தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2183

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். அடிவானில் நீளவாக்கில் செங்குத்தாய் வெண்மை தெரியும் நேரம். இது (உன்னை) ஸஹர் உணவு உண்பதிலிருந்து தடுத்துவிடவேண்டாம். மேலும் இந்த நேரத்தில் (நீ ஃபஜ்ர்) தொழுவது கூடாது.

அடிவானில் அகலவாக்கில் வெண்மை பரவிவிட்டால் (நீ ஸஹர்) உணவு உண்பது தடையாகும். இதில் நீ அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையை தொழுதுக் கொள்!.

அறிவிப்பவர்: ரபீஆ பின் யஸீத் (ரஹ்)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

(daraqutni-2183: 2183)

حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ بْنُ مَنِيعٍ , ثنا دَاوُدُ بْنُ رُشَيْدٍ أَبُو الْفَضْلِ الْخُوَارِزْمِيُّ , ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , عَنِ الْوَلِيدِ بْنِ سُلَيْمَانَ , قَالَ: سَمِعْتُ رَبِيعَةَ بْنَ يَزِيدَ , قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَائِشٍ , صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«الْفَجْرُ فَجْرَانِ فَأَمَّا الْمُسْتَطِيلُ فِي السَّمَاءِ فَلَا يَمْنَعَنَّ السَّحُورَ وَلَا تَحِلُّ فِيهِ الصَّلَاةُ , وَإِذَا اعْتَرَضَ فَقَدْ حَرُمَ الطَّعَامُ فَصَلِّ صَلَاةَ الْغَدَاةِ»

إِسْنَادُهُ صَحِيحٌ


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2183.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1919.




இந்தச் செய்தி நபித்தோழரின் சொல்லாக வந்துள்ளது.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்

2 . அபுல்காஸிம் பின் மனீஃ-அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்பஃகவீ

3 . தாவூத் பின் ருஷைத்

4 . வலீத் பின் முஸ்லிம்

5 . வலீத் பின் ஸுலைமான்

6 . ரபீஆ பின் யஸீத்

7 . அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி)


அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் அவர்கள் நபித்தோழரா? இல்லையா? என்று அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளது.

இவரைப் பற்றிய விரிவான ஆய்வில் இவர் நபித்தோழர் என்று உறுதியாகிறது.

(பார்க்க: அர்ருவாதுல் முக்தலஃபு ஃபீ ஸுஹ்பதிஹிம்-8/897-925)


இந்தச் செய்தியை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் சரியான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியிருந்தாலும் இதில் வரும் ராவீ-47830-வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ் அதிகம் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றவர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1041)

எனவே இதில் நேரடியாக கேட்டேன் என்பது போன்ற வார்த்தை அமைப்பு இல்லாததால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


6 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-2183,


மேலும் பார்க்க: இப்னு குஸைமா-356.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.