قَالَ، هَا هُنَا، وَأَوْمَأَ إِلَى بَنِي قُرَيْظَةَ، قَالَتْ: فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 அல்லாஹ்வின் பாதையில் (போராடும் போது) தலையில் படிந்த புழுதியைத் துடைப்பது.

2812. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும், அவரின் மகன் அலீயிடமும், ‘அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவரின் ஹதீஸைச் செவிமடுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, அபூ ஸயீத்(ரலி) அவர்களும் அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) எங்களைப் பார்த்தவுடன் முழங்கால்களைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அமர்ந்தார்கள். பிறகு கூறலானார்கள்;

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) கொண்டு சென்றோம். அம்மார் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) கொண்டு சென்றார். அப்போது அவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரின் தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தினர் கொன்று விடுவார்கள். அம்மார், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 56


ائْتِيَا أَبَا سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ، فَأَتَيْنَاهُ وَهُوَ وَأَخُوهُ فِي حَائِطٍ لَهُمَا يَسْقِيَانِهِ، فَلَمَّا رَآنَا جَاءَ، فَاحْتَبَى وَجَلَسَ، فَقَالَ: كُنَّا نَنْقُلُ لَبِنَ المَسْجِدِ لَبِنَةً لَبِنَةً، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسَحَ عَنْ رَأْسِهِ الغُبَارَ، وَقَالَ: «وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الفِئَةُ البَاغِيَةُ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ»


Bukhari-2811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 அல்லாஹ்வின் பாதையில் புழுதியடைந்த பாதங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

(போருக்குச் செல்லாமல்) அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் பின்தங்கி விடுவதும், அவரைப் பற்றி அக்கறை காட்டாமல் தங்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் அழகல்ல.

ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் களைப்பு இவற்றில் எந்தத் துன்பம் அவர்களைத் தீண்டினாலும், நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பாதையில் எந்த அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், எந்தப் பகைவனுக்கெதிராகவும் அவர்கள் ஒரு வெற்றியைப் பெற்றாலும் அவர்களுக்கு ஒரு (நற்செயல் புரிந்த) நன்மை எழுதப் படாமல் இருப்பதில்லை. நிச்சயமாக, அல்லாஹ் நற்செயல் புரிவோரின் பிரதிபலனை வீணாக்குவதில்லை. (9:120)

2811. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியானின் பாதங்கள் இரண்டிலும், இறைவழியில் புழுதி படிந்திருக்க, அதை நரக நெருப்புத் தீண்டுவதில்லை. என அபூ அப்ஸ் அப்துர் ரஹ்மான் இப்னு ஜப்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 56


«مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ»


Bukhari-2810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 அல்லாஹ்வின் வாக்கு மேலோங்கியிருக்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவர்.

2810. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?’ என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள், ‘(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ الرَّجُلُ: يُقَاتِلُ لِلْمَغْنَمِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِلذِّكْرِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُرَى مَكَانُهُ، فَمَنْ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-2809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 எங்கிருந்தோ வந்த அம்பு பாய்ந்து ஒருவர் கொல்லப்படுதல்.

2809. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வோன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ‘ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ البَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، أَلاَ تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ، وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ، اجْتَهَدْتُ عَلَيْهِ فِي البُكَاءِ، قَالَ: «يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الفِرْدَوْسَ الأَعْلَى»


Bukhari-2808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அறப்போரில் ஈடுபடுவதற்கு முந்தைய நற்செயல்கள்

நீங்கள் போர் புரிவதெல்லாம் (உங்கள் போரின் முடிவுகளெல்லாம்) உங்கள் செயல்களை வைத்துத் தான் என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும். எவர் அல்லாஹ்வுடைய வழியில் ஈயம் பூசப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக (ஒன்றுபட்டு) நின்று போர் புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் விரும்புகிறான். (61:2-4)

2808. பராஉ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள்.

எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்.
Book : 56


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مُقَنَّعٌ بِالحَدِيدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أُقَاتِلُ أَوْ أُسْلِمُ؟ قَالَ: «أَسْلِمْ، ثُمَّ قَاتِلْ»، فَأَسْلَمَ، ثُمَّ قَاتَلَ، فَقُتِلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَمِلَ قَلِيلًا وَأُجِرَ كَثِيرًا»


Bukhari-2807

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2807. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன்.

(ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:

அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
Book :56


«نَسَخْتُ الصُّحُفَ فِي المَصَاحِفِ، فَفَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقْرَأُ بِهَا، فَلَمْ أَجِدْهَا إِلَّا مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ»، وَهُوَ قَوْلُهُ: {مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23]


Bukhari-2806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2806. அனஸ்(ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ரு(ரலி) அவர்களின் சகோதரி ‘ருபய்யிஉ’ எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிக்குப்பழி வாங்கும்படி உத்தரவிட்டார்கள். அனஸ் இப்னு நள்ரு(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளுடைய முன்பல் (பழிக்குப் பழியாக) உடைக்கப்படாது’ என்று கூறினார்.

அவ்வாறே, அந்தப் பெண்ணின் குலத்தார் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள சம்மதித்துப் பழிவாங்காமல்விட்டுவிட்டனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (இப்படி நடக்க வேண்டும் என்று சபதம் செய்து)விட்டால் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்’ என்று கூறினார்கள்.
Book :56


إِنَّ أُخْتَهُ وَهِيَ تُسَمَّى الرُّبَيِّعَ كَسَرَتْ ثَنِيَّةَ امْرَأَةٍ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسٌ: يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَرَضُوا بِالأَرْشِ، وَتَرَكُوا القِصَاصَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»


Next Page » « Previous Page