ஹதீஸின் தரம்: விபரம் கீழே
2757. இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:
நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், அபுல்முஃகீரா அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸாலிம் —> அலாஉ பின் உத்பா —> உமைர் பின் ஹானிஃ —> இப்னு உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்துக் கேட்டேன்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்றுவிடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு செல்வ செழிப்பினால் குழப்பம் ஏற்படும். அதனுடைய (ஆரம்பம் எனும்) புகை எனது குடும்பத்தாரைச் சேர்ந்த மனிதரின் காலிலிருந்து உருவாகும். அவர் என்னைச் சேர்ந்தவர் என்று அவர் கருதிக் கொள்வார். ஆனால் அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல. என்னுடைய
كُنّا عِندَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قُعُودًا ، فَذَكَرَ الفِتَنَ ، فَأَكثَرَ فِي ذِكرِها حَتَّى ذَكَرَ فِتنَةَ الأَحلاسِ ، فَقالَ قائِلٌ : وَما فِتنَةُ الأَحلاسِ ؟ قالَ : هِيَ فِتنَةُ هَرَبٍ وَحَربٍ ، قالَ : ثُمَّ فِتنَةُ السَّراء دَخنُها مِن تَحتِ قَدَمَي رَجُلٍ مِن أَهلِ بَيتِيَ يَزعُمُ أَنَّهُ مِنِّي وَلَيسَ مِنِّي ، إِنَّما أَولِيائِيَ المُتَّقُونَ وَذَكَرَ الحَدِيثَ.
قالَ أَبِي : رَوَى هَذا الحَدِيثَ ابنُ جابِرٍ ، عَن عُميَرِ بنِ هانِئٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، مُرسَلاً ، والحَدِيثُ عِندِي فلَيسَ بِصَحِيحٍ ، كَأَنَّهُ مَوضُوعٌ.
சமீப விமர்சனங்கள்