Category: இப்னுமாஜா

Ibn-Majah-3727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3727.


«لَا تُسُبُّوا الرِّيحَ فَإِنَّهَا مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Ibn-Majah-3353

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உணவை வீசி எறிவது குறித்து வந்துள்ள தடை.

3353. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்) வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது (தரையில்) வீசப்பட்டிருந்த ஒரு ரொட்டித் துண்டைக் கண்டார்கள். அதை எடுத்து துடைத்து உண்டார்கள். பிறகு, “ஆயிஷாவே! கண்ணியமானதை (அதாவது உணவை) கண்ணியப்படுத்து. ஏனெனில் (உணவு எனும்) நற்பாக்கியம் ஒரு சமுதாயத்தை விட்டு நீங்கிவிட்டால் அது ஒருபோதும் திரும்பி வருவதில்லை” என்று கூறினார்கள்.


دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَأَخَذَهَا فَمَسَحَهَا، ثُمَّ أَكَلَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمًا، فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ، فَعَادَتْ إِلَيْهِمْ»


Ibn-Majah-4224

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் நன்மையான புகழால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.

நரகவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் தீமையான பழிச் சொல்லால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«أَهْلُ الْجَنَّةِ، مَنْ مَلَأَ اللَّهَ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ خَيْرًا، وَهُوَ يَسْمَعُ، وَأَهْلُ النَّارِ، مَنْ مَلَأَ اللَّهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا، وَهُوَ يَسْمَعُ»


Ibn-Majah-3858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ஹம்த், லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, அல்மன்னான், பதீஉஸ் ஸமாவாதி வல்அர்ள். துல்ஜலாலி வல்இக்ராம்

(பொருள்: அல்லாஹ்வே! எல்லாப் புகழும் உனக்கே உரியது என்பதன் மூலம் நான் உன்னிடம் கேட்கிறேன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை, நீ தனித்தவன், உனக்கு இணையில்லை. பேருபகாரன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன், மகத்துவமும் கண்ணியமும் உடையவன்.)

என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர் அல்லாஹ்வின் மகத்தான பெயரைக் கொண்டு கேட்டிருக்கிறார். அதன் மூலம் அவனிடம் கேட்டால் அவன் கொடுக்கிறான். அதன் மூலம் அவனை அழைத்தால் அவன் பதிலளிக்கிறான்” என்று கூறினார்கள்.


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، فَقَالَ: «لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ»


Ibn-Majah-1806

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1806. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களின் (விசாயத்திற்கான) ஸகாத்தை, அவர்களுடைய நீர்த்துறைகள் அருகிலேயே வசூலிக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Ibn-Majah-4141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4141.


«مَنْ أَصْبَحَ مِنْكُمْ مُعَافًى فِي جَسَدِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»


Ibn-Majah-4048

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குர்ஆனும், கல்வியறிவும் மறைந்து போகுதல்.

4048. ஸியாத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டபோது, “அது கல்வியறிவு மறைந்து போகும் நேரத்தில் நிகழும்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம்; எங்கள் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோம்; எங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளுக்கு மறுமை நாள் வரை கற்றுக் கொடுப்பார்களே! அப்படியிருக்கும்போது, கல்வி எப்படி மறைந்து போகும்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட்டும்! நான் உன்னை மதீனாவில் உள்ள அறிவார்ந்தவர்களில் ஒருவராகவே கருதினேன். இந்தக் கல்வி யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் உள்ளது போலவே இருக்கும். அவர்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதுகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள எதனையும் செயல்படுத்துவதில்லை” என்று கூறினார்கள்.


ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَقَالَ: «ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ، وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ، وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا، وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ، أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ، وَالنَّصَارَى، يَقْرَءُونَ التَّوْرَاةَ، وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا؟»


Ibn-Majah-4112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4112.


«الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا، إِلَّا ذِكْرَ اللَّهِ، وَمَا وَالَاهُ، أَوْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا»


Next Page » « Previous Page