1488. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»
Sunan ad-Darimi
1488. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»
3464. அபூ ராஃபிஉ அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவர், பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக காலையில் எழுவார். மேலும் (சொர்க்கத்து) ஹுரூல்ஈன் பெண்களை அவருக்கு துணையாக்கப்படும்.
«مَنْ قَرَأَ حم فِي لَيْلَةِ الْجُمُعَةِ، أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَزُوِّجَ مِنَ الْحُورِ الْعِينِ»
3463. அப்துல்லாஹ் பின் ஈஸா அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை உண்மையான ஈமானுடன் ஓதுபவர், (பாவங்கள்) மன்னிக்கப்பட்டவராக காலையில் எழுவார் என்ற செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது.
«أُخْبِرْتُ أَنَّهُ مَنْ قَرَأَ حم الدُّخَانَ لَيْلَةَ الْجُمُعَةِ إِيمَانًا وَتَصْدِيقًا بِهَا، أَصْبَحَ مَغْفُورًا لَهُ»
3458. யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். மேலும் அது முழு குர்ஆனுக்கும் நிகராகும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: ஸுலைமான் பின் தர்க்கான் (ரஹ்)
«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ أَوْ مَرْضَاةِ اللَّهِ، غُفِرَ لَهُ» وَقَالَ: «بَلَغَنِي أَنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ كُلَّهُ»
3461. பகலின் ஆரம்பத்தில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதக்கூடியவருக்கு அவரின் தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
«مَنْ قَرَأَ يس فِي صَدْرِ النَّهَارِ، قُضِيَتْ حَوَائِجُهُ»
3460. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அந்த இரவில் மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ، غُفِرَ لَهُ فِي تِلْكَ اللَّيْلَةِ»
3459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும். யார் அதை ஓதுகிறாரோ அவர் பத்து தடவை குர்ஆனை ஓதியவர் போன்றவராவார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَإِنَّ قَلْبَ الْقُرْآنِ يس، مَنْ قَرَأَهَا، فَكَأَنَّمَا قَرَأَ الْقُرْآنَ عَشْرَ مَرَّاتٍ»
718. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறவில்லையோ அவருக்கு உளூ நிறைவேறாது.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»
2560. அபூஆமிர் அப்துல்லாஹ் பின் லுஹய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் ஸுஃப்யான் (ரலி) அவர்கள் (உரை நிகழ்த்தும் போது) கூறினார்கள்:
(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது, “அறிந்துக்கொள்ளுங்கள்! உங்களுக்கு முன் வேதம்கொடுக்கப்பட்டோர் எழுபத்திரண்டு மார்க்கமுடையவர்களாக பிரிந்துவிட்டனர். இந்த மார்க்கமுடையோர் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவர். எழுபத்திரண்டு கூட்டத்தினர் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தினர் சொர்க்கம் செல்வர்” என்று கூறினார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا، فَقَالَ: «أَلَا إِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَإِنَّ هَذِهِ الْأُمَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ، اثْنَتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ»،
قَالَ عَبْد اللَّهِ: «الْحَرَازُ، قَبِيلَةٌ مِنْ أَهْلِ الْيَمَنِ»
2140.
أَنَّ سُوَيْدَ بْنَ طَارِقٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ فَنَهَاهُ عَنْهَا أَنْ يَصْنَعَهَا، فَقَالَ: إِنَّهَا دَوَاءٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا لَيْسَتْ دَوَاءً، وَلَكِنَّهَا دَاءٌ»
சமீப விமர்சனங்கள்