Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-24551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24551. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25951

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

நரைமுடியை நீக்குவது.

25951. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ: «هُوَ نُورُ الْمُؤْمِنِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-2441

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2441.


أَلَا أُرِيكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا مَرَّةً»


Musannaf-Ibn-Abi-Shaybah-35262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

35262. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஅய்யூப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்ட ஒரு செயலை உனக்கும் கட்டளையிடவா? என்று கூறிவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவதாகும். ஏனெனில். அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம்“ என்று கூறினார்கள்.


لَقِيتُ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، فَقَالَ لِي: «أَلَا آمُرُكَ بِمَا أَمَرَنِي بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ أُكْثِرَ مِنْ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَإِنَّهُ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9765

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9765.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُكَ تَصُومُ فِي شَعْبَانَ صَوْمًا لَا تَصُومُ فِي شَيْءٍ مِنَ الشُّهُورِ، إِلَّا فِي شَهْرِ رَمَضَانَ؟ قَالَ: «ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ، وَشَهْرِ رَمَضَانَ، تُرْفَعُ فِيهِ أَعْمَالُ النَّاسِ، فَأُحِبُّ أَنْ لَا يُرْفَعَ لِي عَمَلٌ، إِلَّا وَأَنَا صَائِمٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-34612

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

34612. பள்ளிவாசல்களுக்கு அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். அவர்களின் சபைத்தோழர்களாக வானவர்கள் இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹாஸிம் (ரஹ்)


«إِنَّ لِلْمَسَاجِدِ مِنْ عِبَادِ اللَّهِ أَوْتَادًا، جُلَسَاؤُهُمُ الْمَلَائِكَةُ، فَإِنْ فَقَدُوهُمْ سَأَلُوا عَنْهُمْ، فَإِنْ كَانُوا مَرْضَى عَادُوهُمْ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29621

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29621. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ ஸூஇ இகாபிஹீ, வ ஷர்ரி இபாதிஹீ, வமின் ஷர்ரிஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் கெட்ட தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் தீமையை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا فَزِعَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَسُوءِ عِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ شَرِّ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ


Musannaf-Ibn-Abi-Shaybah-23604

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், “பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ ஷர்ரி இகாபிஹீ, வஷர்ரி இபாதிஹீ, வஷர்ரிஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தீய தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் தீமையை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي مَنَامِهِ فَلْيَقُلْ «بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَشَرِّ عِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَشَرِّ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»


Next Page » « Previous Page