Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-2012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2012. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே!

அவ்விரண்டில் முதல் நற்செயல் அவர் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல்) அவர் (தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று 100-தடவை கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்)

«خَصْلَتَانِ لَا يُحْصِيهُمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ اللَّهَ دُبُرَ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُهُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا»، قَالَ: فَأَنَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْقِدُهَا بِيَدِهِ *، قَالَ: فَقَالَ: «خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ وَحَمَّدَ وَكَبَّرَ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ الْوَاحِدِ أُلْفِيَنَّ وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ» قَالَ: كَيْفَ لَا يُحْصِيهِمَا؟ قَالَ: «يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ، وَهُوَ فِي صَلَاةٍ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، حَتَّى شَغَلَهُ، وَلَعَلَّهُ أَنْ لَا يَعْقِلَ، وَيَأْتِيهِ فِي مَضْجَعِهِ فَلَا يَزَالُ يُنَوِّمُهُ حَتَّى يَنَامَ»


Ibn-Hibban-843

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

843. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை(விரல்)களால் எண்ணுவதை பார்த்தேன்.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ بِيَدِهِ»


Ibn-Hibban-3309

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3309. அனஸ் பின் மாலிக் அவர்கள் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். கெட்ட மரணத்தை விட்டும் தடுக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«الصَّدَقَةُ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ»


Ibn-Hibban-1860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1860. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், எழுந்து நின்று “தக்பீர்’கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் “ருகூஉ’ செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைத்தார்கள்.

பின்னர் தமது தலையை (“ருகூஉ’விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் “சஜ்தா’ செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டைவிரலையும்

قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي، فَنَظَرْتُ إِلَيْهِ حِينَ قَامَ، «فَكَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَالرُّسْغِ، وَالسَّاعِدِ، ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا، ثُمَّ رَكَعَ، فَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا، ثُمَّ سَجَدَ، فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ فَخِذَهُ الْيُسْرَى، [وَجَعَلَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ، وَرُكْبَتِهِ الْيُسْرَى]، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَعَقَدَ ثِنْتَيْنِ مِنْ أَصَابِعِهِ، وَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ، فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا»، ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ، فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ جُلُّ الثِّيَابِ تَتَحَرَّكُ أَيْدِيهِمْ تَحْتَ الثِّيَابِ.


Ibn-Hibban-693

ஹதீஸின் தரம்: Pending

693. ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.

அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)


سَمِعَ ابْنُ عُمَرَ صَوْتَ زُمَّارَةِ رَاعٍ، قَالَ: فَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ، وَعَدَلَ عَنِ الطَّرِيقِ وَجَعَلَ، يَقُولُ: يَا نَافِعُ أَتَسْمَعُ؟ فَأَقُولُ: نَعَمْ، فَلَمَّا قُلْتُ: لَا، رَاجَعَ الطَّرِيقَ، ثُمَّ، قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»


Ibn-Hibban-6754

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6754. என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியேற்றுள்ளோம்.

அறிவிப்பவர்கள் : அபூ ஆமிர் (ரலி), அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)


«لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ»


Ibn-Hibban-5056

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5056. அப்துல்லாஹ் பின் மவ்ஹப் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்.

மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன் அவர்களே! என்னை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பினேன் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் அவர்களே! அவசரப்படாதீர்கள், “யார் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டாரோ அவர் சிறந்த புகழிடத்தை பெற்றுக்கொண்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூற நீங்கள் கேட்டுள்ளீர்கள் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் ஆம், கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் என்னை நீதிபதி பதவிக்கு நியமிப்பதைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறினார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள், உங்கள் தந்தை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தீர்ப்பளிக்கும்

أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، قَالَ لِابْنِ عُمَرَ: اذْهَبْ فَكُنْ قَاضِيًا، قَالَ أَوَ تُعْفِينِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟، قَالَ: اذْهَبْ، فَاقْضِ بَيْنَ النَّاسِ، قَالَ تُعْفِيَنِي يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟، قَالَ: عَزَمْتُ عَلَيْكَ إِلَّا ذَهَبْتَ فَقَضَيْتَ، قَالَ: لَا تَعْجَلْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَاذَ بِاللَّهِ فَقَدْ عَاذَ مَعَاذًا»، قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنِّي أَعُوذُ بِاللَّهِ، أَنْ أَكُونَ قَاضِيًا، قَالَ: وَمَا يَمْنَعُكَ، وَقَدْ كَانَ أَبُوكَ يَقْضِي؟، قَالَ: لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا، فَقَضَى بِالْجَهْلِ، كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا، فَقَضَى بِالْجَوْرِ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا عَالِمًا يَقْضِي بِحَقٍّ أَوْ بِعَدْلٍ، سَأَلَ التَّفَلُّتَ كَفَافًا»، فَمَا أَرْجُو مِنْهُ بَعْدَ ذَا


Ibn-Hibban-1989

ஹதீஸின் தரம்: More Info

1989. “என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ


«صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ أَبِي بَكْرٍ فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عُمَرَ، فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ، فَلَمْ يَقْنُتْ، وَصَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ، فَلَمْ يَقْنُتْ» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ إِنَّهَا بِدْعَةٌ»


Ibn-Hibban-1980

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1980. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதினார்கள்…


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَنَتَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ»


Ibn-Hibban-63

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

63. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்கள் : அபூ ஹுமைத் (ரலி), அபூ உஸைத் (ரலி)


«إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تَعْرِفُهُ قُلُوبُكُمْ، وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ، فَأَنَا أَوْلَاكُمْ بِهِ، وَإِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ عَنِّي تُنْكِرُهُ قُلُوبُكُمْ، وَتَنْفِرُ عَنْهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ بَعِيدٌ، فَأَنَا أَبْعَدُكُمْ مِنْهُ»


Next Page » « Previous Page