Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-4177

ஹதீஸின் தரம்: More Info

4177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«خَيْرُكُمْ خَيْرَكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي، وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ»


Ibn-Hibban-3019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3019. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ»


Ibn-Hibban-3018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ»


Ibn-Hibban-480

ஹதீஸின் தரம்: Pending

480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நற்குணமுடையவர் தம் பண்புகளால் நோன்பு நோற்று , இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِخُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


Ibn-Hibban-1244

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1244. நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ مَاءِ الْبَحْرِ، فَقَالَ: «هُوَ الطُّهُورُ مَاؤُهُ، الْحِلُّ مَيْتَتُهُ»


Ibn-Hibban-5258

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5258. அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த ‎அளவு தண்ணீரையே எடுத்து செல்கிறோம்.‎நாங்கள் அந்த தண்ணீரை உலூச் செய்ய பயன் படுத்தினால் தாகத்தால் கஷ்டப் ‎படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) ‎அவர்களிடம் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎


سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنْا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ؟ فَقَالَ: «هُوَ الطُّهُورُ مَاؤُهُ، الْحِلُّ مَيْتَتُهُ»


Ibn-Hibban-1243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1243. அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த ‎அளவு தண்ணீரையே எடுத்து செல்கிறோம்.‎நாங்கள் அந்த தண்ணீரை உலூச் செய்ய பயன் படுத்தினால் தாகத்தால் கஷ்டப் ‎படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) ‎அவர்களிடம் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎


سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنْا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ؟ فَقَالَ: «هُوَ الطُّهُورُ مَاؤُهُ، الْحِلُّ مَيْتَتُهُ»


Ibn-Hibban-4072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எளிமையான திருமணமே சிறந்த திருமணம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதர் இல்லறவாழ்கையில் ஈடுபட்ட பின்பும் மஹர் தரவில்லை. அவரின் மரணத்தருவாயில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நான் மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன் என்று கூறினார்.

அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு லட்சம் திர்ஹத்தை பெற்றார்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ،

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: » أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةً «قَالَ: نَعَمْ، قَالَ لَهَا: أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكَ فُلَانًا» قَالَتْ: نَعَمْ، فَزَوَّجَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَفْرِضْ صَدَاقًا، فَدَخَلَ بِهَا، فَلَمْ يُعْطِهَا شَيْئًا، فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةً، وَلَمْ أَعْطِهَا شَيْئًا، وَقَدْ أُعْطِيتُهَا سَهْمِي مِنْ خَيْبَرَ، فَكَانَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ فَأَخَذَتْهُ فَبَاعَتْهُ فَبَلَغَ مِائَةَ أَلْفٍ


Ibn-Hibban-4101

ஹதீஸின் தரம்: Pending

4101. …


أَنَّ قَوْمًا أَتَوْا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، فَقَالُوا: جِئْنَاكَ لِنَسْأَلَكَ عَنْ رَجُلٍ تَزَوَّجَ مِنَّا، وَلَمْ يَفْرِضْ صَدَاقًا، وَلَمْ يَجْمَعْهُمَا اللَّهُ حَتَّى مَاتَ، فَقَالَ عَبْدُ اللَّهِ: مَا سُئِلْتُ عَنْ شَيْءٍ مُنْذُ فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ عَلَيَّ مِنْ هَذِهِ، فَأْتُوا غَيْرِي، فَاخْتَلَفُوا إِلَيْهِ شَهْرًا، ثُمَّ قَالُوا لَهُ فِي آخِرِ ذَلِكَ: مَنْ نَسْأَلُ إِنْ لَمْ نَسْأَلْكَ، وَأَنْتَ أُخَيَّةُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي هَذِهِ الْبَلْدَةِ، وَلَا نَجْدُ غَيْرَكَ، فَقَالَ: ابْنُ مَسْعُودٍ: سَأَقُولُ فِيهَا بِجَهْدِ رَأْيِي، إِنْ كَانَ صَوَابًا فَمِنَ اللَّهِ، وَإِنْ كَانَ خَطَأً فَمِنِّي، وَاللَّهُ وَرَسُولُهُ مِنْهُ بَرِيءٌ، أَرَى أَنْ يُفْرَضَ لَهَا كَصَدَاقِ نِسَائِهَا، وَلَا وَكْسَ، وَلَا شَطَطَ، وَلَهَا الْمِيرَاثُ، وَعَلَيْهَا الْعِدَّةُ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَذَلِكَ بِحَضْرَةِ نَاسٍ مِنْ أَشْجَعَ، فَقَامَ رَجُلٌ يُقَالُ لَهُ: مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ، فَقَالَ: «أَشْهَدُ أَنَّكَ قَضَيْتَ بِمِثْلِ الَّذِي قَضَى بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي امْرَأَةٍ مِنَّا، يُقَالُ لَهَا: بِرْوَعُ بِنْتُ وَاشِقٍ، فَمَا رُئِيَ عَبْدُ اللَّهِ فَرِحَ بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ كَفَرْحِهِ بِهَذِهِ الْقِصَّةِ»


Ibn-Hibban-4034

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4034. “பெண்களில் சிறந்தவர்கள் குறைந்த மஹரை (மணக்கொடை) கேட்பவர்களே” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُهُنَّ أَيْسَرُهُنَّ صَدَاقًا»


Next Page » « Previous Page