33038. ஸல்மான் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; மற்றொரு மனிதர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:
இரு மனிதர்கள் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றனர். அக்கூட்டத்தினர் தங்களுக்கென ஒரு சிலையினை வைத்து (அதனை வணங்கி) அதில் மூழ்கிப் போயிருந்தனர். ‘இன்று எம்மை எவர் கடந்து சென்றாலும் (இந்தச் சிலைக்கு) ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்காமல் செல்லக்கூடாது’ என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிக்கொண்டனர்.
அவர்கள் அவ்விருவரில் ஒருவரிடம், ‘ஏதாவது ஒன்றை (சிலைக்கு) அர்ப்பணிப்பீராக!’ என்று கூறினர். அவர் (அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எதையும் அர்ப்பணிக்க) மறுத்துவிட்டார். அதனால் அவர் கொல்லப்பட்டார். (அவர் சொர்க்கம் சென்றார்).
பின்னர் அவர்கள் மற்றொருவரிடம், ‘நீரும் ஏதாவது ஒன்றை அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லையே’ என்றார். அவர்கள், ‘ஓர் ஈயையேனும் அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘ஒரு ஈதானே, இதில் என்ன இருக்கப் போகிறது’ என்று கூறி, ஓர் ஈயை அர்ப்பணித்தார். (இதன் காரணமாக) அவர் நரகில் நுழைந்தார்.”
அப்போது ஸல்மான் (ரலி) அவர்கள், “இவர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; அவர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்”
«دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ وَدَخَلَ رَجُلٌ النَّارَ، مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ قَدْ عَكَفُوا عَلَى صَنَمٍ لَهُمْ» وَقَالُوا: لَا يَمُرُّ عَلَيْنَا الْيَوْمَ أَحَدٌ إِلَّا قَدَّمَ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَدِّمْ شَيْئًا، فَأَبَى فَقُتِلَ، وَقَالُوا لِلْآخَرِ: قَدِّمْ شَيْئًا، فَقَالُوا: قَدِّمْ وَلَوْ ذُبَابًا، فَقَالَ: وَأَيْشٍ ذُبَابٌ، فَقَدَّمَ ذُبَابًا فَدَخَلَ النَّارَ، فَقَالَ سَلْمَانُ: «فَهَذَا دَخَلَ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ هَذَا النَّارَ فِي ذُبَابٍ»
சமீப விமர்சனங்கள்