ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
மஃக்ரிப், இஷாத் தொழுகையின் நேரங்கள்.
1054. உபாதா பின் ஸாமித் (ரலி), ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
(அந்தி நேரம்) அடிவானத்தில் ஏற்படும் நிலை இரு வகையாகும். ஒன்று, சிவந்த நிறமாக மாறுவது. மற்றொன்று, வெண்மை நிறமாக மாறுவது.
(செவ்வானம் எனும் செம்மை மறையும் வரை மஃக்ரிப் தொழுகை தொழுவது கூடும்.) அது மறைந்துவிட்டால் (இஷாத்) தொழுகை தொழுவது கூடும்.
ஃபஜ்ர் நேரம் இரு வகை. ஒன்று, அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) வெண்மை தெரியும் நேரம். மற்றொன்று, அகலவாக்கில் பரவலாக வெண்மை தெரியும் நேரம். அகலவாக்கில் வெண்மை வெளிப்பட்டுவிட்டால் (ஃபஜ்ர்) தொழுகை தொழுவது கூடும்.
அறிவிப்பவர்: மக்ஹூல் (ரஹ்)
الشَّفَقُ شَفَقَانِ: الْحُمْرَةُ وَالْبَيَاضُ فَإِذَا غَابَتِ الْحُمْرَةُ حَلَّتِ الصَّلَاةُ , وَالْفَجْرُ فَجْرَانِ الْمُسْتَطِيلُ وَالْمُعْتَرِضُ فَإِذَا انْصَدَعَ الْمُعْتَرِضُ حَلَّتِ الصَّلَاةُ
சமீப விமர்சனங்கள்