Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-30457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

30457. தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனால் மக்கள் கவலையடைந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது). அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ النُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ وَالرِّسَالَةُ»، فَخَرَجَ النَّاسُ فَقَالَ: «قَدْ بَقِيَتْ مُبَشِّرَاتٌ وَهِيَ جُزْءٌ مِنَ النُّبُوَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-30360

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் தோன்றினால் என்ன கூறவேண்டும்?

30360. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள்! (அதனால் ஷைத்தான் வெருண்டோடி விடுவான்).

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


إذَا تَغَوَّلَتْ لكُمُ الْغِيلانُ فَنَادُوا بِالأَذَانِ.


Musannaf-Ibn-Abi-Shaybah-26352

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

26352. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (பயணம் செல்லும் போது) பாதையின் நடுப்பகுதியில் இரவில் ஓய்வெடுக்க வேண்டாம்! மேலும் உங்களின் இயற்கைத் தேவைகளை அதில் நிறைவேற்ற வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«لَا تَنْزِلُوا عَلَى جَوَادِّ الطَّرِيقِ، وَلَا تَقْضُوا عَلَيْهَا الْحَاجَاتِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-7746

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (பயணம் செல்லும் போது) பாதையின் நடுப்பகுதியில் தொழவேண்டாம்! மேலும் அதில் இரவில் ஓய்வெடுக்கவும் வேண்டாம்! ஏனெனில் அதுதான் பாம்புகளும், வனவிலங்குகளும் ஒதுங்குமிடமாகவும், வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«لَا تُصَلُّوا عَلَى جَوَادِّ الطَّرِيقِ، وَلَا تَنْزِلُوا عَلَيْهَا، فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25310

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25310.


«إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَيْهِ، وَيُعِينُ عَلَيْهِ مَا لَا يُعِينُ عَلَى الْعُنْفِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3733

ஹதீஸின் தரம்: More Info

3733. அபூபக்ர் (ரலி) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


أَنَّ أَبَا بَكْرٍ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ.


Musannaf-Ibn-Abi-Shaybah-3712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3712. நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்” அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூ அய்யூப் (ரலி), அல்லது ஸைத் பின் ஸாபித் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ»


Next Page » « Previous Page