தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-14336

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உமர் (ரலி) மக்களுக்கு ஒரு உபதேசம் செய்தார்கள், அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினார், பின்னர் கூறினார்: மஹர் கொடுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய மஹரை விட அதிகமாகவோ அல்லது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (அவரது மகள்களுக்காக) கொடுக்கப்பட்ட மஹரை விட அதிகமாகவோ யாரேனும் ஒருவர் மஹர் கொடுத்ததாக நான் கண்டறிந்தால், அதிகப்படியான தொகையை பைத்துல் மால் (பொது நிதியில்) சேர்த்து விடுவேன் என்று கூறிவிட்டு பிரசங்கமேடையை விட்டு கிழிறங்கினார்கள்.

அப்போது குறைஷிகளை சேர்ந்த ஒரு பெண் வந்து: இறைநம்பிக்கையாளரின் தலைவரே!! நாங்கள் அல்லாஹ்வின் வேதத்திற்குக் கீழ்ப்படிகிறோமா அல்லது நீங்கள் சொல்வதைக் கடைப்பிடிக்கிறோமா? என கேட்டார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் வேதத்தில் என்ன சொன்னான்? என கேட்டார்கள்.

அந்தப் பெண் கூறினார்: பெண்களுக்கு அதிகமாக மஹர் கொடுப்பதை நீங்கள் மக்களுக்கு தடை செய்துள்ளீர்கள். ஆனால் அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ளான்: “அவர்களில் ஒருவருக்கு நீங்கள் ஒரு பெரிய குவியலையே கொடுத்தபோதிலும் அதிலிருந்து எதையும் திரும்பப் பெறாதீர்கள்”(குர்ஆன் 4:20)

அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நபரும் உமரை விட மார்க்கத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என்று இரண்டு அல்லது மூன்று முறை சொன்னார்கள்.

பின்னர் அவர் மீண்டும் மேடையில் ஏறி மக்களை நோக்கி: பெண்களுக்கு வழங்கப்படும் மஹரை நான் உங்களுக்குத் தடை செய்திருந்தேன். இருப்பினும், ஒரு மனிதன் தனது செல்வத்திலிருந்து தான் விரும்பியதைக் கொடுக்கலாம். என்று கூறினார்கள்.

(பைஹகீ-குப்ரா: 14336)

وَأَخْبَرَنَا أَبُو حَازِمٍ الْحَافِظُ، أنبأ أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ حَمْزَةَ الْهَرَوِيُّ ثنا أَحْمَدُ بْنُ نَجْدَةَ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، ثنا هُشَيْمٌ، ثنا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ قَالَ:

خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ النَّاسَ فَحَمِدَ اللهَ تَعَالَى وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ: ” أَلَا لَا تُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ، فَإِنَّهُ لَا يَبْلُغُنِي عَنْ أَحَدٍ سَاقَ أَكْثَرَ مِنْ شَيْءٍ سَاقَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ سِيقَ إِلَيْهِ إِلَّا جَعَلْتُ فَضْلَ ذَلِكَ فِي بَيْتِ الْمَالِ ” ثُمَّ نَزَلَ , فَعَرَضَتْ لَهُ امْرَأَةٌ مِنْ قَرِيبٍ , فَقَالَتْ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَكِتَابُ اللهِ تَعَالَى أَحَقُّ أَنْ يُتَّبَعَ أَوْ قَوْلُكَ؟ قَالَ: ” بَلْ كِتَابُ اللهِ تَعَالَى , فَمَا ذَاكَ؟ ” قَالَتْ: نَهَيْتَ النَّاسَ آنِفًا أَنْ يُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ وَاللهُ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: {وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا} [النساء: 20] , فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: ” كُلُّ أَحَدٍ أَفْقَهُ مِنْ عُمَرَ ” مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا , ثُمَّ رَجَعَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ لِلنَّاسِ: ” إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ تُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ أَلَا فَلْيَفْعَلْ رَجُلٌ فِي مَالِهِ مَا بَدَا لَهُ “

هَذَا مُنْقَطِعٌ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-14336.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13276.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


ஐந்தாவது அறிவிப்பாளர் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு நஜித் என்பவர் மஜ்ஹுலான (யாரென்று அறியப்படாத) அறிவிப்பாளர் ஆவார்.

ஆமீர் இப்னு ஷராஹீல் அவர்களிடமிருந்து அறிவிக்ககூடிய முஜாலித் இப்னு ஸயீத் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

முஜாலித் இப்னு ஸயீத்
பிறப்பு:ஹி 48
இறப்பு:ஹி 144

*நூல்கள்:*📚
தஹ்தீபு தஹ்தீபு|10/39|
மிய்ஸானுல் இஃதிதால்|3/438|
தாரிகுல் கபீர்|8/9|
தக்ரீபு தஹ்தீபு|2/229|

உமர்(ரழி) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி 23 ஆகும். உமர்(ரழி) அவர்களின் இந்த சம்பவத்தை அறிவிக்கக்கூடிய அடுத்த அறிவிப்பாளர். ஷஃபியி அவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 20. அதாவது உமர்(ரழி) அவர்கள் மரணிக்கும் போது ஆமிர் இப்னு ஷராஹீல் ஷஃபியி என்ற அறிவிப்பாளருக்கு வயது 3 ஆகும். ஆகவே இடையில் ஒரு அறிவிப்பாளர் மூலமாகவே அறிவித்திருக்க முடியும். எனவே இந்த செய்தி முன்கதிவு(இடையில் தொடர்பு அறுந்தது) ஆகும்.

உமர் இப்னு ஹத்தாப்(ரழி)
இறப்பு ஹிஜ்ரி 23

ஆமீர் இப்னு ஷராஹீல்
பிறப்பு ஹிஜ்ரி 20

ஸியரு அஃலமின் நுபுலா|4/295|


மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10420.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.