Category: முஸ்லிம்

Muslim-3588

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3588. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடைவிதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32


«وُجِدَتِ امْرَأَةٌ مَقْتُولَةً فِي بَعْضِ تِلْكَ الْمَغَازِي، فَنَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالصِّبْيَانِ»


Muslim-3587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

போரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

3587. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 32


«أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ»


Muslim-3586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3586. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுதுப் போர் நாளில் “இறைவா! நீ (இந்த முஸ்லிம் படையை அழிக்க) நாடினால் (இனி) உன்னை மட்டுமே வழிபடுவோர் யாரும் இப்புவியில் இருக்கமாட்டார்கள்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.

Book : 32


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ يَوْمَ أُحُدٍ: «اللهُمَّ، إِنَّكَ إِنْ تَشَأْ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ»


Muslim-3585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3585. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) பிரார்த்தித்தார்கள்” என்றே ஹதீஸ் ஆரம்பமாகி, அதிலுள்ள மற்ற விவரங்கள் இடம் பெறுகின்றன.

“(இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக எனும் இடத்தில்) கூட்டுப்படையினரைத் தோற்கடிப்பவனே!” என்று இடம் பெற்றுள்ளது. இறுதியில் இடம்பெற்றுள்ள “இறைவா!” எனும் சொல் இடம்பெறவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “மேகத்தை நகர்த்துபவனே!” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 32


دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ خَالِدٍ، غَيْرَ أَنَّهُ قَالَ: «هَازِمَ الْأَحْزَابِ»، وَلَمْ يَذْكُرْ قَوْلَهُ: «اللهُمَّ»

– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ إِسْمَاعِيلَ، بِهَذَا الْإِسْنَادِ، وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي رِوَايَتِهِ: «مُجْرِيَ السَّحَابِ»


Muslim-3584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

எதிரிகளைச் சந்திக்கும்போது இறையுதவி வேண்டிப் பிரார்த்திப்பது விரும்பத் தக்கதாகும்.

3584. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) கூட்டுப் படையினருக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, “இறைவா! வேதத்தை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்பவனே! இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து, நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

Book : 32


دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْأَحْزَابِ، فَقَالَ: «اللهُمَّ، مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الْأَحْزَابَ، اللهُمَّ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»


Muslim-3583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3583. அபுந்நள்ர் சாலிம் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் முன்னாள் உரிமையாளர்) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு, அவர்கள் ஹரூரிய்யாக்களை (காரிஜிய்யாக்கள்) நோக்கிப் போருக்குச் சென்றபோது அஸ்லம் குலத்தைச் சேர்ந்த நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த நாட்களில் ஒன்றில் (நண்பகல் நேரம்வரை) காத்திருந்தார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததும் மக்களிடையே நின்று, “மக்களே! எதிரிகளை(ப் போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். அவ்வாறு எதிரிகளைச் சந்திக்க நேர்ந்துவிட்டால், (போரின் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல்) பொறுமையாக இருங்கள். அறிந்துகொள்ளுங்கள்: (அநீதிக்கெதிராக உயர்த்தப்படும்) வாட்களின் நிழலிலில் தான் சொர்க்கம் உள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு,

عَنْ كِتَابِ رَجُلٍ مِنْ أَسْلَمَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهُ: عَبْدُ اللهِ بْنُ أَبِي أَوْفَى، فَكَتَبَ إِلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ حِينَ سَارَ إِلَى الْحَرُورِيَّةِ، يُخْبِرُهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ، يَنْتَظِرُ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهِمْ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَاسْأَلُوا اللهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ»، ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «اللهُمَّ، مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْأَحْزَابِ، اهْزِمْهُمْ، وَانْصُرْنَا عَلَيْهِمْ»


Muslim-3582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கதாகும் என்பதும், அவ்வாறு சந்திக்க நேர்ந்தால் (நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருக்குமாறு வந்துள்ள கட்டளையும்.

3582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால், (போரின் துன்பங்களைக் கண்டு நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32


«لَا تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا»


Muslim-3581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 32


«الْحَرْبُ خَدْعَةٌ»


Muslim-3580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

போரின்போது சூழ்ச்சி செய்வது அனுமதிக்கப்பட்டதே.

3580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 32


«الْحَرْبُ خَدْعَةٌ»


Muslim-3579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்து கொள்ளுங்கள்: பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனைவிட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 32


«لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ، أَلَا وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ»


Next Page » « Previous Page