15184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரதிவாதியிடம் ஆதாரம் இல்லையென்றால் சத்தியம் செய்வதே அவரின் கடமையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«الْمُدَّعَى عَلَيْهِ أَوْلَى بِالْيَمِينِ إِذَا لَمْ تَكُنْ بَيِّنَةٌ»
Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq
15184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரதிவாதியிடம் ஆதாரம் இல்லையென்றால் சத்தியம் செய்வதே அவரின் கடமையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«الْمُدَّعَى عَلَيْهِ أَوْلَى بِالْيَمِينِ إِذَا لَمْ تَكُنْ بَيِّنَةٌ»
2560. அல்ஹைஸம் பின் ஹனஷ் அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார். அவருக்கு அருகில் நின்று தொழுதார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா; வல்ஹம்து லில்லாஹி கஸீரா; வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா; அல்லாஹும்மஜ்அல்க அஹப்ப ஷைஇன் இலைக; வ அஹ்ஸன ஷைஇன் இன்தீ ”
(பொருள்; அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்; அல்லாஹ்வே! எல்லாவற்றையும் விட உன்னையே எனக்கு பிரியமானதாக ஆக்கு; என்னிடத்தில் அழகானதாக ஆக்கு) என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)
أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ وَصَلَّى مَعَهُ إِلَى جَنْبِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ اجْعَلْكَ أَحَبَّ شَيْءٍ إِلَيَّ وَأَحْسَنَ شَيْءٍ عِنْدِي»
2559. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் தொழுகையில் இருக்கும்போது ஒருவர் தொழுகையின் வரிசையில் சேர்ந்து “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபின் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், நான்தான் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அதனால் நன்மையைத் தான் நாடினேன் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.
மேலும் இப்னு உமர் (ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.
أَتَى رَجُلٌ وَالنَّاسُ فِي الصَّلَاةِ، فَقَالَ حِينَ وَصَلَ إِلَى الصَّفِّ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ للَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَاتِ؟»، قَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا أَرَدْتُ بِهِنَّ إِلَّا الْخَيْرَ قَالَ: «لَقَدْ رَأَيْتُ أَبْوَابَ السَّمَاءِ فُتِحَتْ لَهُنَّ»
قَالَ ابْنُ عُمَرَ: «فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ»
8874. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானத்தில் உள்ள அல்பைதுல் மஃமூருக்கு “அள்ளுராக்” என்று கூறப்படும். மேலும் அது பைதுல் ஹராம் என்ற கஅபாவிற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும். மேலும் ஒவ்வொரு நாளும் அதில் இதற்குமுன் யாரும் பார்த்திராத எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். மேலும் ஏழாவது வானத்திற்கு (மக்காவிற்கு புனித எல்லை இருப்பது போன்று) அதற்கேற்ற அளவு புனித எல்லை உள்ளது.
அறிவிப்பவர்: குரைப் (ரஹ்)
«الْبَيْتُ الْمَعْمُورُ الَّذِي فِي السَّمَاءِ يُقَالُ لَهُ الضّرَاحُ وَهُوَ عَلَى الْبَيْتِ الْحَرَامِ، لَوْ سَقَطَ سَقَطَ عَلَيْهِ يَعْمُرُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَمْ يَرَوْهُ قَطُّ، وَإِنَّ فِي السَّمَاءِ السَّابِعَةِ لَحَرَمًا عَلَى قَدْرِ حَرَمِهِ»
18659. ஹதீஸ் எண்-18658 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “இரு பிரிவினரில் அல்லாஹ்விற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
«يَقْتُلُهَا أَقْرَبُ الطَّائِفَتَيْنِ إِلَى اللَّهِ»
18658. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு பெரும்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.
மேலும் அவ்விரண்டு குழுவினர்களுக்கிடையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்றும் தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ , دَعْوَاهُمَا وَاحِدَةٌ , تَمْرُقُ بَيْنَهُمَا مَارِقَةٌ يَقْتُلُهَا أَوْلَى الطَّائِفَتَيْنِ بِالْحَقِّ»
9559. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஒன்பது பரிசுகள் கிடைக்கும்.
1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
2 . சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் காண்பார்.
3 . ஈமான் என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.
4 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.
5 . அவருக்கு சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.
6 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.
7 . அவரின் தலைக்கு மதிப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்படும். அதில் உள்ள ஒரு மாணிக்கக்கல் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் சிறந்ததாக இருக்கும்.
8 . அவருக்கு 72 சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.
9 . அவரின் உறவினர்களில் எழுபது பேருக்கு அவர் செய்யும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்.
அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் ஒன்பது என்ற எண்ணிக்கையை யூகமாக அறிவிக்கிறார்.
«إِنَّ لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ تِسْعَ خِصَالٍ – أَنَا أَشُكُّ – يَغْفِرُ اللَّهُ ذَنْبَهُ فِي أَوَّلِ دُفْعَةٍ مِنْ دَمِهِ، ويُرَى مِقْعَدُهُ مِنَ الْجَنَّةِ، وَيُحَلَّى بِحِلْيَةِ الْإِيمَانِ، وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُؤَمَّنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ، كُلُّ يَاقُوتَةٍ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ ثِنْتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنْ حُورِ الْعِينِ، وَيَشْفَعُ فِي سَبْعِينَ إِنْسَانًا مِنْ أَقَارِبِهِ»
21453. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சில கிராமவாசிகள் வந்து, இப்னு அப்பாஸ் அவர்களே! நாங்கள் தொழுகின்றோம்; ஸகாத் வழங்குகின்றோம்; ஹஜ் செய்கின்றோம்; ரமலான் மாதம் நோன்பு வைக்கின்றோம். ஆனால் முஹாஜிர் நபித்தோழர்களில் சிலர் எங்களைப் பார்த்து, “நீங்கள் எதிலும் இல்லை” என்று கூறுகின்றனர் என முறையிட்டனர்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அய்ஸார் பின் ஹுரைஸ் (ரஹ்)
أَنَّ ابْنَ عَبَّاسٍ أَتَاهُ الأَعْرَابُ فَقَالُوا: إِنَّا نُقِيمُ الصَّلاَةَ، وَنُؤتِي الزَّكَاةَ، وَنَحُجُّ الْبَيْتَ، وَنَصُومُ رَمَضَانَ، وَإِنَّ نَاسًا مِنَ المُهَاجِرِينَ يَقُولُونَ: لَسْنَا عَلَى شَيْءٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَنْ أَقَامَ الصَّلاَةَ، وَآتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ، دَخَلَ الْجَنَّةَ.
20737.
إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ: بِسْمِ اللهِ، قَالَ لَهُ المَلَكُ: هُدِيتَ. وَإِذَا قَالَ: تَوَكَّلْتُ عَلَى اللهِ، قَالَ لَهُ المَلَكُ: كُفِيتَ، وَإِذَا قَالَ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ باللهِ. قَالَ المَلَكُ: وُقِيتَ. قَالَ: فتَتَفَرَّقُ الشَّيَاطِينُ، فَتَقُولُ: لاَ سَبِيلَ لَكُمْ إِلَيْهِ، إِنَّهُ قَدْ هُدِيَ، وَكُفِيَ، وَوُقِيَ.
1821.
كُنْتُ أُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْفَجْرِ فَأَقُولُ: إِذَا قُلْتُ فِي الْأَذَانِ الْأَوَّلِ: حَيَّ عَلَى الْفَلَاحِ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
சமீப விமர்சனங்கள்