3416.
«مَا أُنْزِلَتْ فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ وَالزَّبُورِ وَالْقُرْآنِ مِثْلُهَا – يَعْنِي أُمَّ الْقُرْآنِ – وَإِنَّهَا لَسَبْعٌ مِنَ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُعْطِيتُ»
Sunan ad-Darimi
3416.
«مَا أُنْزِلَتْ فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ وَالزَّبُورِ وَالْقُرْآنِ مِثْلُهَا – يَعْنِي أُمَّ الْقُرْآنِ – وَإِنَّهَا لَسَبْعٌ مِنَ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُعْطِيتُ»
3417. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”அல்ஹம்து லில்லாஹ்” (அத்தியாயமாகிறது) உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), இன்னும் உம்முல் கிதாப் (வேதத்தின் தாய்), இன்னும் அஸ்ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும்) ஆகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
«الْحَمْدُ لِلَّهِ أُمُّ الْقُرْآنِ، وَأُمُّ الْكِتَابِ، وَالسَّبْعُ الْمَثَانِي»
பாடம்:
கனவு பற்றி (கனவு பற்றிய மார்க்க சட்டத்தை) அறிந்தவர் அல்லது பிறருக்கு நலவை நாடும் மனிதரிடமே தவிர மற்றவரிடம் கூறுவது வெறுப்பிற்குரியது.
2193. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவு பற்றி (கனவு பற்றிய மார்க்க சட்டத்தை) அறிந்தவர் அல்லது பிறருக்கு நலவை நாடும் மனிதரிடமே தவிர மற்றவரிடம் நீங்கள் அதைக் கூறவேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا تَقُصُّوا الرُّؤْيَا إِلَّا عَلَى عَالِمٍ أَوْ نَاصِحٍ»
2206. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«أَكْرَهُ الْغُلَّ، وَأُحِبُّ الْقَيْدَ، الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ»
பாடம்:
உண்மையான கனவு காண்பவர் உண்மை சொல்பவராக இருப்பார்.
2190. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا اقْتَرَبَ الزَّمَانُ، لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ، وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا»
பாடம்:
கனவுகள் மூன்று வகை.
2189. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الرُّؤْيَا ثَلَاثٌ، فَالرُّؤْيَا الْحَسَنَةُ بُشْرَى مِنَ اللَّهِ، وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، وَالرُّؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهِ الْإِنْسَانُ نَفْسَهُ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُهُ، فَلَا يُحَدِّثْ بِهِ وَلْيَقُمْ وَلْيُصَلِّ»
2265. பெண்களை அடிக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, பெண்கள் கணவன்மார்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். எல்லா விஷயத்திலும் எல்லை மீறுகிறார்கள் என்று முறையிட்டதும், நபி (ஸல்) அவர்கள் பெண்களை இலேசாக அடித்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கினார்கள்.
(மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய பிறகு) நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப்பதாகப் புகார் செய்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் , அதிமான பெண்கள் தங்களது கணவன்மார்கள் அடிப்பதாக முஹம்மதின் குடும்பத்தாரிடம் வந்து புகார் கூறியுள்ளனர். எனவே உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)…
«لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ» فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: قَدْ ذَئِرْنَ عَلَى أَزْوَاجِهِنَّ، فَرَخَّصَ لَهُمْ فِي ضَرْبِهِنَّ، فَأَطَافَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ، يَشْكُونَ أَزْوَاجَهُنَّ لَيْسَ أُولَئِكَ بِخِيَارِكُمْ»
3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவர், அவர் வெறுக்கும் எந்த ஒன்றையும் மாலை வரை காணமாட்டார்.
யார் அதை மாலையில் ஓதுவாரோ அவர், அவர் வெறுக்கும் எந்த ஒன்றையும் காலை வரை காணமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ، وَفَاتِحَةَ حم الْمُؤْمِنِ إِلَى قَوْلِهِ: {غَافِرِ الذَّنبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لاَ إِلَهَ إِلاَّ هُوَ إِلَيْهِ الْمَصِيرُ} [غافر: 3] لَمْ يَرَ شَيْئًا يَكْرَهُهُ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهَا حِينَ يُمْسِي، لَمْ يَرَ شَيْئًا يَكْرَهُهُ حَتَّى يُصْبِحَ
1491.
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ» قَالَ أَبُو مُحَمَّدٍ: إِذَا كَانَ فِي بَيْتِهِ، فَالْبَيْتُ أَهْوَنُ
1489. ஹதீஸ் எண்-1488 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
نَحْوَهُ
சமீப விமர்சனங்கள்