Category: புஹாரி

Bukhari

Bukhari-6794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6794. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கவசம்’ அல்லது ‘தோல் கேடயத்தின்’ விலையை விடத் தாழ்ந்த (விலையுள்ள) பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையதாகும்.

அத்தியாயம்: 86


«لَمْ تُقْطَعْ يَدُ سَارِقٍ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَدْنَى مِنْ ثَمَنِ المِجَنِّ تُرْسٍ أَوْ حَجَفَةٍ، وَكَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ذَا ثَمَنٍ»


Bukhari-6793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6793. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தை ‘விடத் தாழ்ந்த பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புள்ளதாகும்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் முர்சலாக (தொடர் முறிந்ததாக) வந்துள்ளது.

Book :86


«لَمْ تَكُنْ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي أَدْنَى مِنْ حَجَفَةٍ أَوْ تُرْسٍ، كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ذُو ثَمَنٍ»


Bukhari-6792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6792. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தின்’ விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :86


«أَنَّ يَدَ السَّارِقِ لَمْ تُقْطَعْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا فِي ثَمَنِ مِجَنٍّ حَجَفَةٍ أَوْ تُرْسٍ»


Bukhari-6791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6791. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனாருக்காக (பொற் காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86


«تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ»


Bukhari-6790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6790. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86


«تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ»


Bukhari-6789

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள் எனும் (5:38ஆவது) வசனத்தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.14

அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற் காக) முன்கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15

திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தை விட்டுவிட்டு) இடக் கரம் துண்டிக்கப் பட்டது. இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அவ்வளவுதான். (இனி வலக் கரம் துண்டிக்கப்படாது) என்று கூறினார்கள்.

6789. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 86


«تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا»


Bukhari-6788

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

ஆட்சியாளரிடம் வழக்கு சென்றுவிட்டால் தண்டனை(யைக் கைவிடுவது) தொடர்பாகப் பரிந்துரைப்பது வெறுக்கப்பட்டதாகும்.

6788. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள்.

أَنَّ قُرَيْشًا أَهَمَّتْهُمُ المَرْأَةُ المَخْزُومِيَّةُ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: مَنْ يُكَلِّمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَلَّمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ» ثُمَّ قَامَ فَخَطَبَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا ضَلَّ مَنْ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَرَقَتْ لَقَطَعَ مُحَمَّدٌ يَدَهَا»


Bukhari-6787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவர் மீதும் தண்டனையை நடைமுறைப்படுத்துவது.

6787. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்’ என்றார்கள்.12

Book : 86


أَنَّ أُسَامَةَ كَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي امْرَأَةٍ، فَقَالَ: «إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا يُقِيمُونَ الحَدَّ عَلَى الوَضِيعِ وَيَتْرُكُونَ الشَّرِيفَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ فَعَلَتْ ذَلِكَ لَقَطَعْتُ يَدَهَا»


Bukhari-6786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

குற்றவியல் தண்டனைகளை நிலை நாட்டுவதும், இறைவனின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும் போது நடவடிக்கை எடுப்பதும்.

6786. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென என்று எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர.11

Book : 86


«مَا خُيِّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا اخْتَارَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَأْثَمْ، فَإِذَا كَانَ الإِثْمُ كَانَ أَبْعَدَهُمَا مِنْهُ، وَاللَّهِ مَا انْتَقَمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ يُؤْتَى إِلَيْهِ قَطُّ، حَتَّى تُنْتَهَكَ حُرُمَاتُ اللَّهِ، فَيَنْتَقِمُ لِلَّهِ»


Bukhari-6785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

ஓர் இறைநம்பிக்கையாளர் குற்றவியல் தண்டனைக்காகவோ (மனித) உரிமை (மீறலு)க்காவோ தவிர, (வேறு எந்தக் காரணங்களுக்காவும் வேதனை அனுபவிப்பதிலிருந்து) காக்கப்பட வேண்டும்.

6785. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), ‘மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்’ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், ‘மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த ஊர் ‘(மக்கா’) தான்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்’ என்று கூறினர்.

நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ: «أَلاَ، أَيُّ شَهْرٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً» قَالُوا : أَلاَ شَهْرُنَا هَذَا، قَالَ: «أَلاَ، أَيُّ بَلَدٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً» قَالُوا: أَلاَ بَلَدُنَا هَذَا، قَالَ: «أَلاَ، أَيُّ يَوْمٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً» قَالُوا: أَلاَ يَوْمُنَا هَذَا، قَالَ: «فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَدْ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ إِلَّا بِحَقِّهَا، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ» ثَلاَثًا، كُلُّ ذَلِكَ يُجِيبُونَهُ: أَلاَ، نَعَمْ. قَالَ: «وَيْحَكُمْ، أَوْ وَيْلَكُمْ،، لاَ تَرْجِعُنَّ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Next Page » « Previous Page