Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-17566

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17566. (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)


الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ , وَمَكْرُمَةٌ لِلنِّسَاءِ


Kubra-Bayhaqi-17568

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17568. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرُمَةٌ لِلنِّسَاءِ


Kubra-Bayhaqi-17562

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17562. நபி (ஸல்) அவர்கள் (உம்மு அதிய்யா-ரலி அவர்களிடம்), “நீ (பெண்களுக்கு) விருத்தசேதனம் செய்யும்போது மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! ஏனெனில் இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


إِذَا خَفَضْتِ فَأَشِمِّي وَلَا تَنْهِكِي , فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ , وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ


Kubra-Bayhaqi-17561

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17561. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அதிய்யாவே! மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; (அவளின்) திருமண வாழ்க்கைக்கும் நல்லது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அபூஸகரிய்யா-இப்னுமயீன் அவர்கள், இதில் இடம்பெறும் ளஹ்ஹாக் பின் கைஸ் என்பவர் (நபித்தோழரான) ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ என்பவர் அல்ல என்று கூறியதாக ஃகலாபீ அவர்கள் கூறினார்.


كَانَ بِالْمَدِينَةِ امْرَأَةٌ يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ تَخْفِضُ الْجَوَارِي، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أُمَّ عَطِيَّةَ اخْفِضِي وَلَا تَنْهِكِي , فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ , وَأَحْظَى عِنْدَ الزَّوَاجِ


Kubra-Bayhaqi-13498

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13498. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) கூறினார். அதற்கு, “நீ உமது இரு கைகளையும் (மருதாணியால்) நிறம் மாற்றாத வரை உம்மிடம் உறுதிமொழி வாங்கமாட்டேன்; அவ்விரண்டும் விலங்கின் கரம் போன்று உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ قَالَتْ: يَا نَبِيَّ اللهِ بَايِعْنِي قَالَ: ” لَا أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ، كَأَنَّهَا كَفَّا سَبُعٍ


Kubra-Bayhaqi-13499

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13499. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


جَاءَتِ امْرَأَةٌ وَرَاءَ السِّتْرِ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ وَقَالَ: ” مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ ” قَالَتْ: بَلْ يَدُ امْرَأَةٍ قَالَ: ” لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظَافِرَكِ بِالْحِنَّاءِ


Kubra-Bayhaqi-7947

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7947.


دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي يَوْمٍ وَقَدْ أُشْكِلَ عَلَيَّ أَمِنْ رَمَضَانَ هُوَ أَمْ مِنْ شَعْبَانَ، فَأَصْبَحْتُ صَائِمًا، فَقُلْتُ: إِنْ كَانَ مِنْ رَمَضَانَ لَمْ يَسْبِقْنِي، وَإِنْ كَانَ مِنْ شَعْبَانَ كَانَ تَطَوُّعًا، فَدَخَلْتُ عَلَى عِكْرِمَةَ وَهُوَ يَأْكُلُ خُبْزًا وَبَقْلًا وَلَبَنًا، فَقَالَ: هَلُمَّ إِلَى الْغَدَاءِ، قُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ: أَحْلِفُ بِاللهِ لَتُفْطِرَنَّهُ، قُلْتُ: سُبْحَانَ اللهِ، قَالَ: أَحْلِفُ بِاللهِ لَتُفْطِرَنَّهُ، فَلَمَّا رَأَيْتُهُ لَا يَسْتَثْنِي أَفْطَرْتُ فَغَدَوْتُ بِبَعْضِ الشَّيْءِ، وَأَنَا شَبْعَانٌ، ثُمَّ قُلْتُ: هَاتِ، فَقَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَتْ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ، أَوْ غَيَابَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، لَا تَسْتَقْبِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ


Kubra-Bayhaqi-5348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5348.


إِذَا أَمَّ الرَّجُلُ الْقَوْمَ فَلَا يَخْتَصَّ بِدُعَاءٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يُدْخِلُ عَيْنَهُ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ


Next Page » « Previous Page