Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-2276

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நோன்பு வைத்த நிலையில்) யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்துவிட்டதோ அவர் நோன்பை தொடரட்டும். அவர் மீது அதை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுத்துவிட்டாரோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلْيُتِمَّ عَلَى صَوْمِهِ وَلَا قَضَاءَ عَلَيْهِ , وَمَنْ قَاءَ مُتَعَمِّدًا فَلْيَقْضِ»


Daraqutni-2275

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2275. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பாளிக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்தால் அவர் நோன்பை முறித்தவராகமாட்டார். அவர் மீது அதை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் மீது நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடைமையாகும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا ذَرَعَ الصَّائِمَ الْقَيْءُ فَلَا فِطْرَ عَلَيْهِ وَلَا قَضَاءَ عَلَيْهِ وَإِذَا تَقَيَّأَ فَعَلَيْهِ الْقَضَاءُ»


Daraqutni-2273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் மீது நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமையாகும். யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வருகிறதோ அவர் மீது நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«مَنِ اسْتَقَاءَ عَامِدًا فَعَلَيْهِ الْقَضَاءُ , وَمَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ»


Daraqutni-2280

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2280. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்னா, வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்னா, ஃபதகப்பல் மின்னா, இன்னக அன்தஸ்ஸமீஉல் அலீம்” (பொருள்: “அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தோம்; உனது உணவினால் நோன்புத் துறக்கின்றோம்; எங்களிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْنَا وَعَلَى رِزْقِكَ أَفْطَرْنَا فَتَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ»


Daraqutni-882

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

882. ரபாஹ் அந்நவ்பீ அபூ முஹம்மது அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தபோது தன் இரத்தத்தை என்னுடைய மகனிடம் கொடுத்தார்கள். என் மகன் அதை பருகிவிட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இந்த விசயத்தை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் (என் மகனிடம்), “நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “உங்கள் இரத்தத்தை கீழே கொட்ட நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவருடைய தலையை வருடிவிட்டு, “நரகம் உன்னைத் தீண்டாது. உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகும். மக்களால் உனக்குக் கேடு உண்டாகும்” என்று சொன்னார்கள் என ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபிடம் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.


سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ تَقُولُ لِلْحَجَّاجِ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ فَدَفَعَ دَمَهُ إِلَى ابْنِي فَشَرِبَهُ , فَأَتَاهُ جَبْرَائِيلُ عَلَيْهِ السَّلَامُ فَأَخْبَرَهُ , فَقَالَ: «مَا صَنَعْتَ؟» قَالَ: كَرِهْتُ أَنْ أَصُبَّ دَمَكَ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمَسَّكَ النَّارُ» , وَمَسَحَ عَلَى رَأْسِهِ وَقَالَ: «وَيْلٌ لِلنَّاسِ مِنْكَ وَوَيْلٌ لَكَ مِنَ النَّاسِ»


Daraqutni-1850

ஹதீஸின் தரம்: Pending

1850. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا جَاءَ نَعْي جَعْفَرٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ» أَوْ «أَمْرٌ يَشْغَلُهُمْ»


Daraqutni-1842

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1842. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை வைக்கும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا وَسَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً»


Daraqutni-1817

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1817. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை நடத்தும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا , وَسَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً»


Daraqutni-783

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

783. மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல் பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும்.

ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல் பாகத்தின் மீதே மஸஹ் செய்யக் கண்டுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்து கைர் (ரஹ்)


قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ , «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهَرِخُفَّيْهِ»


Next Page » « Previous Page