Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-3591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3591. நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்” அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஸைத் பின் ஸாபித் (ரலி), அபூ அய்யூப் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِ الْأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ جَمِيعًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-143

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

143. நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (முதல்) இரண்டு ரக்அத்துகளிலும் ‘‘அல் அஃராப்” அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூ அய்யூப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ فِي رَكْعَتَيْنِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-37375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

37375. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது தோழர்களுடன்) ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றபோது “தாத் அன்வாத்‘ என்று சொல்லப்பட்ட, இணை வைப்பவர்களுக்கென்று இருந்த ஒரு இலந்தை மரத்தை கடந்து சென்றார்கள். அவர்கள் (பரக்கத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளை அதில் தொங்கவிட்டு கொள்வர்.

அதைக் கண்ட நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத் அன்வாத்‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்டார்கள்.(அல்குர்ஆன் 7:138) இதைப் போலவே, நீங்களும் கேட்கிறீர்கள்.) என்று கூறிவிட்டு,

“என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னுள்ளவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கித் அல்லைஸி (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَتَى حُنَيْنًا مَرَّ بِشَجَرَةٍ يُعَلِّقُ الْمُشْرِكُونَ بِهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهُ , ذَاتُ أَنْوَاطٍ فَقَالُوا: اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى لِمُوسَى: {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةً} [الأعراف: 138] , لَتَرْكَبُنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-33010

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

33010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன், (தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு) வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) அல்லாஹ் என்னை அனுப்பினான்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வத்தை என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும் ஜிஸ்யா-காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்…

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)


«إِنَّ اللَّهَ بَعَثَنِي بِالسَّيْفِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ، وَجَعَلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي، وَجَعَلَ الذُّلَّ وَالصَّغَارَ عَلَى مَنْ خَالَفَنِي، وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»،


Musannaf-Ibn-Abi-Shaybah-19437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன், (தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு) வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) அல்லாஹ் என்னை அனுப்பினான்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வத்தை என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும் ஜிஸ்யா-காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்…

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)


إِنَّ اللَّهَ بَعَثَنِي بِالسَّيْفِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ , وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي وَجُعِلَ الذُّلُّ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَنِي وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-33016

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

33016. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«إِنَّ اللَّهَ جَعَلَ رِزْقِي تَحْتَ رُمْحِي وَجَعَلَ الذِّلَّةَ وَالصَّغَارَ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي، مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19401

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

19401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்கப்படாமல் அவனை மட்டுமே வணங்கப்படவேண்டும் என்பதற்கு வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) நான் அனுப்பப்பட்டுவிட்டேன்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


بُعِثْتُ بَيْنَ يَدَيِ السَّاعَةِ بِالسَّيْفِ حَتَّى يُعْبَدَ اللَّهُ وَحْدَهُ لَا يُشْرَكَ بِهِ شَيْءٌ وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي وَجُعِلَ الذِّلَّةُ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي , وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ


Musannaf-Ibn-Abi-Shaybah-28

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

28. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-15

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15. உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمِنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمِنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Next Page » « Previous Page