8441. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்றுவிடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு செல்வ செழிப்பினால் குழப்பம் ஏற்படும். அதனுடைய (ஆரம்பம் எனும்) புகை எனது குடும்பத்தாரைச் சேர்ந்த மனிதரின் காலிலிருந்து உருவாகும். அவர் என்னைச் சேர்ந்தவர் என்று அவர் கருதிக் கொள்வார். ஆனால் அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல. என்னுடைய நேசர்கள் யாரெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களே!
பின்பு மக்கள், விலா எழும்பின் மீதுள்ள … போன்று (உறுதியில்லாத) ஒரு மனிதரின் தலைமையின் கீழ் ஒன்று சேர்வார்கள். பின்பு (துஹைமா எனும்) இருள்சூழ்ந்த குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பம் இந்த சமுதாயத்தில் كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْفِتَنَ وَأَكْثَرَ فِي ذِكْرِهَا حَتَّى ذَكَرَ فِتْنَةَ الْأَحْلَاسِ، فَقَالَ قَائِلٌ: وَمَا فِتْنَةُ الْأَحْلَاسِ؟ قَالَ: ” هِيَ فِتْنَةَ هَرَبٍ وَحَرْبٍ، ثُمَّ فِتْنَةُ السَّرَّى – أَوِ السَّرَّاءِ – ثُمَّ يَصْطَلِحُ النَّاسُ عَلَى رَجُلٍ كَوَرِكٍ عَلَى ضِلَعٍ، ثُمَّ فِتْنَةُ الدَّهْمَاءِ لَا تَدَعُ مِنْ هَذِهِ الْأُمَّةِ إِلَّا لَطَمَتْهُ لَطْمَةً، فَإِذَا قِيلَ انْقَطَعَتْ تَمَادَتْ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، حَتَّى يَصِيرَ النَّاسُ إِلَى فُسْطَاطَيْنِ: فُسْطَاطِ إِيمَانٍ لَا نِفَاقَ فِيهِ، وَفُسْطَاطِ نِفَاقٍ لَا إِيمَانَ فِيهِ، فَإِذَا كَانَ ذَاكُمْ فَانْتَظِرُوا الدَّجَّالَ مِنَ الْيَوْمِ أَوْ غَدٍ
சமீப விமர்சனங்கள்