26. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், முஆத் பின் ஹிஷாம் அவர்கள், தனது தந்தை ஹிஷாம் —> கதாதா —>அபூகிலாபா —> காலித் பின் லஜ்லாஜ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நான் என்னுடைய ரப்பை கண்ணியமிக்கவனாகவும் மகத்துவமிக்கவனாகவும் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியும்; உளூவை முழுமையாகச் செய்வது போன்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ள செய்தியுமான இதைப் பற்றி கேட்டேன்.
அதற்கு எனது தந்தை (அபூஹாதிம்) கூறினார்:
இந்த ஹதீஸை வலீத் பின் முஸ்லிம், ஸதகா ஆகிய இருவரும் இப்னு ஜாபிர் வழியாக அறிவித்துள்ளனர்.
இப்னு ஜாபிர் கூறினார்:
‘நாங்கள் மக்ஹூல் உடன் இருந்தோம். அப்போது காலித் பின் லஜ்லாஜ் அவரை கடந்து சென்றார். மக்ஹூல் கூறினார்: அபூஇப்ராஹீமே! எங்களிடம் ஹதீஸ் கூறுங்கள்.’ அப்போது காலித் பின் லஜ்லாஜ் கூறினார்: ‘இப்னு ஆயிஷ் அல்-ஹள்ரமீ அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார் என்று கூறினார்.
எனது தந்தை அபூஹாதிம் கூறினார்: “இதுவே மிகவும் சரியானதாகத் தோன்றுகிறது. மேலும், கதாதா அவர்கள் அபூகிலாபாவிடமிருந்து சில எழுத்துக்களைத் தவிர வேறு எதுவும் செவியுற்றதில்லை என்று கூறப்படுகிறது.
رأيتُ ربِّي عزّ وجلّ وذكر الحدِيث فِي إسباغ الوضوء ونحوه.
قال أبِي : هذا رواهُ الولِيدُ بن مُسلِم وصدقة ، عنِ ابنِ جابِر ، قال : كُنّا مع مكحولٍ فمرّ بِهِ خالِد بن اللجلاج ، فقال مكحول : يا أبا إِبراهِيم ، حدّثنا ، فقال حدّثنِي ابن عائش الحضرمي ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبِي : وهذا أشبهُ ، وقتادة يُقال : لم يسمع من أبِي قِلابة إِلاَّ أحرفًا ، فإنه وقع إِليهِ كتابٌ من كتبِ أبِي قِلابة ، فلم يميزوا بين عَبد الرّحمنِ بن عايش ، وبين ابن عبّاس.
قال أبِي : وروى هذا الحديث جهضمُ بن عَبدِ اللهِ اليمامي ، وموسى بن خلف العمي ، عن يحيى بنِ أبِي كثِيرٍ ، عن زيدِ بنِ سلام ، عن جدِّهِ : ممطور ، عن أبِي عَبدِ الرّحمنِ السكسكي ، عن مالِكِ بنِ يخامر ، عن معاذ بن جبل ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبِي : وهذا أشبهُ من حدِيث ابن جابِر.
சமீப விமர்சனங்கள்