ஹதீஸின் தரம்: விபரம் கீழே
687. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், ஆஸிம் —> ஹஃப்ஸா பின்த் ஸீரீன் —> ரபாப் பின்த் ஸுலைஃ —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் (ஹஃப்ஸா அவர்கள், ரபாபிடமிருந்து முர்ஸலாக அறிவிப்பதைப் போன்று) அறிவிக்கும் (கீழ்கண்ட) செய்தி பற்றி என் தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நோன்பாளியாக இருந்தால் பேரீச்சம்பழத்தால் நோன்பு துறங்கள்! பேரீச்சம்பழம் கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறங்கள்!. ஏனெனில் அது நன்கு தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.
அதற்கு எனது தந்தை அபூஹாதிம் அவர்கள், இந்தச் செய்தியை ஹிஷாம் பின் ஹஸ்ஸான் அவர்களும் இன்னும் பலரும் ஹஃப்ஸா அவர்களிடமிருந்து மவ்ஸூலாக நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்று கூறினார்.
நான் இரண்டில் எது சரியானது? என என் தந்தையிடம் கேட்டேன்.
அதற்கவர்கள், இரண்டுவகை அறிவிப்பாளர்தொடருமே சரியானது தான். ஹம்மாத் பின் ஸலமா இவ்வாறு அறிவிப்பாளர்தொடரை சுருக்கி அறிவித்துவிட்டார். ஆஸிம் வழியாகவும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.
إِذا صام أحدُكُم فليُفطِر على التّمرِ ، فإِن لم يجِد ، فليُفطِر على الماءِ ، فإِنّهُ طهُورٌ.
قال أبِي : وروى هذا الحدِيث هِشامُ بنُ حسّانٍ ، وغيرُ واحِدٍ ، عن حفصة ، عنِ الرّبابِ ، عن سلمان ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قُلتُ لأبِي : أيُّهُما أصحُّ ؟
قال : جمِيعًا صحِيحين ، قصّر بِهِ حمّادٌ ، وقد روى عن عاصِمٍ ، أيضًا نحوهُ.
சமீப விமர்சனங்கள்