Category: இப்னுமாஜா

Ibn-Majah-2440

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2440. அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப் பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«الظَّهْرُ يُرْكَبُ إِذَا كَانَ مَرْهُونًا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ إِذَا كَانَ مَرْهُونًا، وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ نَفَقَتُهُ»


Ibn-Majah-3359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3359. நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


صَنَعْتُ طَعَامًا، فَدَعَوْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَجَاءَ فَرَأَى فِي الْبَيْتِ، تَصَاوِيرَ، فَرَجَعَ»


Ibn-Majah-1753

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1753.


«إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ لَدَعْوَةً مَا تُرَدُّ»

قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ إِذَا أَفْطَرَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي


Ibn-Majah-3934

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3934.

…எவர்களிடமிருந்து செல்வத்திலிருந்தும் உயிர்களிலிருந்தும் மக்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே முஃமினாவார். எவர் சிறிய, பெரிய பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.


«الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذُّنُوبَ»


Ibn-Majah-1327

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1327. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இருபத்தி நான்காம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.

இருபத்தி ஐந்தாம் நாள் பாதி இரவை தாண்டும் வரை தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதால் அவர் அந்த இரவு முழுதும் நின்று வணங்கியதற்கு நிகராகும்” என்று கூறினார்கள்.

இருபத்தி ஆறாம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி ஏழாம் நாள் இரவில் தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும் ஒன்று திரட்டினார்கள், மற்ற மக்களும் ஒன்று திரண்டனர், சஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதற்கு பின் அவர்கள் மீதமுள்ள நாட்களில் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

அபூதர் (ரலி) அவர்கள் ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு, என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின்

صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنْهُ، حَتَّى بَقِيَ سَبْعُ لَيَالٍ، فَقَامَ بِنَا لَيْلَةَ السَّابِعَةِ حَتَّى مَضَى نَحْوٌ مِنْ ثُلُثِ اللَّيْلِ، ثُمَّ كَانَتِ اللَّيْلَةُ السَّادِسَةُ الَّتِي تَلِيهَا، فَلَمْ يَقُمْهَا، حَتَّى كَانَتِ الْخَامِسَةُ الَّتِي تَلِيهَا، ثُمَّ قَامَ بِنَا حَتَّى مَضَى نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ. فَقَالَ: «إِنَّهُ مَنْ قَامَ مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ، فَإِنَّهُ يَعْدِلُ قِيَامَ لَيْلَةٍ» ثُمَّ كَانَتِ الرَّابِعَةُ الَّتِي تَلِيهَا، فَلَمْ يَقُمْهَا، حَتَّى كَانَتِ الثَّالِثَةُ الَّتِي تَلِيهَا، قَالَ: فَجَمَعَ نِسَاءَهُ وَأَهْلَهُ وَاجْتَمَعَ النَّاسُ، قَالَ: فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ، قِيلَ: وَمَا الْفَلَاحُ؟ قَالَ: السُّحُورُ، قَالَ: ثُمَّ لَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنْ بَقِيَّةِ الشَّهْرِ


Ibn-Majah-2131

ஹதீஸின் தரம்: More Info

2131. மைமூனா பின்த் கர்தம் (ரலி) கூறியதாவது:

எனது தந்தை கர்தம் (ரலி), நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள். அச்சமயம் நான் என் தந்தையின் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தேன்.

எனது தந்தை நபி (ஸல்) அவர்களிடம், “நான் புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய (அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு) சிலை இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் என்று கூறினார்கள்.


أَنَّ أَبَاهَا لَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ رَدِيفَةٌ لَهُ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ بِهَا وَثَنٌ؟» قَالَ: لَا، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ دُكَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ بْنِ مِقْسَمٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ كَرْدَمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ


Ibn-Majah-2130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2130. ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அறியாமைக் காலத்தின்         (மக்கள் செய்யும் இணைவைப்பான) நேர்ச்சை வகையைதான் நாடினீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்று கூறினார். அப்படியென்றால் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

 


أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ، فَقَالَ: «فِي نَفْسِكَ شَيْءٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ؟» قَالَ: لَا، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»


Ibn-Majah-1977

ஹதீஸின் தரம்: More Info

1977. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي»


Ibn-Majah-1978

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1978. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ»


Ibn-Majah-3610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3610. மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)


أَنَّ شَاةً لِمَوْلَاةِ مَيْمُونَةَ مَرَّ بِهَا – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَدْ أُعْطِيَتْهَا مِنَ الصَّدَقَةِ مَيْتَةً، فَقَالَ: «هَلَّا أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ، فَانْتَفَعُوا بِهِ؟» ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ، قَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»


Next Page » « Previous Page