ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
ருகூவிலும், ஸஜ்தாவிலும் இரு கைகளை உயர்த்துவது.
1285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறி தம் இருகைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவுக்கு செல்லும் போதும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறி தம் இருகைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே செய்வார்கள். இருஸஜ்தாவிற்கிடையிலும், அல்லது ஸஜ்தாவுக்குச் செல்லும்போதும் இவ்வாறு கைகளை உயர்த்த மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا دَخَلَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ، كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ أَوْ فِي السُّجُودِ»
சமீப விமர்சனங்கள்