Category: முஸ்லிம்

Muslim-3528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3528. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைச் செவியுற்றார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதனடிப்படையில் அவர் உண்மை சொல்வதாக எண்ணி அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அந்தரங்கத்தை அறியாமல் வெளிப்படையான வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிக்கொள்ள வேண்டாம்.) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் (என்பதை நினைவில் கொண்டு, விரும்பினால்) அதை அவர் எடுத்துச் செல்லட்டும். (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.

Book : 30


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ جَلَبَةَ خَصْمٍ بِبَابِ حُجْرَتِهِ، فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ، فَلَعَلَّ بَعْضَهُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَادِقٌ، فَأَقْضِي لَهُ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ، فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَحْمِلْهَا أَوْ يَذَرْهَا»


Muslim-3527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

வெளிப்படையான நிலையையும் சாதுரியமாக ஆதாரம் காட்டுவதையும் வைத்துத் தீர்ப்பளித்தல்.

3527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மக்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கக்கூடும். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான வாதத்)துக்கு ஏற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அதனால் அவர் அடையும் ஆதாயம் அவருக்கு அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிட வேண்டாம்.)

எனவே, யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை அவருக்குரியது என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்து விடுகிறேனோ, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் (நரக) நெருப்பின் ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன்.

இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

«إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَأَقْضِيَ لَهُ عَلَى نَحْوٍ مِمَّا أَسْمَعُ مِنْهُ، فَمَنْ قَطَعْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلَا يَأْخُذْهُ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ بِهِ قِطْعَةً مِنَ النَّارِ»

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، كِلَاهُمَا عَنْ هِشَامٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ