Category: இப்னுமாஜா

Ibn-Majah-3725

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3725. பள்ளிவாசலில் தன்னுடைய முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அவரை தன்னுடைய காலினால் தட்டி, “எழுந்து அமர்வீராக! இது நரகவாசிகளுடைய தூக்கமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ نَائِمٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ، فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ: «قُمْ وَاقْعُدْ، فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ»


Ibn-Majah-4251

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4251. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ»


Ibn-Majah-85

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

85. …..ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் அமர்ந்திருந்த சபைக்கு வருகின்றார்கள். அப்போது அத்தோழர்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த உலகில் ஒரு மனிதன் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ் தான் தீர்மானிக்கின்றான் என்று ஒருவர் கூறினார். அவ்வாறல்ல நீங்கள் உழைத்ததுதான் உங்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கின்றான் என்று மற்றொருவர் கூறினார். இந்த சர்ச்சையைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று இதற்காகத்தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இதனால் தான் அழிந்தனர் என்று கூறினார்கள்…..

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ، وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ، فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ، حَبُّ الرُّمَّانِ مِنَ الْغَضَبِ، فَقَالَ: «بِهَذَا أُمِرْتُمْ، أَوْ لِهَذَا خُلِقْتُمْ، تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ، بِهَذَا هَلَكَتِ الْأُمَمُ قَبْلَكُمْ»

قَالَ: فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، مَا غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عَنْهُ


Ibn-Majah-1385

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1385. பார்வை தெரியாத ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்விடம் எனக்கு சுகமளிக்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்தார். ‘நீ விரும்பினால் (இந்தச் சோதனைக்குரிய கூலியை) உனக்குப் பின்னால் (மறுமையில்) கிடைக்குமாறு நான் விட்டு விடுகிறேன். நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

உளூவை நிறைவாகச் செய்து, இரண்டு ரக்அத்துகள் தொழுது (பின்வரும்) துஆவைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உத்தரவிட்டார்கள்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மத் (அவர்களின் பிரார்த்தனை)யை முன்வைத்து உன்னிடம் முன்னோக்குகின்றேன். முஹம்மதே! என்னுடைய தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக, இது தொடர்பாக உங்கள் (பிரார்த்தனை)யை முன்வைத்து என்னுடைய இறைவனிடம் முன்னோக்கி விட்டேன். யா அல்லாஹ்! என் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!

அறிவிப்பவர்: உஸ்மான் பின் ஹுனைஃப் (ரலி)


أَنَّ رَجُلًا ضَرِيرَ الْبَصَرِ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ادْعُ اللَّهَ لِي أَنْ يُعَافِيَنِي فَقَالَ: «إِنْ شِئْتَ أَخَّرْتُ لَكَ وَهُوَ خَيْرٌ، وَإِنْ شِئْتَ دَعَوْتُ» فَقَالَ: ادْعُهْ، فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ فَيُحْسِنَ وُضُوءَهُ، وَيُصَلِّيَ رَكْعَتَيْنِ، وَيَدْعُوَ بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ، وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِمُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ، يَا مُحَمَّدُ إِنِّي قَدْ تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى، اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ»


Ibn-Majah-4159

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4159. நபி (ஸல்) அவர்கள் எங்களில் முன்னூறு நபர்களை கொண்ட ஒரு படையை ஒரு போருக்கு அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்த போருக்கு தேவையான உணவுப் பொருட்களை எல்லாம் தயார் செய்து கட்டிக் கொண்டு சென்றோம். அக்கிரமத்தை எதிர்த்து களத்தில் இறங்குவதற்கு ஒரு நாளிற்கு ஒரு பேரிச்சை என்ற வீதம் தான் எல்லோருக்கும் கிடைக்கும். இச்செய்தியை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அடுத்த தலைமுறையில் வஹது பின் கைஸா என்பவரிடம் எடுத்துரைக்கிறார்கள். இதனை கேட்டவர் ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சை எப்படி பத்தும் என்றார். அதற்கு ஜாபிர் அவர்கள் சில நேரங்களில் அதுகூட இல்லாமல் இருந்தது உண்டு என்றார்.

(அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ ثَلَاثُمِائَةٍ، نَحْمِلُ أَزْوَادَنَا عَلَى رِقَابِنَا، فَفَنِيَ أَزْوَادُنَا، حَتَّى كَانَ يَكُونُ لِلرَّجُلِ مِنَّا تَمْرَةٌ» ، فَقِيلَ: يَا أَبَا عَبْدِ اللَّهِ وَأَيْنَ تَقَعُ التَّمْرَةُ مِنَ الرَّجُلِ؟ فَقَالَ: «لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا، وَأَتَيْنَا الْبَحْرَ، فَإِذَا نَحْنُ بِحُوتٍ قَدْ قَذَفَهُ الْبَحْرُ، فَأَكَلْنَا مِنْهُ ثَمَانِيَةَ عَشَرَ يَوْمًا»


Ibn-Majah-2304

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கால்நடை வளர்ப்பு.

2304. உம்முஹானீ பின்த் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்முஹானீ (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً»


Ibn-Majah-1266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1266. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَرْسَلَنِي أَمِيرٌ مِنَ الْأُمَرَاءِ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنِ الصَّلَاةِ فِي الِاسْتِسْقَاءِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَا مَنَعَهُ أَنْ يَسْأَلَنِي؟ قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاضِعًا مُتَبَذِّلًا مُتَخَشِّعًا مُتَرَسِّلًا مُتَضَرِّعًا، فَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا يُصَلِّي فِي الْعِيدِ، وَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ»


Ibn-Majah-1134

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1134 . ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الِاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ» يَعْنِي وَالْإِمَامُ يَخْطُبُ


Ibn-Majah-1463

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1463 . இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ غَسَّلَ مَيِّتًا، فَلْيَغْتَسِلْ»


Ibn-Majah-3249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்பு, தேள், எலி, (நீர்க்)காகம் ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


(அப்துர்ரஹ்மான் பின் காஸிம் (ரஹ்) கூறுகிறார்:)

(எனது தந்தை) காஸிம் பின் முஹம்மது பின் அபூபக்ர் (ரஹ்) அவர்களிடம், “காகத்தை சாப்பிடலாமா?” எனக் கேட்கப்பட்ட போது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபாஸிக்” என்று கூறிய பிறகு அதை யார் சாப்பிடுவார்?“ என்று கூறினார்.


«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ»

فَقِيلَ لِلْقَاسِمِ: أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ: «مَنْ يَأْكُلُهُ؟ بَعْدَ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسِقًا»


Next Page » « Previous Page