Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-2911

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2911. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.

அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةَ كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتْ: مَهْ، فَإِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ بِالشِّرْكِ وَجَاءَ بِالْإِسْلَامِ، فَتَرَكَهَا وَوَلَّى فَجَعَلَ يَلْتَفِتُ خَلْفَهُ وَيَنْظُرُ إِلَيْهَا حَتَّى أَصَابَ وَجْهُهُ حَائِطًا، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالدَّمُ يَسِيلُ عَلَى وَجْهِهِ، فَأَخْبَرَهُ بِالْأَمْرِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا، عَجَّلَ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ ذَنْبَهُ، حَتَّى يُوَافِيَ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَائِرٌ»


Ibn-Hibban-2410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2410. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Ibn-Hibban-2407

ஹதீஸின் தரம்: More Info

2407. “வித்ரு தொழுகை அவசியமாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِهَا، وَمَنْ شَقَّ عَلَيْهِ ذَلِكَ فَلْيُومِئْ إِيمَاءً»


Ibn-Hibban-2471

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2471. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அறிவிப்பவர் : கைஸ் (ரலி)


«أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَلَّمَ مَعَهُ، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ»


Ibn-Hibban-1563

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1563. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அறிவிப்பவர் : கைஸ் (ரலி)


«أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَرْكَعُ رَكْعَتَيِ الْفَجْرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ»


Ibn-Hibban-5475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் வந்துள்ள கட்டளை.

5475. நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى»


Ibn-Hibban-786

ஹதீஸின் தரம்: More Info

786. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் இறுதி பத்து வசனங்களை ஓதுபவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ»


Ibn-Hibban-785

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

785. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை ஓதுபவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»


Ibn-Hibban-769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

769. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (தமது வீட்டில்) “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தார். அவர் அருகில் வாகனப் பிராணி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. (தீடீரென) அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அவர் பார்க்கும் போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.


إِنَّ رَجُلًا كَانَ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ وَدَابَّتُهُ مُوثَقَةٌ، فَجَعَلَتْ تَنْفِرُ، تَرَى مِثْلَ الضَّبَابَةِ أَوِ الْغَمَامَةِ قَدْ غَشِيَتْهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «اقْرَأْ يَا فُلَانُ، تِلْكَ السَّكِينَةُ أُنْزِلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ لِلْقُرْآنِ»


Ibn-Hibban-2018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2018. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்குணங்களை வழமையாக கடைப்பிடித்து வரும் எந்த அடியாரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதை செய்பவர்கள் குறைவானவர்களே!

(அவ்விரண்டில் முதலாவது) உங்களில் ஒருவர், ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

மேலும் (அவ்விரண்டில் இரண்டாவது) அவர் படுக்கையில் (தூங்கும் முன்) ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும்.(ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்)  என்று கூறிய  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “உங்களில் யார் தான் (ஒரு நாளில்) இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

இதை அறிவித்த அப்துல்லாஹ்

«خَصْلَتَانِ لَا يُحْصِيهِمَا عَبْدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، وَهُمَا يَسِيرً وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ اللَّهَ أَحَدُكُمْ فِي دُبُرُ كُلُّ صَلَاةٍ عَشْرًا، وَيُحَمِّدُهُ عَشْرًا، وَيُكَبِّرُهُ عَشْرًا، فَتِلْكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ يُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُحَمِّدُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ»، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيُّكُمْ يَعْمَلُ فِي يَوْمٍ وَلَيْلَةٍ أَلْفَيْنِ وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ؟ » قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْقِدُهُنَّ بِيَدِهِ، قَالَ: فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ لَا يُحْصِيهَا؟ قَالَ: «يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ، وَهُوَ فِي صَلَاتِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ فَيُنَوِّمُهُ»


Next Page » « Previous Page