Category: இப்னுமாஜா

Ibn-Majah-216

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

216.


«مَنْ قَرَأَ الْقُرْآنَ وَحَفِظَهُ، أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ، وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ، كُلُّهُمْ قَدِ اسْتوْجَبَ النَّارَ»


Ibn-Majah-3869

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3869. ஒரு அடியார் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும், “பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம்” என்று மூன்று முறை கூறினால் அவருக்கு எந்த ஒன்றும், தீங்கு செய்யாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

(இதன் பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயருடன் இருக்கும்போது வானத்திலோ, பூமியிலோ எந்தப் பொருளும் தீங்கு செய்யாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிபவன்.)

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


இந்த ஹதீஸை அறிவித்த அபான் (ரஹ்) அவர்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஒருவர் அபான் (ரஹ்) அவர்களைப் பார்த்தபோது, அபான் (ரஹ்) அவர்கள், “என்னைப் பார்க்கிறீர்களா? நான் உங்களுக்கு அறிவித்த ஹதீஸ் உண்மையானதே. ஆனால், அல்லாஹ் தன் விதியை என்மீது நிறைவேற்றுவதற்காகவோ (என்னவோ) அன்று நான் அந்த துஆவைக் கூறவில்லை” என்று கூறினார்கள்.


مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ، وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، فَيَضُرَّهُ شَيْءٌ

قَالَ: وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفٌ مِنَ الْفَالِجِ، فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ لَهُ أَبَانُ: «مَا تَنْظُرُ إِلَيَّ؟ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا قَدْ حَدَّثْتُكَ، وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ، لِيُمْضِيَ اللَّهُ عَلَيَّ قَدَرَهُ»


Ibn-Majah-4085

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மஹ்தீ எங்களது குடும்பத்தாரைச் சேர்ந்தவராவார். ஒரே இரவில் (தலைமைப் பொறுப்பை ஏற்கத் தேவையான ஞானம், ஆளுமைப் பண்புகளை வழங்கி) அல்லாஹ் அவரை சீர்படுத்துவான்.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


«الْمَهْدِيُّ مِنَّا أَهْلَ الْبَيْتِ، يُصْلِحُهُ اللَّهُ فِي لَيْلَةٍ»


Ibn-Majah-3546

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3546. உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உட்கொண்ட விஷம் தோய்ந்த ஆட்டின் காரணமாக ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு உடலில் பாதிப்பு ஏற்படுகிறதே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணாக இருந்தபோதே என்மீது எழுதப்பட்டுவிட்டதைத் தவிர, வேறெதுவும் அதிலிருந்து எனக்கு ஏற்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


قَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ لَا يَزَالُ يُصِيبُكَ فِي كُلِّ عَامٍ وَجَعٌ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ الَّتِي أَكَلْتَ، قَالَ: «مَا أَصَابَنِي شَيْءٌ مِنْهَا، إِلَّا وَهُوَ مَكْتُوبٌ عَلَيَّ وَآدَمُ فِي طِينَتِهِ»


Ibn-Majah-1856

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1856.


لَمَّا نَزَلَ فِي الْفِضَّةِ وَالذَّهَبِ مَا نَزَلَ، قَالُوا: فَأَيَّ الْمَالِ نَتَّخِذُ؟ قَالَ عُمَرُ: فَأَنَا أَعْلَمُ لَكُمْ ذَلِكَ، فَأَوْضَعَ عَلَى بَعِيرِهِ، فَأَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا فِي أَثَرِهِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَّ الْمَالِ نَتَّخِذُ؟ فَقَالَ: «لِيَتَّخِذْ أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا، وَلِسَانًا ذَاكِرًا، وَزَوْجَةً مُؤْمِنَةً، تُعِينُ أَحَدَكُمْ عَلَى أَمْرِ الْآخِرَةِ»


Ibn-Majah-4019

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4019. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து கூறினார்கள்:

“முஹாஜிர்களே! ஐந்து விஷயங்களால் நீங்கள் சோதிக்கப்படும்போது (அவற்றை நீங்கள் அடையாமல் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) ஐந்து விளைவுகளைக் காண்பீர்கள்.

1 . ஒரு சமுதாயத்தில் மானக்கேடான செயல், பகிரங்கமாக வெளிப்பட்டால் அப்போது அவர்களிடையே கொள்ளை நோயும், அவர்களுக்கு முன் சென்றுவிட்ட மக்களிடம் இல்லாதிருந்த நோய்களும் பரவ ஆரம்பித்துவிடும்.

2 . ஒரு சமுதாயம் அளவையிலும் நிறுவையிலும் குறை(த்து மோசடி செய்)தால், அவர்கள் பஞ்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும், ஆட்சியாளர்களின் அநியாயத்தாலும் பிடிக்கப்படுவார்கள்.

3 . ஒரு சமுதாயம் தங்கள் செல்வத்தின் ஸகாத்தை வழங்காமல் தடுத்து வைத்துக்கொண்டால், அவர்களுக்கு வானத்திலிருந்து மழை வருவது தடுக்கப்பட்டு விடும். கால்நடைகள் மட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு மழை பொழிந்திருக்காது.

4 . ஒரு சமுதாயம் அல்லாஹ்வுடைய உடன்படிக்கையையும், அவனுடைய தூதருடைய உடன்படிக்கையையும் மீறிக் கொண்டிருந்தால், அல்லாஹ் அவர்களுக்கு வெளியிலிருந்து ஒரு எதிரியை ஏற்படுத்தி, அவர்கள் கைகளிலுள்ள சிலவற்றை அவன் கைப்பற்றுவான்.

5 . ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அல்லாஹ்வின்

أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ، وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ: لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ، حَتَّى يُعْلِنُوا بِهَا، إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونُ، وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمُ الَّذِينَ مَضَوْا،

وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ،

وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ، إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا،

وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ، وَعَهْدَ رَسُولِهِ، إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ،

وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ، وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ، إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ “


Ibn-Majah-3790

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3790.


«أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَرْضَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ، وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ، وَمِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ، وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟» قَالُوا: وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «ذِكْرُ اللَّهِ»

وَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا عَمِلَ امْرُؤٌ بِعَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ ذِكْرِ اللَّهِ»


Ibn-Majah-348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

348. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறை வேதனைகளில் அதிகமானவை சிறுநீரால் ஏற்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ»


Ibn-Majah-4290

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4290.

”நாங்கள் இறுதி சமுதாயம். ஆனால் முதன் முத­ல் விசாரிக்கப்படுபவர்கள். ‘எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயமும் அவர்களின் நபியும் எங்கே?’ என்று கேட்கப்படும். நாங்கள் கடைசியானவர்கள்; ஆனால் (தகுதியில்) முந்தியவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி­)


” نَحْنُ آخِرُ الْأُمَمِ، وَأَوَّلُ مَنْ يُحَاسَبُ، يُقَالُ: أَيْنَ الْأُمَّةُ الْأُمِّيَّةُ، وَنَبِيُّهَا؟ فَنَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ “


Next Page » « Previous Page