Category: ஸுனன் தாரிமீ

Sunan ad-Darimi

Darimi-1814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1814. நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது , “அறப்போரை விடவுமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும் தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَا الْعَمَلُ، فِي أَيَّامٍ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي عَشْرِ ذِي الْحِجَّةِ». قِيلَ: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ ثُمَّ لَمْ يَرْجِعْ بِشَيْءٍ»


Darimi-2725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2725.

“அல்லாஹும்ம! இன்னீ அஸ்லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க; ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக் கல்லதீ அன்ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த” என்று ஓதிக்கொள்.

(பொருள்: இறைவா! எனது முகத்தை உனக்குக் கீழ்ப்படியச் செய்துவிட்டேன். என் காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். என் முதுகை உன்னளவில் சாய்த்து விட்டேன். உன்மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.)

இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால், (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் நீ இறந்தவன் ஆவாய்.


إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا إِذَا أَخَذَ مَضْجَعَهُ أَنْ يَقُولَ: «اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَى مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مَاتَ، مَاتَ عَلَى الْفِطْرَةِ»


Darimi-735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

735.


رَأَيْتُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، تَوَضَّأَ، فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا، وَبَاطِنِهِمَا، ثُمَّ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ كَمَا صَنَعْتُ، أَوْ كَالَّذِي صَنَعْتُ»


Darimi-731

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

731.


رَأَيْتُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، ” يَتَوَضَّأُ فَخَلَّلَ لِحْيَتَهُ، وَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ


Darimi-720

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

720.


أَنَّ عُثْمَانَ تَوَضَّأَ فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ، وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ كَمَا تَوَضَّأْتُ، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Darimi-1738

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1738. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.

அறிவிப்பவர்: அனஸ்  (ரலி)


«تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً»


Darimi-2733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பள்ளிவாசலுக்குள் நுழையும் போதும், வெளியேறும்போதும் என்ன சொல்ல வேண்டும்?

2733. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)


إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ


Darimi-1434

ஹதீஸின் தரம்: More Info

பாடம்:

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது சொல்லவேண்டியவை.

1434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறட்டும். பின்பு, “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;

பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)


إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ


Darimi-1764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ»


Darimi-1763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

உர்வா (ரஹ்) கூறினார்:

ஆயிஷா (ரலி) அவர்கள் நன்மைக்கு அழைக்கவில்லை. (இதன் பொருள்: இந்த செயல் நன்மை என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) கூறவில்லை என்றும் இருக்கலாம்)

 


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»

فَقَالَ عُرْوَةُ: أَمَا إِنَّهَا لَا تَدْعُو إِلَى خَيْرٍ


Next Page » « Previous Page