Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-10724

ஹதீஸின் தரம்: More Info

10724. “யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜாலை அடைந்தால் அவன் அவர் மீது சாட்டப்படமாட்டான்-அல்லது அவருக்கு எதிராக அவன் எந்த சதியும் செய்ய முடியாது.

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)


«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ، ثُمَّ أَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ، أَوْ لَمْ يَكُنْ لَهُ عَلَيْهِ سَبِيلٌ، وَمَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَانَ لَهُ نُورًا مِنْ حَيْثُ قَرَأَهَا مَا بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ»


Kubra-Nasaayi-10723

ஹதீஸின் தரம்: More Info

10723. ஹதீஸ் எண்-10722 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் சிறிது மாற்றத்துடனும், அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது.


«مِنْ حَيْثُ يَقْرَؤُهُ إِلَى مَكَّةَ» وَقَالَ: «مَنْ قَرَأَ آخِرَ الْكَهْفِ»


Kubra-Nasaayi-10722

ஹதீஸின் தரம்: More Info

10722. அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

“யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிகிறாரோ அவர் ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது அவன் சாட்டப்படமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ كَانَتْ لَهُ نُورًا مِنْ مَقَامِهِ إِلَى مَكَّةَ، وَمَنْ قَرَأَ بِعَشْرِ آيَاتٍ مِنْ آخِرِهَا فَخَرَجَ الدَّجَّالُ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ»


Kubra-Nasaayi-10587

ஹதீஸின் தரம்: More Info

10587. யார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறி, தூங்கும் முன் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறி, இதை வழமையாக கடைப்பிடித்து வருகின்றாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாயிப் பின் மாலிக் (ரஹ்)


«مَنْ قَالَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ عَشْرَ تَحْمِيدَاتٍ، وَعَشْرَ تَسْبِيحَاتٍ، وَعَشْرَ تَكْبِيرَاتٍ، وَإِذَا أَرَادَ أَنْ يَنَامَ ثَلَاثًا وَثَلَاثِينَ تَسْبِيحَةً، وَثَلَاثًا وَثَلَاثِينَ تَحْمِيدَةً، وَأَرْبَعًا وَثَلَاثِينَ تَكْبِيرَةً، وَدَاوَمَ عَلَيْهِنَّ دَخَلَ الْجَنَّةَ»


Kubra-Nasaayi-10586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10586. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்கள் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அவ்விரண்டையும் செய்பவர்கள் குறைவானவர்களே! அதை வழமையாக கடைப்பிடிப்பவர் சொர்க்கத்தில் நுழைவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டும் எவை? என்று வினவினோம்.

அதற்கு “உங்களில் ஒருவர் ஒவ்வொரு கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின்பு ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும். தூங்கும் போது அவைகளை 100-தடவை கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பதும், படுக்கையில் 100 தடவையும் சேர்த்து) 250-நன்மைகளாகும்.

(நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தஹ்பீஹ் செய்யும் போது) கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்.

 

அவ்வாம் என்ற அறிவிப்பாளர்

«اثْنَتَانِ يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، وَمَنْ يُحَافِظُ عَلَيْهِمَا دَخَلَ الْجَنَّةَ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ، مَا هُمَا؟ قَالَ: «يُسَبِّحُ أَحَدُكُمْ إِذَا فَرَغَ مِنْ صَلَاتِهِ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، وَإِذَا أَرَادَ أَنْ يَنَامَ مِائَةً، فَذَلِكَ مِائَتَانِ وَخَمْسُونَ بِاللِّسَانِ، وَأَلْفَانِ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ» قَالَ عَبْدُ اللهِ: فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ،

وَقَفَهُ الْعَوَّامُ


Kubra-Nasaayi-10580

ஹதீஸின் தரம்: More Info

10580. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“அதிக நன்மைகள் தரும்) நற்செயல்கள் அதிகம் உள்ளன. அதை அறிந்துவைத்திருப்பவர்கள் குறைவானவர்களே!

அவைகள், ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்லாஹு அக்பர் 10-தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகைக்கு பின் நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

(தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்?” என கேட்டார்கள்.


«خَيْرٌ كَثِيرٌ مَنْ يَعْلَمُهُ قَلِيلٌ، دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ عَشْرَ تَكْبِيرَاتٍ، وَعَشْرَ تَسْبِيحَاتٍ، وَعَشْرَ تَحْمِيدَاتٍ، فَذَلِكَ مِائَةٌ وَخَمْسُونَ بِاللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا وَضَعَ جَنْبَهُ سَبَّحَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ اللهَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ سَيِّئَةٍ؟»


Kubra-Nasaayi-1272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1272. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே!

அவ்விரண்டில் முதல் நற்செயல் அவர் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்.

மேலும் (அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல்) அவர் (தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும்,  அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) 

«خُلَّتَانِ لَا يُحْصِيهُمَا رَجُلٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلْ بِهِمَا قَلِيلٌ»، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ يُسَبِّحُ اللهَ أَحَدُكُمْ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، فَهِيَ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٌ فِي الْمِيزَانِ»، فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهُنَّ بِيَدِهِ، «فَإِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ أَوْ مَضْجَعِهِ سَبَّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَهِيَ مِائَةٌ عَلَى اللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ»، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَيُّكُمْ يَعْمَلُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ بِأَلْفَيْنِ وَخَمْسُمِائَةِ سَيِّئَةٍ» قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ لَا نُحْصِيهُمَا؟، قَالَ: ” إِنَّ الشَّيْطَانَ يَأْتِي أَحَدَكُمْ وَهُوَ فِي صَلَاتِهِ،: فَيَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ فَيُنِيمُهُ


Kubra-Nasaayi-1280

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1280. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَعْقِدُ التَّسْبِيحَ»


Kubra-Nasaayi-9380

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9380. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு பெண்மனி வந்து அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காப்புகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள்.

அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த தங்க கழுத்தணியை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நெருப்பாலான கழுத்தணியை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அடுத்து அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! இந்த இரு தங்க காதணிகளை அணியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நெருப்பாலான இரு காதணிகளை நீ அணிந்துக் கொள்வாயா? என்று கூறினார்கள். அந்த பெண்மணி தான் அணிந்திருந்த இரு தங்கக் காப்புகளையும் கழட்டி எறிந்துவிட்டார்.

மேலும் அந்த பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் அலங்காரம் செய்யாமல்  இருந்தால் கணவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லையே என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வெள்ளியினால் இரு காதணி செய்து அதற்கு  குங்குமப்பூ அல்லது அபீர் மூலம் தங்கத்தை போன்ற நிறமிட்டு அணிவதை யாரும் தடுக்கவில்லையே என்று கூறினார்கள்.

மேற்கண்ட வாசகம் அஹ்மத் நூலில் உள்ள வாசகமாகும்.


كُنْتُ قَاعِدًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ قَالَ: «سِوَارَيْنِ مِنْ نَارٍ» قَالَتْ: يَا رَسُولَ اللهِ، طَوْقٌ مِنْ ذَهَبٍ قَالَ: «طَوْقٌ مِنْ نَارٍ» قَالَتْ: قُرْطَيْنِ مِنْ ذَهَبٍ قَالَ: «قُرْطَيْنِ مِنْ نَارٍ» قَالَ: وَكَانَ عَلَيْهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَرَمَتْ بِهِمَا وَقَالَتْ: يَا رَسُولَ اللهِ: «إِنَّ الْمَرْأَةَ إِذَا لَمْ تَزَيَّنْ لِزَوْجِهَا صَلِفَتْ عِنْدَهُ» قَالَ: «مَا يَمْنَعُ إِحْدَاكُنَّ أَنْ تَصْنَعَ قُرْطَيْنِ مِنْ فِضَّةٍ، ثُمَّ تُصَفِّرُهُ بِزَعْفَرَانٍ، أَوْ بِعَبِيرٍ»

اللَّفْظُ لِأَحْمَدَ


Kubra-Nasaayi-9378

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9378. ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஹுபைரா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் கையில் வைத்திருந்தவராக வந்தார். அப்பெண்னின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறையிட்டாள்.உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார்.

பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள்.

உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையை கடையில் விற்றுவிட்டு வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்.


جَاءَتِ ابْنَةُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ، قَالَ: «كَذَا فِي كِتَابِ أَبِي، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَيْهَا، فَدَخَلَتْ عَلَيَّ فَاطِمَةُ تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ» قَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو حُسْنٍ فَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا، فَقَالَ: يَا فَاطِمَةُ «أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللهِ، وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ؟، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا، وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلَامًا» وَقَالَ مَرَّةً أُخْرَى: عَبْدًا وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ، فَحُدِّثَ بِذَلِكَ وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّى فَاطِمَةَ مِنَ النَّارِ»


Next Page » « Previous Page