தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6785

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

ஓர் இறைநம்பிக்கையாளர் குற்றவியல் தண்டனைக்காகவோ (மனித) உரிமை (மீறலு)க்காவோ தவிர, (வேறு எந்தக் காரணங்களுக்காவும் வேதனை அனுபவிப்பதிலிருந்து) காக்கப்பட வேண்டும்.

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), ‘மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்’ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், ‘மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த ஊர் ‘(மக்கா’) தான்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்’ என்று கூறினர்.

நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்’ என்று கூறிவிட்டு, ‘நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், ‘ஆம்’ என்று நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர். பிறகு, ‘உங்களுக்கு அழிவுதான்’ அல்லது ‘உங்களுக்குக் கேடுதான்’! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடவேண்டாம்’ என்றார்கள்.10

Book : 86

(புகாரி: 6785)

بَابٌ: ظَهْرُ المُؤْمِنِ حِمًى إِلَّا فِي حَدٍّ أَوْ حَقٍّ

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، سَمِعْتُ أَبِي: قَالَ عَبْدُ اللَّهِ:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ: «أَلاَ، أَيُّ شَهْرٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً» قَالُوا : أَلاَ شَهْرُنَا هَذَا، قَالَ: «أَلاَ، أَيُّ بَلَدٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً» قَالُوا: أَلاَ بَلَدُنَا هَذَا، قَالَ: «أَلاَ، أَيُّ يَوْمٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً» قَالُوا: أَلاَ يَوْمُنَا هَذَا، قَالَ: «فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَدْ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ إِلَّا بِحَقِّهَا، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ» ثَلاَثًا، كُلُّ ذَلِكَ يُجِيبُونَهُ: أَلاَ، نَعَمْ. قَالَ: «وَيْحَكُمْ، أَوْ وَيْلَكُمْ،، لاَ تَرْجِعُنَّ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.