Category: இப்னுமாஜா

Ibn-Majah-3123

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அள்ஹா) தொழும் இடத்தை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ كَانَ لَهُ سَعَةٌ، وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Ibn-Majah-3532

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3532. உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன் அவருடைய குழந்தையும் இருந்தது.

அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது” என்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு” என்று கூறினார்கள்.

உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்” என்று கூறினார். மேலும்

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، مِنْ بَطْنِ الْوَادِي يَوْمَ النَّحْرِ، ثُمَّ انْصَرَفَ وَتَبِعَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ، وَمَعَهَا صَبِيٌّ لَهَا بِهِ بَلَاءٌ لَا يَتَكَلَّمُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا ابْنِي وَبَقِيَّةُ أَهْلِي، وَإِنَّ بِهِ بَلَاءً لَا يَتَكَلَّمُ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتُونِي بِشَيْءٍ مِنْ مَاءٍ» ، فَأُتِيَ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ وَمَضْمَضَ فَاهُ ثُمَّ أَعْطَاهَا، فَقَالَ: «اسْقِيهِ مِنْهُ، وَصُبِّي عَلَيْهِ مِنْهُ، وَاسْتَشْفِي اللَّهَ لَهُ» . قَالَتْ: فَلَقِيتُ الْمَرْأَةَ فَقُلْتُ: لَوْ وَهَبْتِ لِي مِنْهُ، فَقَالَتْ: إِنَّمَا هُوَ لِهَذَا الْمُبْتَلَى، قَالَتْ: فَلَقِيتُ الْمَرْأَةَ مِنَ الْحَوْلِ فَسَأَلْتُهَا عَنِ الْغُلَامِ، فَقَالَتْ: بَرَأَ وَعَقَلَ عَقْلًا لَيْسَ كَعُقُولِ النَّاسِ


Ibn-Majah-1373

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1373. மஃரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ صَلَّى، بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Ibn-Majah-1374

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1374. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ صَلَّى سِتَّ رَكَعَاتٍ بَعْدَ الْمَغْرِبِ، لَمْ يَتَكَلَّمْ بَيْنَهُنَّ بِسُوءٍ، عُدِلَتْ لَهُ عِبَادَةَ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً»


Ibn-Majah-1167

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஆறு ரக்அத்கள் தொழுதல்.

1167. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ بَيْنَهُنَّ بِسُوءٍ، عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً»


Ibn-Majah-2865

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2865. எனக்குப் பிறகு சிலர் உங்களுக்குத் தலைவர்களாய் தோன்றுவார்கள். அவர்கள்நபிவழியை அழித்து பித்அத்தைத் தோற்றுவிப்பார்கள். தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் தாமதப்படுத்துவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களை அடைந்தால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உம்மு அப்தின் மகனே அல்லாஹ்வுக்கு மாறு செய்பவருக்கு கீழ்ப்படிதல் இல்லை என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«سَيَلِي أُمُورَكُمْ بَعْدِي، رِجَالٌ يُطْفِئُونَ السُّنَّةَ، وَيَعْمَلُونَ بِالْبِدْعَةِ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُهُمْ، كَيْفَ أَفْعَلُ؟ قَالَ: «تَسْأَلُنِي يَا ابْنَ أُمِّ عَبْدٍ كَيْفَ تَفْعَلُ؟ لَا طَاعَةَ، لِمَنْ عَصَى اللَّهَ»


Ibn-Majah-1388

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 191

ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு குறித்து வந்துள்ளவை.

1388. ஷஅபான் மாதத்தின் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அதன் பகலில் நோன்பு பிடியுங்கள். ஏனெனில் சூரியன் மறைந்ததும் முதல் வானத்துக்கு அல்லாஹ் இறங்கி வந்து, என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர் உண்டா? நான் அவரின் பாவங்களை மன்னிக்கிறேன்.

வாழ்வாதாரத்தை தேடுபவர் உண்டா? நான் அவருக்கு வாழ்வாதாரம் வழங்குகிறேன். துன்பத்துக்கு ஆளானவர் உண்டா? நான் அவரின் துன்பங்களை நீக்குகின்றேன். இவ்வாறு இதைக் கேட்பவர் உண்டா? அதைக் கேட்பவர் உண்டா? என்று காலை வரை கூறிக் கொண்டே இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا، فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ


Ibn-Majah-1289

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளிலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَخَطَبَ قَائِمًا ثُمَّ قَعَدَ قَعْدَةً ثُمَّ قَامَ»


Ibn-Majah-3221

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3221. நபி (ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக பிராத்திக்கும் போது

“யா அல்லாஹ்! அவற்றில் பெரியவற்றை அழிப்பாயாக! சிறியவற்றை கொன்றுவிடுவாயாக! அவற்றின் முட்டைகளை அழித்து அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிப்பாயாக! எங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவுகளை விட்டும் அவற்றின் வாய்களைத் தடுப்பாயாக! நீயே பிரார்த்தனைகளைச் செவியேற்பவன்” என்று கூறுவார்கள்.

அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் படைகளின் ஒரு படைக்கு எதிராக அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிக்குமாறு எப்படி பிரார்த்திக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “கடலில் மீனுடைய தும்மலே வெட்டுக்கிளிகளாகும். (அதாவது மீன் தும்முவதால் வெட்டுக் கிளிகள் உருவாகிறது) என்று கூறினார்கள்.

மீன் தும்முவதைப் பார்த்த ஒருவர் (அதாவது மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவர்) இ(ந்த ஹதீ)தை தனக்கு அறிவித்ததாக ஸியாத் என்பார் கூறியதாக ஹாஷிம் என்பார் கூறியுள்ளார்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا دَعَا عَلَى الْجَرَادِ قَالَ: «اللَّهُمَّ أَهْلِكْ كِبَارَهُ، وَاقْتُلْ صِغَارَهُ، وَأَفْسِدْ بَيْضَهُ، وَاقْطَعْ دَابِرَهُ، وَخُذْ بِأَفْوَاهِهَا، عَنْ مَعَايِشِنَا وَأَرْزَاقِنَا، إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللَّهِ بِقَطْعِ دَابِرهِ قَالَ: «إِنَّ الْجَرَادَ نَثْرَةُ الْحُوتِ فِي الْبَحْرِ»

قَالَ هَاشِمٌ: قَالَ زِيَادٌ: فَحَدَّثَنِي مَنْ رَأَى الْحُوتَ يَنْثُرُهُ


Ibn-Majah-1448

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1448. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ،

يَعْنِي يس»


Next Page » « Previous Page