9859.
முஸ்லிம் பின் அல்ஹாரிஸ் அத்தமீமீ அறிவிக்கின்றார்:
நீ சுப்ஹு தொழுதால் யாரோடும் பேசுவதற்கு முன்னர், ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் பகல் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும் மக்ரிப் தொழுதுவிட்டு, யாரோடும் பேசுவதற்கு முன்னர் ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் இரவுப் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ரகசியமாகக் கூறினார்கள்.
قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ قَبْلَ أَنْ تَتَكَلَّمَ: اللهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إنْ مُتَّ مِنْ يَوْمِكَ ذَلِكَ كَتَبَ اللهُ لَكَ جِوَارًا مِنَ النَّارِ، فَإِذَا صَلَّيْتَ الْمَغْرِبَ فَقُلْ قَبْلَ أَنْ تَتَكَلَّمَ: اللهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ كَتَبَ اللهُ لَكَ جِوَارًا مِنَ النَّارِ
சமீப விமர்சனங்கள்