299. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினர் ரிஜ்ஸின் நஜிஸில் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” (பொருள்: அருவருக்கத்தக்கவனும், அசுத்தமானவனும் தீயவனும், தீமையைத் தூண்டுபவனுமான விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்வே உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறமுடியாதவராக ஆகிவிட வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
அபுல்ஹஸன் அல்கத்தான் அவர்கள் கூறினார்கள்:
இந்த செய்தியை அபூஹாதிம் அவர்கள், இப்னு அபூமர்யம் வழியாக எங்களுக்கு அறிவித்தார்கள். அதில் “மினர் ரிஜ்ஸின் நஜிஸ்’ எனும் வாசகத்தை கூறவில்லை. (மாறாக) “மினல் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” எனும் வாசகத்தை மட்டுமே கூறினார்.
لَا يَعْجِزْ أَحَدُكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجِسِ، الْخَبِيثِ الْمُخْبِثِ، الشَّيْطَانِ الرَّجِيمِ
قَالَ أَبُو الْحَسَنِ: وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ: ” مِنَ الرِّجْسِ النَّجِسِ، إِنَّمَا قَالَ: مِنَ الْخَبِيثِ الْمُخْبِثِ، الشَّيْطَانِ الرَّجِيمِ
சமீப விமர்சனங்கள்