Category: இப்னுமாஜா

Ibn-Majah-3248

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3248. (காகத்தை உண்பவர்கள் பற்றி) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

காகத்தை யார் சாப்பிடுவது?. நபி (ஸல்) அவர்கள் அதற்கு “ஃபாஸிக்” (தீங்கிழைக்கக்கூடியது) என்று பெயரிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது (உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட) தூய்மையானவைகளில் உள்ளதல்ல.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


مَنْ يَأْكُلُ الْغُرَابَ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَاسِقًا، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ


Ibn-Majah-1892

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1892 .

…இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹு.

(பொருள்: நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’)…

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


أُوتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَوَامِعَ الْخَيْرِ، وَخَوَاتِمَهُ، أَوْ قَالَ: فَوَاتِحَ الْخَيْرِ، فَعَلَّمَنَا خُطْبَةَ الصَّلَاةِ، وَخُطْبَةَ الْحَاجَةِ، خُطْبَةُ الصَّلَاةِ: «التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» ، وَخُطْبَةُ الْحَاجَةِ: ” أَنِ الْحَمْدُ لِلَّهِ، نَحْمَدُهُ، وَنَسْتَعِينُهُ، وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ تَصِلُ خُطْبَتَكَ بِثَلَاثِ آيَاتٍ مِنْ كِتَابِ اللَّهِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ} [آل عمران: 102] إِلَى آخِرِ الْآيَةِ، {وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ} [الأحزاب: 71] إِلَى آخِرِ الْآيَةِ


Ibn-Majah-3705

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3705. யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் கையையும், கால்களையும் முத்தமிட்டனர்.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)


«أَنَّ قَوْمًا مِنَ الْيَهُودِ قَبَّلُوا يَدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَيْهِ»


Ibn-Majah-870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

870. ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)


«لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Ibn-Majah-739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

739. மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது ஏற்படும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»


Ibn-Majah-2874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2874. நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள் உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள் என்று குறிப்பிட்டார்கள். பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன் எனவும் கூறினார்கள்.


جِئْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ نُبَايِعُهُ، فَقَالَ لَنَا: «فِيمَا اسْتَطَعْتُنَّ وَأَطَقْتُنَّ، إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ»


Ibn-Majah-1142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1142. ‘‘யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். (அவை) பஜ்ருக்கு முன் 2 ரக்அத்கள், லுஹருக்கு முன்னர் 2 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்கு பின் 2 ரக்அத்கள்’’ ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ، رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ – أَظُنُّهُ قَالَ: قَبْلَ الْعَصْرِ – وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ – أَظُنُّهُ قَالَ: وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الْآخِرَةِ – “


Ibn-Majah-1140

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1140. ‘‘யார் சுன்னதான 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், இஷாவுக்குப் பின் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ، بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ، أَرْبَعٍ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ»


Ibn-Majah-3179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3179. ஒரு இளைஞர் அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் “ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்’’ என்றார்கள். தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِغُلَامٍ يَسْلُخُ شَاةً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَنَحَّ، حَتَّى أُرِيَكَ» فَأَدْخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ، فَدَحَسَ بِهَا، حَتَّى تَوَارَتْ إِلَى الْإِبِطِ وَقَالَ: «يَا غُلَامُ هَكَذَا فَاسْلُخْ» ثُمَّ مَضَى وَصَلَّى لِلنَّاسِ، وَلَمْ يَتَوَضَّأْ


Ibn-Majah-4109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4109. நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுத்திருந்தார்கள். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்துவிட்டது. (அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தபின்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் நாங்கள் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?. மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது’’ எனக் கூறி (அதை நிராகரித்து) விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


اضْطَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى حَصِيرٍ فَأَثَّرَ فِي جِلْدِهِ، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي، يَا رَسُولَ اللَّهِ لَوْ كُنْتَ آذَنْتَنَا فَفَرَشْنَا لَكَ عَلَيْهِ شَيْئًا يَقِيكَ مِنْهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا وَالدُّنْيَا إِنَّمَا أَنَا وَالدُّنْيَا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ، ثُمَّ رَاحَ وَتَرَكَهَا»


Next Page » « Previous Page