பாடம் : 14
நோன்பாளி ரமளான் பகலில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; அவ்வாறு ஈடுபட்டால் அதற்காகப் பெரிய பரிகாரம் செய்வது கடமையாகும் என்பதன் விளக்கம்; ஏழை, செல்வர் அனைவர்மீதும் அந்தப் பரிகாரம் கடமையாகும். ஆனால், ஏழைக்கு வசதி வரும்வரை அவகாசம் உண்டு.
2036. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது அழிவுக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். “நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலைசெய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “தொடர்ந்து இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَكْتُ، يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَمَا أَهْلَكَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، قَالَ: «هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً؟» قَالَ: لَا، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟» قَالَ: لَا، قَالَ: «فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا؟» قَالَ: لَا، قَالَ: ثُمَّ جَلَسَ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «تَصَدَّقْ بِهَذَا» قَالَ: أَفْقَرَ مِنَّا؟ فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ» – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ رِوَايَةِ ابْنِ عُيَيْنَةَ، وَقَالَ: بِعَرَقٍ فِيهِ تَمْرٌ وَهُوَ الزِّنْبِيلُ وَلَمْ يَذْكُرْ: فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ
சமீப விமர்சனங்கள்