ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
5633. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், அரஃபா நாளின் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து (நஹ்ர் நாள் எனும்) துல்ஹஜ் 10 ஆம் நாளின் அஸர் தொழுகை வரை “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து” என்று தக்பீர் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)
كَانَ عَبْدُ اللَّهِ، يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ، إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنَ النَّحْرِ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ»
சமீப விமர்சனங்கள்