தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-356

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஃபஜ்ர் நேரம் இரு வகை. ஒன்று, இரவில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். மற்றொன்று பகலின் ஆரம்பத்தில் உதயமாகும் ஃபஜ்ர் நேரம். இந்த (இரண்டாவது) நேரத்தில்தான் ஸுப்ஹ் தொழுவது கூடும் என்பது பற்றிய விளக்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். ஒன்று, உணவு (உண்பது) தடைசெய்யப்பட்டு, தொழுவது அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

மற்றொன்று, தொழுவது தடை செய்யப்பட்டு, உணவு (உண்பது) அனுமதிக்கப்பட்ட ஃபஜ்ர் நேரம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)


இப்னு குஸைமா இமாம் கூறுகிறார்:

கடமையான தொழுகையை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னால் தொழக்கூடாது என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக உள்ளது.
உணவு உண்பது கூடாது என்றால் அது நோன்பாளி (ஸஹர் உணவு) உண்பதைக் குறிக்கிறது. தொழுவது கூடும் என்றால் அது ஸுப்ஹ் தொழுகையைக் குறிக்கிறது.

தொழுவது தடை செய்யப்பட்ட ஃபஜ்ர் என்றால் முதல் ஃபஜ்ர் தோன்றியவுடன் அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால் முதல் ஃபஜ்ர் என்பது இரவாகும். அந்த நேரத்தில் ஸுப்ஹ் தொழக்கூடாது. இந்த நேரத்தில் உபரியான தொழுகைகளைத் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
உணவு உண்ணுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால் அது நோன்பாளி ஸஹர் உண்பதைக் குறிக்கிறது.

இந்தச் செய்தியை அபூஅஹ்மத் ஸுபைரீ அவர்களைத் தவிர, உலகில் வேறுயாரும் நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.

(ibn-khuzaymah-356: 356)

بَابُ ذِكْرِ بَيَانِ الْفَجْرِ الَّذِي يَجُوزُ صَلَاةُ الصُّبْحِ بَعْدَ طُلُوعِهِ، إِذِ الْفَجْرُ هُنَا فَجْرَانِ، طُلُوعُ أَحَدِهِمَا بِاللَّيْلِ، وَطُلُوعُ الثَّانِي يَكُونُ بِطُلُوعِ النَّهَارِ

نا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحْرِزٍ أَصْلُهُ بَغْدَادِيٌّ بِالْفُسْطَاطِ، نا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، نا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْفَجْرُ فَجْرَانِ فَجَرٌ يَحْرُمُ فِيهِ الطَّعَامُ وَيَحِلُّ فِيهِ الصَّلَاةُ، وَفَجَرٌ يَحْرُمُ فِيهِ الصَّلَاةُ وَيَحِلُّ فِيهِ الطَّعَامُ»

قَالَ أَبُو بَكْرٍ: فِي هَذَا الْخَبَرِ دَلَالَةٌ عَلَى أَنَّ صَلَاةَ الْفَرْضِ لَا يَجُوزُ أَدَاؤُهَا قَبْلَ دُخُولِ وَقْتِهَا
قَالَ أَبُو بَكْرٍ: قَوْلُهُ فَجَرٌ يَحْرُمُ فِيهِ الطَّعَامُ يُرِيدُ عَلَى الصَّائِمِ، وَيَحِلُّ فِيهِ الصَّلَاةُ يُرِيدُ صَلَاةَ الصُّبْحِ، وَفَجَرٌ يَحْرُمُ فِيهِ الصَّلَاةُ يُرِيدُ صَلَاةَ الصُّبْحِ إِذَا طَلَعَ الْفَجْرُ الْأَوَّلُ لَمْ يَحِلَّ أَنْ يُصَلَّى فِي ذَلِكَ الْوَقْتِ صَلَاةُ الصُّبْحِ؛ لِأَنَّ الْفَجْرَ الْأَوَّلَ يَكُونُ بِاللَّيْلِ، وَلَمْ يَرِدْ أَنَّهُ لَا يَجُوزُ أَنْ يُتَطَوَّعَ بِالصَّلَاةِ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ الْأَوَّلِ،
وَقَوْلُهُ: وَيَحِلُّ فِيهِ الطَّعَامُ يُرِيدُ لِمَنْ يُرِيدُ الصِّيَامَ
قَالَ أَبُو بَكْرٍ: لَمْ يَرْفَعْهُ فِي الدُّنْيَا غَيْرُ أَبِي أَحْمَدَ الزُّبَيْرِيِّ


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-356.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-365.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் அலீ பின் முஹ்ரிஸ்

3 . அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ-முஹம்மத் பின் அப்துல்லாஹ்

4 . ஸுஃப்யான் ஸவ்ரீ

5 . இப்னு ஜுரைஜ்

6 . அதாஉ பின் அபூரபாஹ்

7 . இப்னு அப்பாஸ் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஃபிர்யாபீ, அப்துல்லாஹ் பின் வலீத், ஹுஸைன் பின் ஹஃப்ஸ் ஆகியோர் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

2 . இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ
அவர்கள் மட்டுமே இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்பதால் நபியின் சொல்லாக வந்திருப்பது ஷாத் ஆகும்.


3 . இவ்வாறே மற்ற நபித்தோழர்கள், தாபிஈன்கள் வழியாக வரும் செய்திகளிலும் விமர்சனம் இருப்பதால் அதாவது இவை நபித்தோழரின் சொல்லாகவும், முர்ஸலாகவும் வந்துள்ளது என்பதால் இந்தச் செய்தி நபித்தோழரின் சொல் என்றே முடிவு செய்யவேண்டும் என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

4 . இவர்கள், ஒரு கருத்தில் நபித்தோழரின் சொல்லும், முர்ஸலான செய்தியும் வந்தால் ஷாஃபிஈ இமாம் போன்றவர்கள் இதை ஆதாரமாக ஏற்பார்கள் என்பதால் இந்தக் கருத்தில் வரும் செய்திகள் ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ளவை என்றும் கூறியுள்ளனர்.


இந்தக் கருத்து, வேறு வார்த்தையில் சரியான ஹதீஸ்களில் வந்துள்ளது.

பார்க்க: முஸ்லிம்-1998, …


விரிவான தகவல்:

تاريخ ابن معين – رواية الدوري (3/ 450):
2215 – سَمِعت يحيى يَقُول لَيْسَ أحد فِي سُفْيَان الثَّوْريّ يشبه هَؤُلَاءِ بن الْمُبَارك وَيحيى بن سعيد ووكيع بن الْجراح وَعبد الرَّحْمَن بن مهْدي وَأَبُو نعيم فَقيل لَهُ والأشجعي فَقَالَ الْأَشْجَعِيّ ثِقَة مَأْمُون وَلَكِن هاتوا من يروي عَنهُ . قَالَ يحيى وَبعد هَؤُلَاءِ فِي سُفْيَان يحيى بن آدم وَعبيد الله بن مُوسَى وَأَبُو أَحْمد الزبيرِي وَأَبُو حُذَيْفَة وَقبيصَة وَمُعَاوِيَة بن الْقصار وَالْفِرْيَابِي

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்த மாணவர்களில் முதல் தரத்தில் உள்ளவர்கள் இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
யஹ்யா அல்கத்தான், வகீஃ பின் ஜர்ராஜ், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன் ஆகிய 5 பேர் ஆவார்கள்.

இவர்களை அடுத்துள்ள தரத்தில் உள்ளவர்கள் யஹ்யா பின் ஆதம், உபைதுல்லாஹ் பின் மூஸா, அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ
, அபூஹுதைஃபா, கபீஸா பின் உக்பா, முஆவியா பின் ஹிஷாம் அல்கஸ்ஸார், ஃபிர்யாபீ போன்றவர்கள் ஆவார்கள் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-2215, அல்கமால்-4308, தஹ்தீபுல் கமால்-19/110)

ராவீ-40330-அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஸுபைரீ
அவர்கள் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிவிப்பாளர்; பலமானவர் தான் என்றாலும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/861)


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-356, 1927, தாரகுத்னீ-2185, ஹாகிம்-687, 1549, குப்ரா பைஹகீ-1767, 1768, 2152, 8003,


2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-688.


3 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9071.


4 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் ஸவ்பான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1053.


5 . உபாதா பின் ஸாமித் (ரலி), ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1054.


6 . அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-2183.



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-617, முஸ்லிம்-1998,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.