Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-1835

ஹதீஸின் தரம்: Pending

1835. நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் எங்களுக்கு ‘‘அல்லதீன கஃபரூ வஸத்தூ அன் ஸபீலில்லாஹி” எனத் துவங்கும் (47வது அத்தியாயத்தை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«قَرَأَ بِهِمْ فِي الْمَغْرِبِ بِـ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ».


Ibn-Hibban-1836

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1836.


أَنَّهُ سَمِعَ مَرْوَانَ يَقْرَأُ بِـ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ، فَقَالَ زَيْدٌ: «فَحَلَفْتُ بِاللَّهِ، لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطَّوِيلَتَيْنِ


Ibn-Hibban-2186

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2186. காலணிகளுடன் தொழுது யூத, கிருத்தவர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«خَالِفُوا الْيَهُودَ وَالنَّصَارَى فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي خِفَافِهِمْ وَلَا فِي نِعَالِهِمْ».


Ibn-Hibban-4189

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4189.

பெண்களை அடிக்காதீர்கள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனால் பெண்கள் துணிச்சல் பெற்று (பழைய) குணம் கெட்டு கணவன்மார்களை எதிர்த்துப் பேசி சண்டையிட ஆரம்பித்தனர். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! பெண்களை அடிக்காதீர்கள்! என்று நீங்கள் தடையிட்டதிலிருந்து அவர்கள் குணம் கெட்டு கணவன்மார்களை எதிர்த்துப் பேசி சண்டையிடுகின்றனர் என்று முறையிட்டார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள், பெண்களை அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி (அனுமதி வழங்கி)னார்கள். அந்த இரவில் கணவன்மார்கள் மனைவிமார்களை அடித்துவிட்டனர். அதனால் நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப்பதாகப் புகார் செய்தனர்.

எனவே, காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சென்ற இரவில் முஹம்மதின் குடும்பத்தாரிடம் 70 வது பெண்கள் வந்து தங்களது கணவன்மார்கள் அடிப்பதாகப் புகார் கூறியுள்ளனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)…


«لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ» قَالَ: فَذَئِرَ النِّسَاءُ وَسَاءَتْ أَخْلَاقُهُنَّ عَلَى أَزْوَاجِهِنَّ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: ذَئِرَ النِّسَاءُ وَسَاءَتْ أَخْلَاقُهُنَّ عَلَى أَزْوَاجِهِنَّ مُنْذُ نَهَيْتَ عَنْ ضَرْبِهِنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَاضْرِبُوا» فَضَرَبَ النَّاسُ نِسَاءَهُمْ تِلْكَ اللَّيْلَةَ فَأَتَى نِسَاءٌ كَثِيرٌ يَشْتَكِينَ الضَّرْبَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ أَصْبَحَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ اللَّيْلَةَ سَبْعُونَ امْرَأَةً كُلُّهُنَّ يَشْتَكِينَ الضَّرْبَ وَايْمُ اللَّهِ لَا تَجِدُونَ أُولَئِكَ خِيَارُكُمْ»


Ibn-Hibban-6702

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6702.


لَمَّا افْتَتَحَ رَسُولُ اللَّهِ مَكَّةَ خَرَجَ بِنَا مَعَهُ قِبَلَ هَوَازِنَ، حَتَّى مَرَرْنَا عَلَى سِدْرَةِ الْكُفَّارِ، سِدْرَةٌ يَعْكِفُونَ حَوْلَهَا وَيَدْعُونَهَا ذَاتَ أَنْوَاطٍ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ أَكْبَرُ، إِنَّهَا السُّنَنُ هَذَا كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ، قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ} [الأعراف: 138]، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: » إِنَّكُمْ لَتَرْكَبُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ


Ibn-Hibban-2195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2195. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது நான் (பள்ளிக்கு) வந்தேன். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து) கொண்டேன்.

(தொழுகையை முடித்த பிறகு) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் (ரஹ்)


أَنَّهُ دَخَلَ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ، قَالَ: فَرَكَعْتُ دُونَ الصَّفِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ».


Ibn-Hibban-2194

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2194. ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவு செய்து கொண்டிருந்த போது அபூபக்ரா (ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வந்தார்கள். தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து பிறகு நடந்து வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பிறகு “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.


أَنَّ أَبَا بَكْرَةَ، دَخَلَ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ فَرَكَعَ، ثُمَّ مَشَى حَتَّى لَحِقَ بِالصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ».


Ibn-Hibban-2305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2305.


أَنَّهُ أَتَى جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ جَابِرٌ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي فَوَجَدْتُهُ يُصَلِّي وَعَلَيَّ ثَوْبٌ وَاحِدٌ [ص:80] اشْتَمَلْتُ بِهِ، وَصَلَّيْتُ إِلَى جَنْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَا السُّرَى يَا جَابِرُ؟ » فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «يَا جَابِرُ، مَا هَذَا الِاشْتِمَالُ الَّذِي رَأَيْتُ؟ » فَقُلْتُ: كَانَ ثَوْبًا وَاحِدًا ضَيِّقًا، فَقَالَ: «إِذَا صَلَّيْتَ وَعَلَيْكَ ثَوْبٌ وَاحِدٌ، فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ».


Ibn-Hibban-2574

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)


«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»


Ibn-Hibban-6247

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6247. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்கள் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً»


Next Page » « Previous Page