Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-9614

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9614.

ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, நபி (ஸல்) அவர்களை மதீனாவின் சில தெருக்களில் சந்தித்தார். அப்போது அவர் கத்தார் நாட்டின்… ஆடை அணிந்திருந்தார், அதன் ஓரங்கள் சிதிலடைந்து இருந்தன. அவர் நபி (ஸல்) அவர்களிடம், “அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அலைக்கஸ்ஸலாம் (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்), இது மரணித்தவர்களின் வாழ்த்தாகும்” என்று பதிலளித்தார்கள்.

பின்னர் ஜாபிர் (ரலி) அவர்கள், “யா முஹம்மது, எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எந்தவொரு நன்மையைச் செய்வதையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், அது சிறியதாக இருந்தாலும் சரி. உதாரணமாக, கயிறு ஒன்றை தானமாக வழங்குவது, அல்லது உங்கள் வாளியிலிருந்து நீர் அருந்த விரும்புபவருக்கு நீர் கொடுப்பது, அல்லது உங்கள் சகோதரனை மகிழ்ச்சியுடன் சந்திப்பது, அல்லது உங்கள் மனதால் காட்டு விலங்குகளை அமைதிப்படுத்துவது, அல்லது உங்கள் காலணியின் வாரை அன்பளிப்பாக வழங்குவது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.”


أَنَّهُ قَدِمَ الْمَدِينَةَ فَلَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَزِقَّةِ الْمَدِينَةِ فَوَافَقَهُ، فَإِذَا هُوَ مُتَّزِرٌ بِإِزَارٍ قَطَرِيٍّ قَدِ انْتَثَرَتْ حَاشِيَتُهُ وَقَالَ: «عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللهِ» فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَوْتَى» فَقَالَ يَا مُحَمَّدُ: أَوْصِنِي، فَقَالَ: «لَا تَحْقِرَنَّ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ أَنْ تَأْتِيَهُ، وَلَوْ أَنْ تَهِبَ صِلَةَ الْحَبْلِ، وَلَوْ أَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ الْمُسْتَسْقِي، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ الْمُسْلِمَ وَوَجْهُكَ بَسْطٌ إِلَيْهِ، وَلَوْ أَنْ تُؤْنِسَ الْوُحْشَانَ بِنَفْسِكَ، وَلَوْ أَنْ تَهِبَ الشَّسْعَ».


Kubra-Nasaayi-10062

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அன்பளிப்பு வழங்கியவருக்கு என்ன கூறவேண்டும்?

10062. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எனவே அவர்கள் (அதை சிலருக்கு) பங்கிட்டு வழங்குமாறு என்னிடம் கூறினார்கள்.

உபைத் பின் அபுல்ஜஃத் (ரஹ்) கூறுகிறார்:

(அன்பளிப்பைக் கொண்டுச் சென்று பிறருக்கு வழங்கிவிட்டு வரும்)  பணியாளரிடம் அவர்கள் என்ன கூறினார்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்பார்கள். அதற்கு பணியாளர் அவர்கள், “பாரகல்லாஹு ஃபீகும்” (அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் அளிப்பானாக!) என்று கூறியதாகச் சொல்வார். ஆயிஷா (ரலி) அவர்கள், “வ ஃபீஹிம் பாரகல்லாஹு” (அல்லாஹ் அவர்களுக்கும் அருள்வளம் அளிப்பானாக!) என்று கூறிவிட்டு; “நாம் அவர்கள் கூறியதைப் போன்று (பதில் பிரார்த்தனையை) கூறுவோம். (அன்பளிப்புக்கான) நம்முடைய கூலி நமக்கே இருக்கும்” என்று கூறுவார்கள்.


أُهْدِيَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فَقَالَ: «اقْسِمِيهَا»

قَالَ: وَكَانَتْ عَائِشَةُ إِذَا رَجَعَتِ الْخَادِمَ قَالَتْ: مَا قَالُوا لَكِ؟ تَقُولُ مَا يَقُولُونَ يَقُولُ: بَارَكَ اللهُ فِيكُمْ فَتَقُولُ عَائِشَةُ: وَفِيهِمْ بَارَكَ اللهُ، تَرُدُّ عَلَيْهِمْ مِثْلَ مَا قَالُوا وَيَبْقَى أَجْرُنَا لَنَا


Kubra-Nasaayi-9922

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9922. நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவர் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ, அல்லது சிறு கற்களோ இருந்தன.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, அவை

ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிஸ்ஸமாஇ,
ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிர்அர்ளி,
ஸுப்ஹானல்லாஹி அதத மா பைன தாலிக,
ஸுப்ஹானல்லாஹி அதத மா ஹுவ காலிகுன்”

இதேபோன்று (ஸுப்ஹானல்லாஹி என்ற இடத்தில்)
அல்லாஹு அக்பர் என்பதையும்;
அல்ஹம்து லில்லாஹ் என்பதையும்;
லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ் என்பதையும் (சேர்த்துக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி)


أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدِهَا نَوَى أَوْ حَصَى تُسَبِّحُ بِهِ (فَقَالَ: أَلاَ أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا، أَوْ أَفْضَلُ؟ سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، وَالْحَمْدُ للهِ مِثْلَ ذَلِكَ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ مِثْلَ ذَلِكَ)


Kubra-Nasaayi-10412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10412.


دَعَوَاتُ الْمَكْرُوبِ: اللهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ


Kubra-Nasaayi-10332

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10332.


أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ، أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ: «اللهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي، وَتَقُولُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي؟ قَالَ: نَعَمْ يَا بُنَيَّ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ، فَأُحِبُّ أَنِ أَسْتَنَّ بِسُنَّتِهِ


Kubra-Nasaayi-1271

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1271.


كَانَ أَبِي، يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ» فَكُنْتُ أَقُولُهُنَّ، فَقَالَ أَبِي: عَمَّنْ أَخَذْتَ هَذَا؟ قُلْتُ: عَنْكَ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُهُنَّ فِي دُبُرِ الصَّلَاةِ


Kubra-Nasaayi-9766

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9766.


أَنَّهُ قَالَ لِأَبِيهِ: أَيَا أَبَهْ، إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ: اللهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، ثَلَاثًا حِينَ، يَعْنِي: تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي، وَتَقُولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ، يَعْنِي: تُمْسِي؟ قَالَ: نَعَمْ يَا بُنَيَّ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ، فَأَنَا أُحِبُّ أَنِ أسْتَنَّ بِسُنَّتِهِ “


Kubra-Nasaayi-9094

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உங்கள் மனைவியரில்) சொர்க்கவாசிகளான பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கவா? (அவர்கள் யாரெனில்:)

அவர்கள், தன் கணவனை அதிகம் விரும்புவோராகவும்; அதிகம் குழந்தையைப் பெற்றெடுப்போராகவும்; அனைத்து நிலையிலும் தன் கணவனின் விருப்பத்தைச் சார்ந்தும் இருப்பார்கள்.

(எந்தளவுக்கெனில்) தனது கணவனுக்கு ஏதேனும் தொல்லையை அவர்கள் ஏற்படுத்திவிட்டால் அல்லது (தனது கணவனால் அவர்களுக்கு) தொல்லை ஏற்பட்டுவிட்டால் தன் கணவரிடம் வந்து, அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் என்னை பொருந்திக் கொள்ளும் வரை நான் தூங்கமாட்டேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِنِسَائِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ الْوَدُودُ، الْوَلُودُ، الْعَؤُودُ عَلَى زَوْجِهَا، الَّتِي إِذَا آذَتْ أَوْ أُوذِيَتْ، جَاءَتْ حَتَّى تَأْخُذَ بَيْدَ زَوْجِهَا، ثُمَّ تَقُولُ وَاللهِ لَا أَذُوقُ غُمْضًا حَتَّى تَرْضَى»


Kubra-Nasaayi-3786

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3786.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يُرِيدُ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ، حَتَّى إِذَا كَانَ بِالرَّوْحَاءِ إِذَا حِمَارُ وَحْشِيٌّ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «دَعُوهُ فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ» فَجَاءَ الْبَهْزِيُّ – وَهُوَ صَاحِبُهُ – إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ، فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ «فَقَسَّمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالْأُثَايَةِ بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ وَفِيهِ سَهْمٌ» فَزَعَمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا يَقِفُ عِنْدَهُ لَا يُرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ حَتَّى يُجَاوِزَهُ


Next Page » « Previous Page