Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-7935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7935. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»


Musannaf-Ibn-Abi-Shaybah-18329

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18329. ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவள் தலாக் கூறப்பட்டவளாக ஆகமாட்டாள்.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


إِذَا قَالَ الرَّجُلُ لاِمْرَأَتِهِ : أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ ، فَلَيْسَتْ بِطَالِقٍ ، وَإِذا قَالَ لِعَبْدِهِ : أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ ، فَهُوَ حُرٌّ


Musannaf-Ibn-Abi-Shaybah-19194

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19194. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது, விவாகரத்தை விட வேறு எதுவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹாரிப் பின் திஸார் (ரஹ்)


«لَيْسَ شَيْءٌ مِمَّا أَحَلَّ اللَّهُ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19193.


تَزَوَّجَ رَجُلٌ وَامْرَأَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَلَّقَهَا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَّقْتَهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «مِنْ بَأْسٍ؟» قَالَ: لَا يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ تَزَوَّجَ أُخْرَى، ثُمَّ طَلَّقَهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَّقْتَهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «مِنْ بَأْسٍ؟» قَالَ: لَا يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ تَزَوَّجَ أُخْرَى، ثُمَّ طَلَّقَهَا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطَلَّقْتَهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «مِنْ بَأْسٍ؟» قَالَ: لَا يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الثَّالِثَةِ: «إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ ذَوَّاقٍ مِنَ الرِّجَالِ، وَلَا كُلَّ ذَوَّاقَةٍ مِنَ النِّسَاءِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-36592

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

36592. (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.

அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)


ادْنُهُ , فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ , قَالَ: فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا فِي ظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-32245

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

32245. (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.

அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)


جَاءَ خَبَّابٌ، إِلَى عُمَرَ، فَقَالَ: «ادْنُهُ فَمَا أَحَدٌ أَحَقُّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-31694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

31694. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் அவர்கள், இந்த செய்தியை மற்றொரு தடவை அறிவிக்கும்போது இதில் வரும் “சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான கருவூலங்கள் என்பதற்கு விளக்கம் ரோம், பாரசீக ஆட்சி என்று கூறினார் என ஹம்மாத் கூறினார்).

நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன்.

என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள

«إِنَّ اللَّهَ زَوَى لِي الْأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا , وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا , وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ» قَالَ حَمَّادٌ: وَسَمِعْتُهُ مَرَّةً وَاحِدَةً يَقُولُ: ” فَأَوَّلْتُهَا مُلْكَ فَارِسٍ وَالرُّومِ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ , وَلَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ , يَسْتَبِيحُ بَيْضَتَهُمْ , وَإِنَّ رَبِّي قَالَ: يَا مُحَمَّدُ , إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ , وَإِنِّي أُعْطِيكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ , وَلَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ يَسْتَبِيحُ بَيْضَتَهُمْ , وَلَوْ أَجْمَعَ عَلَيْهِمْ مِنْ بَيْنِ أَقْطَارِهَا أَوْ قَالَ: مِنْ أَقْطَارِهَا


Musannaf-Ibn-Abi-Shaybah-3620

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3620. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவை ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறை உடையதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ»


Next Page » « Previous Page