Category: புஹாரி

Bukhari

Bukhari-7121

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் மாதமும் ஒன்றாகவே இருக்கும்.

மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.

மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகும், காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமைநாள் வராது. 

மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கமுனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார்.

மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ، يَكُونُ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، دَعْوَتُهُمَا وَاحِدَةٌ،

وَحَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ، قَرِيبٌ مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ،

وَحَتَّى يُقْبَضَ العِلْمُ وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ، وَيَكْثُرَ الهَرْجُ: وَهُوَ القَتْلُ، وَحَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ المَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ عَلَيْهِ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ: لاَ أَرَبَ لِي بِهِ،

وَحَتَّى يَتَطَاوَلَ النَّاسُ فِي البُنْيَانِ، وَحَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ، وَحَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ – يَعْنِي آمَنُوا – أَجْمَعُونَ، فَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلاَنِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا، فَلاَ يَتَبَايَعَانِهِ وَلاَ يَطْوِيَانِهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدِ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلاَ يَطْعَمُهُ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يُلِيطُ حَوْضَهُ فَلاَ يَسْقِي فِيهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلاَ يَطْعَمُهَا


Bukhari-7120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 துணைப் பாடம்

7120. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இப்போதே) தானதர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தம் தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்து செல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார்.

என ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.50

Book : 92


«تَصَدَّقُوا فَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا» قَالَ مُسَدَّدٌ: حَارِثَةُ أَخُو عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ لِأُمِّهِ قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ


Bukhari-7119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக ‘தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது’ என்று இடம் பெற்றுள்ளது.

Book :92


«يُوشِكُ الفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ، فَمَنْ حَضَرَهُ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئًا»، قَالَ عُقْبَةُ: وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «يَحْسِرُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ»


Bukhari-7118

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 24

நெருப்பு கிளம்புவது.

7118. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 92


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الحِجَازِ تُضِيءُ أَعْنَاقَ الإِبِلِ بِبُصْرَى»


Bukhari-7117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7117. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘கஹ்தான்’ குலத்திலிருந்து ஒருவர் தோன்றி, தம் கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லாத வரை மறுமை நாள் வராது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :92


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ، يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ»


Bukhari-7116

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 சிலைகள் வணங்கப்படும் அளவிற்குக் காலம் மாறிவிடும்.

7116. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 92


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الخَلَصَةِ» وَذُو الخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الجَاهِلِيَّةِ


Bukhari-7115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 மண்ணறை(கப்று)வாசிகளைக் கண்டு (உயிர்வாழ்வோர்) பொறாமைப்படும் நிலை உருவாகாத வரை மறுமை நாள் வராது.

7115. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, ‘அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது.45

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 92


لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ


Bukhari-7114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7114. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது. 44

Book :92


«إِنَّمَا كَانَ النِّفَاقُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَّا اليَوْمَ فَإِنَّمَا هُوَ الكُفْرُ بَعْدَ الإِيمَانِ»


Bukhari-7113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்…? (40)

7113. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நயவஞ்சகர்களை விட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டு வந்தார்கள். இன்றோ இவர்கள் பகிரங்கமாகச் செயல்படுகிறார்கள்.43

Book : 92


«إِنَّ المُنَافِقِينَ اليَوْمَ شَرٌّ مِنْهُمْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانُوا يَوْمَئِذٍ يُسِرُّونَ وَاليَوْمَ يَجْهَرُونَ»


Bukhari-7112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்…? (40)

7112. அபுல் மின்ஹால் இப்னு சலாமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு ஸியாத் (பஸ்ராவிலிருந்து வெளியேறி ஷாம் நாட்டுக்கு வர, அங்கு) மர்வான் இப்னி ஹகம் ஷாம் நாட்டில் (ம்ளர்ச்சியை ஆரம்பித்து) இருந்தபோது, மேலும் (அதே நேரத்தில்) மக்காவில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் பஸ்ராவில் காரிஜிய்யாக்களும் கிளர்ச்சியில் அபூ பர்ஸா அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம் சென்றேன். அன்னார் பேரீச்சங் கழியாலான உப்பரிகை ஒன்றில் அமர்ந்திருக்க அவர்களின் இல்லத்தினுள் நுழைந்து அவர்களிடம் நாங்கள் அமர்ந்துகொண்டோம். 42 அப்போது என் தந்தை (ஸலமா) அபூ பர்ஸா(ரலி) அவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் எண்ணத்தில் பேசத் தொடங்கினார்கள். ‘அபூ பர்ஸா! மக்கள் எந்த விஷயத்தில் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று என் தந்தை கேட்டார்கள். அப்போது அபூ பர்ஸா(ரலி) அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் அவர்கள் பேசி நான் கேட்ட முதல் விஷயம் இதுதான். (அன்னார் கூறினார்கள்:)

لَمَّا كَانَ ابْنُ زِيَادٍ وَمَرْوَانُ بِالشَّأْمِ، وَوَثَبَ ابْنُ الزُّبَيْرِ بِمَكَّةَ، وَوَثَبَ القُرَّاءُ بِالْبَصْرَةِ، فَانْطَلَقْتُ مَعَ أَبِي إِلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، حَتَّى دَخَلْنَا عَلَيْهِ فِي دَارِهِ، وَهُوَ جَالِسٌ فِي ظِلِّ عُلِّيَّةٍ لَهُ مِنْ قَصَبٍ، فَجَلَسْنَا إِلَيْهِ، فَأَنْشَأَ أَبِي يَسْتَطْعِمُهُ الحَدِيثَ فَقَالَ: يَا أَبَا بَرْزَةَ، أَلاَ تَرَى مَا وَقَعَ فِيهِ النَّاسُ؟ فَأَوَّلُ شَيْءٍ سَمِعْتُهُ تَكَلَّمَ بِهِ: «إِنِّي احْتَسَبْتُ عِنْدَ اللَّهِ أَنِّي أَصْبَحْتُ سَاخِطًا عَلَى أَحْيَاءِ قُرَيْشٍ، إِنَّكُمْ يَا مَعْشَرَ العَرَبِ، كُنْتُمْ عَلَى الحَالِ الَّذِي عَلِمْتُمْ مِنَ الذِّلَّةِ وَالقِلَّةِ وَالضَّلاَلَةِ، وَإِنَّ اللَّهَ أَنْقَذَكُمْ بِالإِسْلاَمِ وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى بَلَغَ بِكُمْ مَا تَرَوْنَ ، وَهَذِهِ الدُّنْيَا الَّتِي أَفْسَدَتْ بَيْنَكُمْ، إِنَّ ذَاكَ الَّذِي بِالشَّأْمِ، وَاللَّهِ إِنْ يُقَاتِلُ إِلَّا عَلَى الدُّنْيَا، وَإِنَّ هَؤُلاَءِ الَّذِينَ بَيْنَ أَظْهُرِكُمْ، وَاللَّهِ إِنْ يُقَاتِلُونَ إِلَّا عَلَى الدُّنْيَا، وَإِنْ ذَاكَ الَّذِي بِمَكَّةَ وَاللَّهِ إِنْ يُقَاتِلُ إِلَّا عَلَى الدُّنْيَا»


Next Page » « Previous Page