Category: ஹாகிம்

Hakim

Hakim-193

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் இந்த சமுதாயம் மூன்று பிரிவினராக எழுப்பப்படுவார்கள். ஒரு பிரிவினர் எந்தக் கேள்வியுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள். மற்றொரு பிரிவினர் எளிதான கேள்வி கேட்கப்பட்டு பின்பு சொர்க்கத்தில் நுழைவார்கள். மற்றொரு பிரிவினர் தங்கள் முதுகுகளில் உறுதியான மலைகளைப் போன்று பாவங்களை சுமந்து வருவார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் நன்கு அறிந்திருந்தும், “இவர்கள் யார்? என்று அல்லாஹ் கேட்பான். அப்போது (வானவர்கள்) “இவர்கள் உன்னுடைய அடியார்களில் உள்ள சிலர்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் அவர்களிடம், “அவர்களை விட்டு அவர்களின் பாவங்களை இறக்கி அதை யூதர்களின் மீதும் கிருத்தவர்களின் மீதும் வையுங்கள்; என்னுடைய அருளால் அவர்களை சொர்க்கத்தில் நுழையச் செய்யுங்கள்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

 


تُحْشَرُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثَةِ أَصْنَافٍ: صِنْفٌ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، وَصِنْفٌ يُحَاسَبُونَ حِسَابًا يَسِيرًا ثُمَّ يَدْخُلُونَ الْجَنَّةَ، وَصِنْفٌ يَجِيئُونَ عَلَى ظُهُورِهِمْ أَمْثَالُ الْجِبَالِ الرَّاسِيَاتِ ذُنُوبًا، فَيَسْأَلُ اللَّهُ عَنْهُمْ وَهُوَأَعْلَمُ بِهِمْ فَيَقُولُ: مَا هَؤُلَاءِ؟ فَيَقُولُونَ: هَؤُلَاءِ عَبِيدٌ مِنْ عِبَادَكَ فَيَقُولُ: حُطُّوهَا عَنْهُمْ وَاجْعَلُوهَا عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى وَأَدْخِلُوهُمْ بِرَحْمَتِي الْجَنَّةَ


Hakim-791

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

791. நீ பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உனது வலது காலால் ஆரம்பிப்பதும், நீ வெளியேறினால் உனது இடது காலால் ஆரம்பிப்பதும் நபிவழியாகும் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் குர்ரா (ரஹ்)


«مِنَ السُّنَّةِ إِذَا دَخَلْتَ الْمَسْجِدَ أَنْ تَبْدَأَ بِرِجْلِكَ الْيُمْنَى، وَإِذَا خَرَجْتَ أَنْ تَبْدَأَ بِرِجْلِكَ الْيُسْرَى»


Hakim-3507

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3507. பள்ளிவாசல்களுக்கு (அல்லாஹ்வின் அடியார்களில்) சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். அவர்களின் சபைத்தோழர்களாக வானவர்கள் இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் ஸல்லாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)


«إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا هُمْ أَوْتَادُهَا لَهُمْ جُلَسَاءُ مِنَ الْمَلَائِكَةِ، فَإِنْ غَابُوا سَأَلُوا عَنْهُمْ، وَإِنْ كَانُوا مَرْضَى عَادُوهُمْ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ»


Hakim-2010

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ”அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வமின் ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த அவரது பருமடைந்த பிள்ளைகளும் தூங்கும் சமயம் இதை ஓதுவார்கள். பருவமடையாத பிள்ளைகள் என்றால் இதை எழுதி அவர்களின் கழுத்தில் மாட்டிவிடுவார்கள்.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِكَلِمَاتٍ مِنَ الْفَزَعِ «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَمِنْ عِقَابِهِ وَمِنْ شَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ»

قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَمَنْ بَلَغَ مِنْ وَلَدٍ عَلَّمَهُنَّ إِيَّاهُ فَقَالَهُنَّ عِنْدَ قَوْمِهِ وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فَعَلَّقَهَا فِي عُنُقِهِ.


Hakim-7579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (செல்லும் வழியில்) ஒரு பெண்ணை கடந்து சென்றார்கள். (அதைக் கண்ட) அந்த பெண் அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுத்து உணவு ஏற்பாடு செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த பாதை வழியாக) திரும்பி வந்த சமயம், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக உணவு ஏற்பாடு செய்துள்ளோம். வாருங்கள்; சாப்பிடுங்கள்! என்று அந்தப் பெண் விருந்துக்கு அழைத்தார். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (அந்தப் பெண்ணின் வீட்டிற்குள்) நுழைந்தனர். நபி (ஸல்) அவர்கள் உண்ண ஆரம்பிப்பதற்கு முன் நபித்தோழர்கள் உண்ணமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு கவளத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் அதை அவர்களால் விழுங்க முடியவில்லை. அப்போது “இந்த ஆடு அதனின் உரிமையாளர் அனுமதியின்றி அறுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அந்தப் பெண், அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் பின் முஆத் குடும்பத்தாரிடமிருந்து (அனுமதியின்றி) எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் வெட்கப்படமாட்டோம். அவர்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களிடமிருந்து அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று விளக்கம் கூறினார்.

அறிவிப்பவர்:

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ مَرُّوا بِامْرَأَةٍ فَذَبَحَتْ لَهُمْ شَاةً وَاتَّخَذَتْ لَهُمْ طَعَامًا فَلَمَّا رَجَعَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا اتَّخَذْنَا لَكُمْ طَعَامًا فَادْخُلُوا فَكُلُوا، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ وَكَانُوا لَا يَبْدَءُونَ حَتَّى يَبْدَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ لُقْمَةً فَلَمْ يَسْتَطِعْ أَنْ يُسِيغَهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ شَاةٌ ذُبِحَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» فَقَالَتِ الْمَرْأَةُ: يَا نَبِيَّ اللَّهِ إِنَّا لَا نَحْتَشِمُ مِنْ آلِ مُعَاذٍ وَلَا يَحْتَشِمُونَ مِنَّا، إِنَّا نَأْخُذُ مِنْهُمْ وَيَأْخُذُونَ مِنَّا


Hakim-3791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3791. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து பொருளின் சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி முறையிட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறிய சிலவை எனக்கு கேட்டது. சிலவை எனக்கு சரியாக கேட்கவில்லை.

கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள், (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனது கணவர் (அவ்ஸ் பின் ஸாமித்-ரலி) எனது இளமையை பயன்படுத்திக்கொண்டார். அவருக்காக வாரிசுகளை பெற்றுக்கொடுத்தேன். இப்போது எனக்கு வயோதிகம் ஏற்பட்டு அவருக்காக வாரிசுகள் பெற்றுக் கொடுப்பது நின்றுவிட்டது. அதனால் அவர் என்னை “ளிஹார்” செய்துவிட்டார் என்று கூறி, “அல்லாஹ்வே! உன்னிடம் இதை முறையிடுகிறேன் என்றும் கூறினார். சிறிது நேரத்திற்குள் ஜிப்ரீல் (அலை) அவர்கள், “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை (நபி-ஸல்-அவர்களுக்கு) கொண்டுவந்தார்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)

உர்வா (ரஹ்) கூறுகிறார்:

கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்களின் கணவர் அவ்ஸ் பின் ஸாமித் (ரலி) என்பவராவார்.

குறிப்பு:

تَبَارَكَ الَّذِي وَسِعَ سَمْعُهُ كُلَّ شَيْءٍ إِنِّي لَأَسْمَعُ كَلَامَ خَوْلَةَ بِنْتِ ثَعْلَبَةَ وَيَخْفَى عَلَيَّ بَعْضُهُ، وَهِيَ تَشْتَكِي زَوْجَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَقُولُ: يَا رَسُولَ اللَّهِ، أَكَلَ شَبَابِي وَنَثَرْتُ لَهُ بَطْنِي، حَتَّى إِذَا كَبِرَتْ سِنِّي وَانْقَطَعَ لَهُ وَلَدِي ظَاهَرَ مِنِّي اللَّهُمَّ إِنِّي أَشْكُو إِلَيْكَ. قَالَتْ عَائِشَةُ: ” فَمَا بَرِحَتْ حَتَّى نَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِهَؤُلَاءِ الْآيَاتِ {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا} [المجادلة: 1] ، قَالَ: وَزَوْجُهَا أَوْسُ بْنُ الصَّامِتِ


Hakim-2463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2463. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கறுத்த நிறமுடையை மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் கறுத்த, நாற்றமுள்ள, அசிங்க முகம் கொண்ட மனிதன்; எனக்கு செல்வமும் இல்லை. நான் (போரில் எதிரிகளிடம்) சண்டையிட்டு கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்” என்று பதிலளித்தார்கள். அவர் சண்டையிட்டு அதில் கொல்லப்பட்டார். அவரிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், “உனது முகத்தை அல்லாஹ் வெண்மையாக்கிவிட்டான்; உனது வாசனையை நறுமணமாக்கிவிட்டான்; உனது செல்வத்தை அதிகமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.

மேலும் அவரின் விசயத்திலோ அல்லது மற்றவரின் விசயத்திலோ நபி (ஸல்) கூறினார்கள்:

அவரின் சொர்க்கத்து கண்ணழகி அவர் அணிந்திருக்கும் ஸூஃப் என்னும் கம்பளி ஆடையினுள் நுழைந்து அவரிடம் சண்டையிடுவதை நான் பார்த்தேன்.


أَنَّ رَجُلًا أَسْوَدَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ أَسْوَدُ مُنْتِنُ الرِّيحِ، قَبِيحُ الْوَجْهِ، لَا مَالَ لِي، فَإِنْ أَنَا قَاتَلْتُ هَؤُلَاءِ حَتَّى أُقْتَلَ، فَأَيْنَ أَنَا؟ قَالَ: «فِي الْجَنَّةِ» فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «قَدْ بَيَّضَ اللَّهُ وَجْهَكَ، وَطَيَّبَ رِيحَكَ، وَأَكْثَرَ مَالَكَ»

وَقَالَ لِهَذَا أَوْ لِغَيْرِهِ: «لَقَدْ رَأَيْتُ زَوْجَتَهُ مِنَ الْحُورِ الْعِينِ، نَازَعَتْهُ جُبَّةً لَهُ مِنْ صُوفٍ، تَدْخُلُ بَيْنَهُ وَبَيْنَ جُبَّتِهِ»


Hakim-7912

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7912.


سَأَلْتُ أَبَا ثَعْلَبَةَ، عَنْ هَذِهِ الْآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] فَقَالَ أَبُو ثَعْلَبَةَ: لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا، أَنَا سَأَلْتُ عَنْهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلًا فَقَالَ: «يَا أَبَا ثَعْلَبَةَ، مُرُوا بِالْمَعْرُوفِ وَتَنَاهَوْا عَنِ الْمُنْكَرِ، فَإِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا وَهَوًى مُتَّبَعًا وَدُنْيَا مُؤْثَرَةً وَرَأَيْتَ أَمْرًا لَابُدَّ لَكَ مِنْ طَلَبِهِ فَعَلَيْكَ نَفْسَكَ وَدَعْهُمْ وَعَوَامَّهُمْ، فَإِنَّ وَرَاءَكُمْ أَيَّامَ الصَّبْرِ صَبْرٌ فِيهِنَّ كَقَبْضٍ عَلَى الْجَمْرِ لِلْعَامِلِ فِيهِنَّ أَجْرُ خَمْسِينَ يَعْمَلُ مِثْلَ عَمَلِهِ»


Hakim-7138

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7138. கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் ஆதமுடைய மகன் இவ்வாறு சாப்பிடுவதால் ஷைத்தான் கோபமடைகிறான். மேலும் அவன், “பழைய பேரீத்தம்பழத்துடன் புதிய பேரீத்தம்பழத்தை சாப்பிடும் அளவிற்கு ஆதமுடைய மகன் உயிர்வாழ்கிறான் என்றும் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كُلُوا الْبَلَحَ بِالتَّمْرِ فَإِنَّ الشَّيْطَانَ إِذَا أَكَلَهُ ابْنُ آدَمَ غَضِبَ وَقَالَ بَقِيَ ابْنُ آدَمَ حَتَّى أَكَلَ الْجَدِيدَ بِالْخَلَقِ»


Hakim-1908

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1908. நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், அத்துக்லானு அலல்லாஹ்..

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. சார்ந்திருத்துல் அவனை மட்டுமே)

என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ يَقُولُ: «بِسْمِ اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ»


Next Page » « Previous Page