Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-2680

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2680. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இனிமேல்) நோன்பை விடமாட்டார்களோ! என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து நோன்பு வைப்பார்கள். (பிறகு இனிமேல்) நோன்பு வைக்கமாட்டார்களோ! என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து நோன்பு வைக்காமல் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَسْرُدُ الصَّوْمَ» فَيُقَالُ: لَا يُفْطِرُ، وَيُفْطِرُ فَيُقَالُ: لَا يَصُومُ


Kubra-Nasaayi-2797

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2797.


أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ، كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ وَيُخْبِرُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُهُمَا كَذَلِكَ»


Kubra-Nasaayi-10534

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10534. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

காலித் பின் வலீத் பின் முகீரா அவர்கள், தூக்கத்தில் கனவு கண்டு திடுக்கிடக்கூடியவராக இருந்தார். இதைப் பற்றி அவர், நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், நீ படுக்கையில் ஒருக்களித்து படுத்தவுடன் ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வ ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்ற பிரார்த்தனையை கூறுவீராக! என்று கூறினார்கள். அவர் அவ்வாறு கூற திடுக்கம் அவரை விட்டு நீங்கியது.

(துஆவின் பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)


كَانَ خَالِدُ بْنُ الْوَلِيدِ بْنِ الْمُغِيرَةِ رَجُلًا يَفْزَعُ فِي مَنَامِهِ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا اضْطَجَعْتَ فَقُلْ: بِاسْمِ اللهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ ” فَقَالَهَا فَذَهَبَ ذَلِكَ عَنْهُ


Kubra-Nasaayi-10533

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டு எழுந்தால் கூறவேண்டியவை.

10533. நாங்கள் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வ மின்ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்ற பிரார்த்தனையை நாங்கள் ஓதவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا كَلِمَاتٍ يَقُولُهَا عِنْدَ النَّوْمِ مِنَ الْفَزَعِ: «بِاسْمِ اللهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَمِنْ شَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»


Kubra-Nasaayi-1817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நோன்பு பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறுதல்.

1817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعًا فِي الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ»


Kubra-Nasaayi-962

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

962. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.


بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيلًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنَا يَا رَسُولَ اللهِ، قَالَ: «عَجِبْتُ لَهَا وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا، فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ»،

قَالَ ابْنُ عُمَرَ: مَا تَرَكْتُهُ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ


Kubra-Nasaayi-961

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகையின் ஆரம்ப வார்த்தை.

961. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழ நின்றார். அப்போது அவர், “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

(தொழுகை முடிந்த பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வார்த்தைகளை கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர் “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்த வார்த்தையை பெறுவதற்கு 12 வானவர்கள் போட்டியிட்டுக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.


قَامَ رَجُلٌ خَلْفَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَأَصِيلًا، فَقَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟»، فَقَالَ رَجُلٌ: أَنَا يَا نَبِيَّ اللهِ، قَالَ: «لَقَدِ ابْتَدَرَهَا اثْنَا عَشَرَ مَلَكًا»


Kubra-Nasaayi-11506

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11506. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி வாக்குவாதம் செய்தார். அவர் கூறியது எனக்கு சரியாக கேட்கவில்லை. (ஆனால் அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)


الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتْ خَوْلَةُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو زَوْجَهَا، فَكَانَ يَخْفَى عَلَيَّ كَلَامُهَا، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللهِ وَاللهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا} [المجادلة: 1] الْآيَةَ


Kubra-Nasaayi-5625

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5625. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனைத்து சப்தங்களையும் செவியேற்கும் செவுப்புலன் கொண்ட அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! நபி (ஸல்) அவர்களிடம் கவ்லா பின்த் ஸஃலபா (ரலி) அவர்கள் வந்து தன் கணவனைப் பற்றி வாக்குவாதம் செய்தார். அவர் கூறியது எனக்கு சரியாக கேட்கவில்லை. (ஆனால் அல்லாஹ் விரைவாக) “தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்” எனும் (அல்குர்ஆன் 58:1) வசனத்தை இறக்கி அருளினான்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)


الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ لَقَدْ جَاءَتْ خَوْلَةُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو زَوْجَهَا، فَكَانَ يَخْفَى عَلَيَّ كَلَامُهَا، فَأَنْزَلَ اللهُ {قَدْ سَمِعَ اللهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا، وَتَشْتَكِي إِلَى اللهِ، وَاللهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا} [المجادلة: 1] الْآيَةَ


Kubra-Nasaayi-8219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஸுஹைப் பின் ஸினான் (அவர்களைப் பற்றி வந்துள்ளவை).

8219. சல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை எற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!” என்று கூறினர்.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்!” என்று (கடிந்து) கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தபோது, “அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, அபூபக்ர் அவர்களே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயித் பின் அம்ர் (ரலி)

இதில் இடம்பெறும் வாக்கியஅமைப்பு இப்ராஹீம் பின் யஃகூப் அவர்களின் அறிவிப்பாகும்.


أَنَّ سَلْمَانَ، وَصُهَيْبًا، وَبِلَالًا كَانُوا قُعُودًا فَمَرَّ بِهِمْ أَبُو سُفْيَانَ فَقَالُوا: «مَا أَخَذَتْ سُيُوفُ اللهِ مِنْ عُنُقِ عَدُوٍّ اللهِ مَأْخَذَهَا بَعْدُ» فَقَالَ أَبُو بَكْرٍ: تَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهَا قَالَ: فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ قَالَ: يَا أَبَا بَكْرٍ «لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ، لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ» فَرَجَعَ إِلَيْهِمْ فَقَالَ: يَا إِخْوَتَاهُ لَعَلِّي أَغْضَبْتُكُمْ قَالُوا: لَا يَا أَبَا بَكْرٍ، يَغْفِرُ اللهُ لَكَ

اللَّفْظُ لِإِبْرَاهِيمَ


Next Page » « Previous Page