Category: முஸ்லிம்

Muslim-3477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3477. மிஸ்வர் பின் அல்மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப்பிரசவம் (கருச்சிதைவு) ஏற்படவைத்தால், (அதற்குரிய இழப்பீடு) என்ன என்பது தொடர்பாக (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்களிடம் கருத்துக் கேட்டார்கள். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவிற்காக (இழப்பீடாக) வழங்குமாறு தீர்ப்பளித்தபோது நான் அங்கு இருந்தேன்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிக்கும் ஒருவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (முஃகீரா (ரலி) அவர்கள் கூறியது உண்மையென) அதற்குச் சாட்சியம் அளித்தார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 28


اسْتَشَارَ عُمَرُ بْنُ الْخَطَّابِ النَّاسَ فِي إِمْلَاصِ الْمَرْأَةِ، فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ: «شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِيهِ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ»، قَالَ: فَقَالَ عُمَرُ: ائْتِنِي بِمَنْ يَشْهَدُ مَعَكَ، قَالَ: فَشَهِدَ مُحَمَّدُ بْنُ مَسْلمَةَ


Muslim-3476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3476. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். இது தொடர்பான வழக்கிற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் கொல்லப்பட்டவளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென்றும், கொல்லப்பட்டவள் கர்ப்பிணியாக இருந்தபடியால் கொல்லப்பட்ட அவளது சிசுவிற்காக ஓர் அடிமையை வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் சிலர், “உண்ணவோ பருகவோ வீறிட்டழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் இழப்பீடு செலுத்த வேண்டுமா? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?”என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகைமோனையா?” என்று (கடிந்து) பேசினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

أَنَّ امْرَأَةً قَتَلَتْ ضَرَّتَهَا بِعَمُودِ فُسْطَاطٍ، فَأُتِيَ فِيهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى عَلَى عَاقِلَتِهَا بِالدِّيَةِ، وَكَانَتْ حَامِلًا، فَقَضَى فِي الْجَنِينِ بِغُرَّةٍ، فَقَالَ بَعْضُ عَصَبَتِهَا: أَنَدِي مَنْ لَا طَعِمَ، وَلَا شَرِبَ، وَلَا صَاحَ فَاسْتَهَلَّ، وَمِثْلُ ذَلِكَ يُطَلُّ، قَالَ، فَقَالَ: «سَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ»

– حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ مَعْنَى حَدِيثِ جَرِيرٍ، وَمُفَضَّلٍ

– وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، بِإِسْنَادِهِمِ الْحَدِيثَ بِقِصَّتِهِ، غَيْرَ أَنَّ فِيهِ، فَأَسْقَطَتْ فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى فِيهِ بِغُرَّةٍ، وَجَعَلَهُ عَلَى أَوْلِيَاءِ الْمَرْأَةِ، وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ دِيَةَ الْمَرْأَةِ