Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-6731

ஹதீஸின் தரம்: More Info

6731. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்களும் அவ்வாறே பிரிந்தனர். (என்னுடைய) இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الْيَهُودَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً – أَوِ اثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً – وَالنَّصَارَى عَلَى مِثْلِ ذَلِكَ، وَتَتَفَرَّقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً»


Ibn-Hibban-429

ஹதீஸின் தரம்: More Info

429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தி உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«رِضَاءُ اللَّهِ فِي رِضَاءِ الْوَالِدِ، وَسَخَطُ اللَّهِ فِي سَخَطِ الْوَالِدِ».


Ibn-Hibban-1848

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1848. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்கு பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே!” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். என்றாலும் உம்முல் கிதாப் (அல்ஹம்து சூராவை) மட்டும் ஓதிக் கொள்ளுங்கள். ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று கூறினார்கள்.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» قَالَ: قُلْنَا: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ هَذًّا، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»


Ibn-Hibban-1793

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1793.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ فَصَاعِدًا».


Ibn-Hibban-1792

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1792. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு ஃபஜ்ர் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் எனக்கு பின்னால் ஓதினீர்களா?” என்று கேட்டார்கள்.

“நாங்கள் ஆம்! என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். என்றாலும் உம்முல் கிதாப் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள். ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று கூறினார்கள்.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «تَقْرَءُونَ خَلْفِي؟ » قُلْنَا: نَعَمْ، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا».


Ibn-Hibban-1786

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1786.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ فَصَاعِدًا»


Ibn-Hibban-1785

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1785. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்கு பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே!” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். என்றாலும் உம்முல் கிதாப் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள்). ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று கூறினார்கள்.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ: قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ» قَالَ: قُلْنَا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، هَذَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»


Ibn-Hibban-1782

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1782. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Ibn-Hibban-1852

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1852. நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தை ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்களில் ஒருவர் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (என்றாலும்) “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

இப்னு ஹிப்பான் (அபூஹாதிம்) கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூகிலாபா அவர்கள், முஹம்மது பின் அபூஆயிஷாவிடமிருந்தும் கேட்டுள்ளார். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் கேட்டுள்ளார். இரண்டு வழிகளில் வரும் செய்தியும் மஹ்ஃபூல் ஆகும்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ، وَالْإِمَامُ يَقْرَأُ؟ »، فَسَكَتُوا، قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ، أَوْ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ».


Ibn-Hibban-1844

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1844. நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தை ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்களில் ஒருவர் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (என்றாலும்) “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ، وَالْإِمَامُ يَقْرَأُ؟ » فَسَكَتُوا، فَقَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ، أَوْ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ».


Next Page » « Previous Page